Ariyalur

News August 4, 2024

நட்புனா என்னனு தெரியுமா!

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 3, 2024

அரியலூரில் மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வெளியே செல்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 3, 2024

அரியலூரில் புகார் எண் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தை கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப் மூலம் 9384056231 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 2, 2024

அரியலூருக்கான பேரிடர் தொடர்பான புகார் எண்

image

அரியலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தை கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப் மூலம் 9384056231 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவிப்பு.

News August 2, 2024

அரியலூரில் ஆடி பதினெட்டை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி காவிரி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே நாளை நடைபெறும் ஆடிபெருக்கு திருவிழாவின்போது கொள்ளிடம் ஆற்றிற்கு செல்லும் பொதுமக்கள் போலீசார் மற்றும் வருவாய் துறையினரால் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களில் மட்டும் நீராட வேண்டும். உடன் அழைத்துச் செல்லும் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம்

image

அரியலூர் மாவட்ட வேளாண் பட்டதாரிகளுக்கு, மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மானியத்துடன், தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்படுமென ஆட்சியர் ரத்தினசாமி நேற்று தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் 21-40 வயதுள்ள, வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டதாரிகள் கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் நிதி உதவி பெறப்படும் என தெரிவித்தார்.

News August 2, 2024

ஆன்லைனில் ரூ.54 லட்சம் மோசடி

image

அரியலூர் மாவட்டம் இலுப்பையூரை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவரிடம் ஆன்லைனில் ரூ.54 லட்சம் மோசடி என புகார் வந்துள்ளது. முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் எனக் கூறி சிறுக சிறுக ரூ.54 லட்சம் வரை கொடுத்து கருணாமூர்த்தி ஏமாந்துள்ளார். பின்னர், கருணாமூர்த்தி அளித்த புகாரின் பேரில் அரியலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 2, 2024

அரியலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

image

ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில் ஆடி திருவாதிரை யான இன்று சோழப் பேரரசில் மாமன்னனாக விளங்கிய ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது இதனை ஒட்டி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்

News August 2, 2024

அரியலூர் ஆட்சியர் அறிவுரை

image

அரியலூர் மாவட்டத்தில் தற்போது 506 மெ.டன் சூப்பர் பாஸ்பேட் உரம் இருப்பில் உள்ளது. டிஏபி உரம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் தட்டுப்பாடு விலை உயர்வு காரணமாக டிஏபி உரம் கிடைப்பது தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம். இந்த உரத்தில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான மணிச்சத்து 16 சதவீதம் உள்ளது என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

அரியலூரில் அரசு சிமெண்ட் ஆலை ஆய்வு

image

அரியலூர் அருகே கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள அரசு சிமெண்ட் ஆலையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆலையின் செயல்பாடுகள், ஆலையின் உற்பத்தி திறன், பணியாளர்கள், பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

error: Content is protected !!