Ariyalur

News May 14, 2024

அரியலூர் : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 2ஆம் இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 92.59% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 90.38 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.94 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

அரியலூர் மாவட்டம் 5ஆம் இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 4,218 மாணவர்களும், 4,401 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில், மொத்தம் 8,185 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.89% தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 96.96% தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் 94.96% தேர்ச்சி பெற்று 5ஆம் இடத்தை பிடித்தது.

News May 14, 2024

அரியலூர் மழை நிலவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. அதன் விவரம் வருமாறு, அரியலூர் 2.மி.மீ, திருமானூர் 4.2 மி.மீ, ஆண்டிமடம் 2 மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 8.2 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது மற்ற இடங்களான தா.பழூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.

News May 13, 2024

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு 

image

ஆண்டிமடத்தில் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தல் ஆண்டிமடம், சிலுவைச்சேரி குடியிருப்பு பகுதிகளில் அரசின் நல திட்டங்களை பற்றி பெற்றோர்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ், தலைமையாசிரியை சசிகலா, ஆசிரியர் பயிற்றுனர் ரமேஷ், அந்தோணியம்மாள் உ. ஆ, அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News May 13, 2024

அரியலூர் மழைக்கு வாய்ப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

அரியலூர் அருகே பெரும் விபத்து

image

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் காலனி தெருவில் சாலை ஓரத்தில் அம்பிகா என்பவர் வீடு உள்ளது. இவரது வீட்டிக்குள் தேனி மாவட்டம் சந்திரன் என்பவர் ஒட்டி வந்த டேங்கர் லாரி புகுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அம்பிகா அவரது குழந்தைகளான ராஜேஷ், ரம்யா சுபாஷ் உள்ளிட்ட 4 பேரும் படுகாயமடைந்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

News May 12, 2024

அரியலூர் அருகே விபத்து: ஒருவர் பலி 

image

கரூர் தாந்தோணிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் தனியார் சிமெண்ட் ஆலைக்கு கரி ஏற்றிச்சென்று அதனை இறக்கி விட்டு அரியலூர் அருகே அமீனாபாத் சாலையில் லாரியை ஓரமாக நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியாக வேதாரண்யம் பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவர் ஓட்டி வந்த லாரி மோதியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 11, 2024

தா.பழூரில் இலவச சர்க்கரை நோய் முகாம்

image

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நாளை (மே 12) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. தா.பழூர் லயன்ஸ் சங்கம், குடந்தை காருண்யா சுகாலயா மருத்துவமனை, திருச்சி பேட் குழுமம் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். இம் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News May 11, 2024

வழி தவறிய சிறுவனை மீட்ட போலீஸ்

image

கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே உள்ள தேனாம்படுகை கிராமத்தை சேர்ந்த இளையராஜா காமாட்சி தம்பதி மகன் சூர்யா (9).  இவர் கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வரக்கூடிய தனியார் பேருந்து ஏறியுள்ளார்.  யாரும் இல்லாமல் தனியாக வந்த சிறுவனை நடத்துனர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பட்டீஸ்வரம் போலீசார் அளித்த தகவலின் படி சூர்யா உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

News May 11, 2024

அரியலூர்: நகர பேருந்து மோதி விபத்து

image

ஜெயங்கொண்டத்திலிருந்து செந்துறை நோக்கி சென்ற மாநகரப் பேருந்து வாரியங்காவல் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு புறப்பட்ட சிறிது நேரத்தில் எதிரே வந்த பொக்லைன் வாகனத்தில் நேருக்கு நேர் மோதி விபத்து நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்த சேதமும் இல்லை. சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!