India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் ஆட்சியை விட தமிழகத்திற்கு தற்போது 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியிருந்தார். அதனை விமர்சித்திருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார அளவுகோல் என்பது முந்தைய ஆண்டுகளை விட நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்த GDP & செலவினத்தின் அடிப்படையில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
போரடித்தால் குப்புறப்படுத்து கிடப்பது (அ) அப்படியே தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இது நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். ஆம், நீண்டநேரம் குப்புறப்படுத்துக் கிடந்தால் முதுகு, கழுத்து & தோள்பட்டைகளில் வலி ஏற்படுமாம். முகத்தில் சுருக்கங்களும் ஏற்படலாம். குறிப்பாக கர்ப்பிணிகள் இப்படி தூங்கக் கூடாதாம். மல்லாந்து படுத்துத் தூங்குவது தான் சிறந்ததாம். இந்த முக்கிய தகவலை SHARE பண்ணுங்க
மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற எம்புரான் திரைப்படம், அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படம் ₹242 கோடி வசூல் செய்த நிலையில், இந்த படம் 10 நாட்களில் ₹250 கோடியை கடந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்புரான் படத்தில் அரசியல் ரீதியான சர்ச்சை காட்சிகள் இருந்ததாக வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கான சிறப்பு நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியை விட தற்போது தமிழகத்துக்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், முதல்வர் இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும், வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து ஆ.ராசா மூலம் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நமது உடலில் நமக்கு தெரியாமலே ஏற்படும் குறைபாடுகளுள் ஒன்று ஹைபோ தைராய்டிசம். அதாவது, நமது கழுத்தில் இருக்கும் தைராய்டு சுரப்பி சரிவர செயல்படாமல் போவது. இதனை கண்டறிவது மிகவும் சிரமம். ஆனாலும், உடல் பருமன், சோர்வு, ஆற்றல் குறைவு ஆகிய அறிகுறிகள் மூலம் இந்தப் பிரச்னையை கண்டறியலாம். உங்களுக்கும் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தைராய்டு பரிசோதனை செய்து கொள்ளவும்.
➤மேஷம் – ஆசை ➤ரிஷபம் – அமைதி ➤மிதுனம் – தோல்வி ➤கடகம் – லாபம் ➤சிம்மம் – நன்மை ➤கன்னி – உயர்வு ➤துலாம் – பயம் ➤விருச்சிகம் – தேர்ச்சி ➤தனுசு – கவலை ➤மகரம் – நட்பு ➤கும்பம் – அலைச்சல் ➤மீனம் – நிம்மதி.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 175 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறையில் உடலுறவில் ஈடுபட்ட ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அவர்கள், உடலுறவில் ஈடுபட்டபோது அங்குவந்த போலீசிடம் சிக்கியுள்ளனர். மேலும், அவர்கள் வந்த காரில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது.
அண்ணாமலையே மீண்டும் மாநிலத் தலைவர் ஆவார் என பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேசியுள்ளார். பாஜகவின் புதிய தலைவரை மேலிடம் தேடி வரும் நிலையில், EPS-ம் அவரை மாற்ற அழுத்தம் கொடுப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், மீண்டும் அண்ணாமலைதான் தலைவர் ஆவார் என்று வி.பி.துரைசாமி பேசியிருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
இன்றிரவு நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை & பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET கணித்துள்ளது. மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம், கணவனை கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளி இருக்கிறது. உ.பி. நொய்டாவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியரான அஸ்மா கான் (42) வேறு ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக எண்ணி அவரது கணவன் நுருல்லா ஹைதர் சண்டையிட்டுள்ளார். அப்போது, சுத்தியலால் அஸ்மாவின் தலையில் அடித்து கொடூரமாக அவர் கொலை செய்துள்ளார். மகன் அளித்த தகவலின்பேரில் அவரை போலீஸ் கைது செய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.