news

News April 6, 2025

ஆப்பிள் நிறுவனம் பெயரில் புதிய ஸ்கேம்

image

பிட்-காயின் புகழடைந்த பின் பல டிஜிட்டல் கரன்ஸிக்கள் முளைக்கத் தொடங்கின. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை முதலீட்டாளர்களின் பணத்தை வாரி சுருட்டிக் கொண்டு ஓடிய ஸ்கேமாகவே இருந்திருக்கின்றன. அந்த வரிசையில் iToken என்ற பெயரில் புதிய க்ரிப்டோ அறிமுகமாகியிருக்கிறது. ஆனால், இதற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. உஷாராக இருங்க மக்களே.

News April 6, 2025

தாய்மொழியை திணிப்பதாக தெலங்கானாவில் போராட்டம்!

image

சொந்த மொழியையே திணிப்பதாக குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்திய சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் பள்ளிகளில் தெலுங்கு மொழியை திணிப்பதாகக் கூறி சிபிஎஸ்இ மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். 2-வது மொழியாக இந்தி கற்று வருவதாகவும், தெலுங்கு வேண்டாம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். தனியார் பள்ளிகளில் தெலுங்கு மொழி கட்டாயம் என மாநில அரசு அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2025

சனிப்பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

image

சனிப்பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், மகரம், விருச்சிகம் ராசிகளுக்கு நன்மை அதிகரிக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றியும், சொத்துக்களும் சேரும். கடக ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பிற்கு ஏற்ற வருமானம், வெற்றி கிடைக்கும். புது வீடு மனை வாங்க வாய்ப்பு உண்டு. மகர ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமும், லாபமும் ஏற்படும். சொத்து வாங்கும் கனவு நனவாகும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய வேலை, சொத்து கிடைக்கும்.

News April 6, 2025

18 வயதுக்கு குறைந்த பெண் ரேப்.. தண்டனை தெரியுமா?

image

18 வயதுக்கும் குறைவான பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் அளிக்கப்படும் தண்டனை குறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 70(2)ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது. அந்த குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு அபராதத்துடன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அந்த சட்டப்பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2025

Recession என்றால் என்ன?

image

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பொருளாதார நடவடிக்கைகளால் அந்நாடு பொருளாதார மந்தநிலைக்கு (Recession) செல்லும் என்று அறிஞர்கள் கணிக்கின்றனர். அப்படி ஏற்பட்டால், உலகம் முழுவதும் பலரது வேலைவாய்ப்புகள் பறிபோகும், நிறுவனங்களின் லாபம் கணிசமாகக் குறையும், மக்களின் சேமிப்புகள் கரையும், தங்கம் & பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி அதிகரிக்கும், வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும். இதன் அறிகுறிகள் தெரிகிறதா?

News April 6, 2025

வக்பு வாரிய சட்டம் விரைவில் அரசிதழில் வெளியீடு: ஜோஷி

image

வக்பு வாரிய திருத்தச் சட்டம் விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அது விரைவில் அரசிதழில் வெளியிடப்பட இருப்பதாகவும், அப்படி வெளியிட்ட பிறகு அது அமலுக்கு வரும் என்றும் ஜோஷி கூறியுள்ளார். இந்த சட்டம், முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 6, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET தெரிவித்துள்ளது. மேலும், தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2025

வருகிறது ஜான் விக்-5.. ஆக்சன் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

image

ஜான் விக் பட சீரிஸில் இதுவரை 4 பாகங்கள் வெளியாகியுள்ளன. நாயைக் கொன்றோரை பழிதீர்க்கவும், தன்னை காக்கவும் நாயகன் பலரை கொல்வது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். 4-வது பாகம் நாயகன் கீனு ரீவ்ஸ் இறப்பது போன்று முடிக்கப்பட்ட நிலையில், தற்போது 5ஆவது பாகம் எடுக்கப்பட இருப்பதாகவும், இதிலும் கீனு ரீவ்ஸ்தான் நாயகன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஜான் விக் பார்த்துட்டிங்களா? கீழே கமெண்ட் பண்ணுங்க.

News April 6, 2025

பெண் சப் இன்ஸ்பெக்டர் உடலை வெட்டி வீசிய கொடூரம்

image

2016-ல் பெண் சப் இன்ஸ்பெக்டரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய இன்ஸ்பெக்டர் குற்றவாளி என கோர்ட் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இன்ஸ்பெக்டர் அபய் குருந்த்கர், தன்னுடன் நெருங்கி பழகிய சப் இன்ஸ்பெக்டர் பித்ரேவுடன் தகராறு ஏற்பட்டதால் அவரை கொலை செய்துள்ளார். மேலும், உடலை துண்டுதுண்டாக வெட்டி வீசியுள்ளார். பெண்ணின் தந்தை தொடர்ந்த வழக்கில், குருந்த்கர் குற்றவாளி என கோர்ட் அறிவித்துள்ளது.

News April 6, 2025

IPL: ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்

image

புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள GT அணியும், கடைசி இடத்தில் உள்ள SRH அணியும் சற்றுநேரத்தில் மல்லுக்கட்ட ரெடியாகியுள்ளன. நடப்பு சீசனில் GT 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது. SRH 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இதுவரை 5 போட்டிகளில் நேருக்குநேர் மோதி, 3-ல் GT அணியும் ஒன்றில் SRH அணியும் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டியில் முடிவில்லை. இன்று வெல்லப் போவது யார்?

error: Content is protected !!