India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றி வந்த ஆனிமேரி ஸ்வர்ணா பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார். இந்நிலையில் அவர் தமிழக அரசின் உள்துறை இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் பணியாற்றி உயர் பொறுப்பிற்கு சென்றுள்ள ஆனிமேரி ஸ்வர்ணாவிற்கு பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அரியலூர் ஆட்சியராக இருந்துவரும் ஆனி மேரி ஸ்வர்ணா மாற்றப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக சென்னை வணிகவரி இணை ஆணையராக இருந்துவரும் பி.ரத்தினசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று மதியம் 1 மணி வரை தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மதியம் 1 மணி வரை அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தந்தையின் 14-வது நினைவு நாளையொட்டி நேற்று அரியலூர் அருகே செந்துறை அடுத்த அங்கானூரிலுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, விசிக தலைவர் தொல். திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளி என சொல்லப்பட கூடியவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்.பொதுவாக என்கவுண்டர்,தூக்கு தண்டனை கூடாது என்பது தான் விசிகவின் நிலைப்பாடாகும் என்றார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் சர்வாணிகா செஸ் விளையாட்டில் பல்வேறு நாடுகளில் விளையாடி பரிசுகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளார். இந்நிலையில் செஸ் விளையாட்டில், FIDE ‘Women Candidate Master’ பட்டத்தை வென்றதை முன்னிட்டு, இன்று ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2023-2024 ஆம் ஆண்டு நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக காடுவெட்டி, பிள்ளைபாளையம், முட்டுவாஞ்சேரி, குழுமூர் மற்றும் தூத்தூர் ஆகிய இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 17-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாகவும், இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் மூலம் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார். உட்கோட்டை, வாரியங்காவல் இலந்தை கூடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் அரியலூர் தொடக்க கூட்டுறவு வங்கி சார்பில் சுய உதவி குழு கடன் தனிநபர் கடன், மாற்றுத்திறனாளி கடன் என 14 நபர்களுக்கு மொத்தம் ரூ.51.59 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
அரியலூர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார். இதில் மிஷன் வாட்சலயா திட்டத்தின் கீழ் தாய் தந்தை மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.4,000/- வீதம் 206 குழந்தைகளுக்கு மொத்த கூடுதலாக ரூ.47,76,000/- நிதி ஆதரவு திட்ட தொகையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
அரியலூர் மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 84 ஏரி-குளங்கள், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 883 ஏரி-குளங்கள் மண் எடுக்க தகுதி வாய்ந்ததாக கண்டறியப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. தனிநபரின் பொது பயன்பாட்டுக்கு வண்டல், களிமண் எடுக்க விரும்புவோர் https://www.tnesevai.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 75 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.