India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நம்மூர் மக்களுக்கு மாடுகள் மீது எப்போதும் தனி பாசம் உண்டு. கர்நாடகவில், கர்ப்பமாக இருந்த பசுவிற்கு ஒரு குடும்பம் திருமண மண்டபத்தில் வளைகாப்பு நடத்தி பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறது. இதில், கலந்து கொள்ள 500 பேருக்கு அழைப்பு விடுத்து, தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அவர்கள் சுமார் ₹1.5 லட்சம் வரை செலவிட்டதாகவும் சொல்கின்றனர். பாசத்துக்கு முன் காசு கனக்கில்லையே!
சட்டப்பேரவைக்கு “அந்த தியாகி யார்” என்ற வாசகத்துடன் அதிமுக MLAக்கள் பேட்ஜ் அணிந்து வந்தனர். டாஸ்மாக்கில் ₹1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக ED புகார் கூறியிருந்தது. இதை அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ள அதிமுக, அந்த தியாகி யார்? என்ற புதிய முழக்கத்தை முன் வைக்க தொடங்கியுள்ளது. முன்னதாக அண்ணா பல்கலை., விவகாரத்தில் ‘யார் அந்த சார்’ என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.7) சவரனுக்கு ₹200 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,285க்கும், சவரன் ₹66,280க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 103 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து 3ஆவது நாளாக சரிந்துள்ளது கவனிக்கத்தக்கது.
சொந்த கிரவுண்டில் தோற்றுவிட கூடாது என்றே அணிகளும், ஃபேன்சும் எண்ணுவார்கள். ஆனால், அதில் பலரும் ஏமாற்றமடைந்து இருக்கிறார்கள். சென்னையில் CSKவை எளிதில் வெல்ல முடியாது என்ற நம்பிக்கை தகர்ந்து வருகிறது. அதே நிலைதான், SRH அணிக்கும். ஹைதராபாத்தில் விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் தோல்வியடைந்து விட்டது. RCB, KKR, LSG, RR அணிகளும் தங்களின் சொந்த கிரவுண்டில் தோல்வியுற்றுள்ளன. எதனால் இப்படி?
மகாராஷ்டிராவில் இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த 7 ஆணிகளை 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு டாக்டர்கள் அகற்றியுள்ளனர். தூங்கும்போது தவறுதலாக ஆணிகளை விழுங்கியதாக கூறி அந்த 19 வயது இளைஞர் மும்பையில் உள்ள பிம்பிரி ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். இதனைக் கேட்டு முதலில் ஷாக்கான டாக்டர்கள் பின்னர் தங்களது டூட்டியை செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். தூங்கும் போது கூட ஜாக்கிரதையா இருங்க மக்களே!
வேலையை விடும் போது, அனுப்பும் மெயிலில் பெரிய கதையே எழுதுவார்கள். ‘சீனியர்கள் உதவினார்கள், இந்த ஆபீஸ் தான் பெஸ்ட்’ என பல கதைகள் இருக்கும். ஆனால், யாரும் இப்படி ஒரு Resignation letter’ஐ பார்த்திருக்கவே முடியாது. வெறும் 7 வார்த்தைகள் தான். ‘இந்த Charity வேலை எனக்கானது இல்லை.. நான் வெளியேறுகிறேன்’ என நேராக பொட்டில் அடித்தார் போல, கூறிவிட்டு ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். ஆனா, இதுவே போதும்ல!
இந்திய பங்குச்சந்தைகள் இன்று வரலாறு காணாத சரிவைக் கண்டுள்ளன. காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் சரிந்து 72,757 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல், நிஃப்டியும் 900 புள்ளிகள் சரிந்துள்ளதால் 21,887 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடப்பு IPL சீசனின் முதல் போட்டியில் SRH விளையாடியதைப் பார்த்து, அடேங்கப்பா… இவுங்க தான் 300 ரன்கள் அடிக்கப்போற ஃபர்ஸ்ட் டீம் என்றெல்லாம் கம்பு சுத்தினார்கள் ரசிகர்கள். ஆனால், இப்போ நிலைமையே வேறு. ஆம், பட்டா பாக்கியம்… படாட்டி லேகியம் என்ற போக்கில் கடைசி 2 மேட்சில் SRH 150 ரன்களுக்கே தடுமாறி விட்டது. ஃபேன்ஸ் புலம்ப ஆரம்பித்து விட்டனர். SRH மீளுமா.. நீங்க என்ன நினைக்கிறீங்க?
வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% ( நாளை மறுநாள்) குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட்டி விகிதம் குறைந்தால், வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகன கடன் வாங்கியவர்கள் பயன்பெறுவார்கள். ஆனால், ‘பிக்சட் டெபாசிட்’ போன்ற முதலீட்டிற்கு வட்டி குறையும் சிக்கலும் உள்ளது. மேலும், பணப்புழக்கம் அதிகரிக்கும், கடன் வாங்குதல் அதிகரிக்கும், நுகர்வு அதிகரிக்கும்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும் ED சோதனை நடைபெற்று வருகிறது. நேருவின் மகன் மற்றும் சகோதரர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வந்த அதிகாரிகள், தற்போது தில்லை நகரில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் உள்ள அமைச்சரின் சகோதரர் வீட்டிலும் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.