news

News April 7, 2025

தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

image

தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறைக்கு பின் கூடும் இன்றைய கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. பிரதமர் நிகழ்ச்சியில் CM ஸ்டாலின் பங்கேற்காதது குறித்து பாஜகவினர் கேள்வி எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 7, 2025

மீண்டும் அண்ணாமலை ‘தலைவர்’?

image

தமிழகத்தில் பாஜக காலூன்ற அண்ணாமலை தலைவர் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் டெல்லி தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளனராம். தேசிய தலைமைக்கும் மாநில தலைமை மாற்றத்தில் விருப்பமில்லை என்றாலும், இபிஎஸ் அழுத்தத்தால் மாற்றம் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலை தலைவராக தொடர்வது குறித்து அதிமுகவிடம் மீண்டும் BJP பேசி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

News April 7, 2025

துருக்கி டூ அமெரிக்கா.. பிக்காச்சு அலப்பறைகள்

image

பிக்காச்சு என்ற பெயரை கேட்டாலே 90s kids-க்கு அப்படி ஒரு ஆனந்தம் வரும். அதெல்லாம் எப்படி 2k kids-க்கு தெரியும். அதவிடுங்க, சமீபத்தில் துருக்கியில் நடைபெற்ற போராட்டத்தில் பிக்காச்சு உருவத்தில் ஒருவர் பங்கேற்று கவனத்தை ஈர்த்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற்று வரும் மிகப்பெரிய போராட்டத்திலும் பிக்காச்சு போல் வேடமிட்டு ஒருவர் பங்கேற்றுள்ளார்.

News April 7, 2025

மீண்டும் தலைவர் ஆகும் அண்ணாமலை?

image

அண்ணாமலையே மீண்டும் மாநிலத் தலைவர் ஆவார் என பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேசியுள்ளார். பாஜகவின் புதிய தலைவரை மேலிடம் தேடி வரும் நிலையில், EPS-ம் அவரை மாற்ற அழுத்தம் கொடுப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், மீண்டும் அண்ணாமலைதான் தலைவர் ஆவார் என்று வி.பி.துரைசாமி பேசியிருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

News April 7, 2025

திங்களில் சிவன் அருள் பெற… இந்த மந்திரத்தை சொல்லுங்க

image

சிவ பெருமானுக்கு மிக உகந்த நாள் திங்கள்கிழமை எனக் கூறப்படுகிறது. இன்று, சிவனின் முழு அருளைப் பெற இம்மந்திரத்தைச் சொல்லுங்கள்.
‘நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
சிவனை மனதில் நிறுத்தி இந்த மந்திரத்தை உச்சரித்தால், வாழ்க்கையில் பாவங்கள் நீங்கும் சந்தோஷம் கூடும் என்பது ஐதீகம்.

News April 7, 2025

ஒருங்கிணைந்த அதிமுகவை விரும்பும் மோடி

image

நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடியை ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி ஆகிய 3 பேரும் சந்திப்பார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக 3 பேரையும் அவர் சந்திக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், ஒருங்கிணைந்த அதிமுகவை மட்டும் மோடி விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், டிடிவி, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் மீண்டும் சேர்க்க முடியாது என்பதில் இபிஎஸ் திட்டவட்டமாக இருக்கிறார். இதை தேசிய பாஜக தலைமை விரும்பவில்லையாம்.

News April 7, 2025

வாடிவாசல் படப்பிடிப்பு எப்போ? அப்டேட் தந்த தாணு

image

வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என காத்திருக்கும் ரசிகர்களுக்காக மிகப்பெரிய அப்டேட் வந்துள்ளது. ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். படத்தின் பாடல் மிக அருமையாக வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாட்டை கேட்டால் யார் இந்த பாடல் ஆசிரியர் என கேட்கும் அளவுக்கு வரிகள் சிறப்பாக உள்ளதாகவும் சிலாகித்துள்ளார் தாணு.

News April 7, 2025

வங்கக்கடலில் புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம்

image

தெற்கு வங்கக்கடலில் இன்று அல்லது நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி(புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று(ஏப்.7) முதல் 12ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2025

எந்த மதத்தையும் பாஜக விட்டு வைக்க போவதில்லை: உத்தவ்

image

வக்ஃப் திருத்த மசோதாவை அமல்படுத்திய பிறகு, பாஜக தற்போது கிறிஸ்தவர்கள், சமணர்கள், பவுத்தர்கள் மற்றும் இந்து கோவில்களின் நிலங்கள் மீதும் கண் வைத்துள்ளதாக மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். எந்த சமூகத்தின் மீதும் பாஜகவுக்கு அக்கறை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். பாஜகவின் அத்துமீறல்களை அனைவரும் கண்களை திறந்து பார்க்க வேண்டும் எனவும் உத்தவ் வலியுறுத்தியுள்ளார்.

News April 7, 2025

புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசியில் இன்று விடுமுறை

image

புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசி மாவட்டங்களில் இன்று(ஏப்.7) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம், திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் குடமுழுக்கையொட்டி இவ்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாற்றமின்றி நடைபெறும். SHARE IT

error: Content is protected !!