India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர் (ம) சுத்தமல்லி ஆகிய 6 தாலுகாவில் சோள பயிருக்கும் மற்றும் அரியலூர், கீழப்பழூர், செந்துறை, நாகமங்கலம் உள்ளிட்ட 7 தாலுக்காவை சேர்ந்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட காவல்துறை இன்று மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரக்கூடிய எந்த ஒரு செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் கார்டு எண் உள்ளிட்டவற்றை பகிர வேண்டாம் எனவும், சந்தேக நபர்கள் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.4.05 லட்சம் பயிர் கடனுதவிகள் வழங்கப்பட்டது. இக்கூட்டம் ஆட்சியர் பொ.ரதினசாமி தலைமையில் நடைபெற்றது. மேலும் அவர் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 500 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மத்திய அரசின் முப்பெரும் சட்டத்தை கண்டித்து நேற்று விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் டெல்லியில் மாபெரும் போரட்டம் நடைப்பெற்றது. போராட்டத்தை முடித்துவிட்டு விசிக தலைவர் திருமாவளவனுடன், அரியலூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மனோகரன் தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு. சின்னப்பா முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விட்டதையெட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி செல்வராஜ் உள்ளிட்ட நீர்வளத்துறை வருவாய்த்துறை வேளாண்மை துறை உள்ளிட்ட பல்துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை வரும் 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆலோசனை மேற்கொண்டார். இவ்விழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துறை சார்ந்து ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர், தா.பழூரை ஒட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் செங்கமுத்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இந்த மனுவில், ” அரியலூர் மாவட்டத்தில் உள்ள 18 காவல் நிலையங்களில் எல்லைகளை மறு வரையறை செய்ய வேண்டும். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைகளை அதிகபட்சமாக ஐந்து கிலோ மீட்டருக்கு உட்பட்டதாக மாற்றுவதால் பொதுமக்களின் சிரமம் குறையும். காவலர்களும் தங்களது பாதுகாப்பு பணியை நன்றாக செய்ய முடியும்” என தெரிவித்துள்ளார்.
ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் ஊராட்சி, அரசு உயர்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. முகாமினை சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருளான லிங்கர் எனும் கனிமத்தை வெட்டி கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் உலகநாதன் மனு அளித்தார். அதில் அமீனாபாத், நல்லாம்பத்தை, காட்டுபிரிங்கியம், அருங்கால், கிராமங்களில் அதிக அளவு கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.