India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம் தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ மனைவி கீதா(35) இவர் சம்பவத்தன்று உடையார்பாளையம் வார சந்தைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பின்னால் நடந்து வந்த நபர் கீதா கழுத்தில் அணிந்திருந்த 4¾ பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி அரியலூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டி உயர் படிப்பைத் வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணாக்கர்கள் https://overseas. tribal. gov. in/ மூலம் இணையவழியில் வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் நடக்கும் தினசரி நிகழ்வுகளை, செய்தியாக Way2news-ல் பதிவிட்டு வருமானம் ஈட்டுங்கள். பகுதி நேர வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. எங்கள் தொடர்பு எண்: 9642422022
அரியலூர் அண்ணா நகர் மெயின் ரோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். போக்குவரத்து நிறைந்த இந்த சாலையின் ஓரத்தில் கழிவுநீர் ஓடையில் அதிக அளவில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடமும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்றாம் இடமும், 11ம் வகுப்பு தேர்வில் 5 இடமும் பெற்று சாதனை புரிந்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு பல்வேறு வகையிலும் ஊக்கத்தை அளித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா வழங்கினார்.
உடையார்பாளையம் அருகே உள்ள நாயகனை பிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் அருள். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டி அச்சிறுமியை கர்ப்பமாக்கிய நிலையில் அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அவருக்கு 20 ஆண்டு கடுகாவல் தண்டனையும் ரூ.20000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அரியலூர் வன துறை அலுவலகத்தில் உயிரியல் பன்முகத்தன்மை தினத்தையொட்டி வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் வனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வனங்களின் பசுமைப் போர்வை தட்ப வெப்பநிலையை சீராக வைப்பதுடன் மழை பெய்ய முக்கிய காரணமாகவும் அமைகின்றது. எனவே நம்மால் இயன்ற அளவுக்கு உயிரியல் பன்முகத்தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும் என்றார்
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியினை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு 15.05.2024 வரை விண்ணப்பிக்க ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான கால அவகாசம் 31.05.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
செந்துறையில் பன்னாட்டு லயன் சங்கம் 324 ஜி மாவட்ட சேவை செம்மல்களுக்கு விருது வழங்கும் விழா குறித்த ஆலோசனை கூட்டம் இன்று பெண்ணாடம் ஸ்ரீ கிருஷ்ணா மஹாலில் மாவட்ட தலைவர் ஞானபிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆளுநர் கோபி கிருஷ்ணா, மாவட்ட தலைவர் ரத்தின சபாபதி, மாவட்ட தலைவர்கள் ஞானமூர்த்தி திருஞானசம்பந்தம் பழமழை உளிச்செல்வன் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்
அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவாசகன் . இவர் ஓசூர் தோட்டக்கிரி பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் இவர் ஈடுபட்டு 50 லட்சம் கடன் இருந்ததாக கூறி, மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.