India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கர்ணன், ஜெய் பீம், சர்தார், பைசன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ரஜிஷா விஜயன், தனது துல்லியமான உணர்ச்சி மிகுந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். அழகு மற்றும் திறமை இணைந்த நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்த திரைப்படங்களில், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்கிறார். இவர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புதிய போட்டோக்கள் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த வேலுச்சாமிப்புரத்தில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் விசாரித்த அதிகாரிகளின் அடுத்த குறி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம். நாளை அங்கு சென்று கட்சி நிர்வாகிகளிடம் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. விசாரணை வளையத்திற்குள் விஜய்யும் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையை விஜய் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ODI கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. மழை காரணமாக டாஸ் போட தாமதமான நிலையில், தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. ஏற்கெனவே லீக் போட்டியில் தோற்றதற்கு, இன்றைய ஃபைனலில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணியை பழிதீர்க்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மணிரத்னம் படத்தில் நடிக்க அழைப்பு வந்தால், அதற்காக தன் கையை வெட்டிக் கொள்ளவும் ரெடியாக இருப்பதாக நடிகை பிரியா மணி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே மணிரத்னத்தின் ‘ராவணன்’ படத்தில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் மணிரத்னம் தனக்கு மிகவும் பிடித்தமான இயக்குநர் எனக் கூறியுள்ள அவர், மணிரத்னம் படத்தில் நடிப்பது ஆசிர்வாதம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மொன்தா புயலுக்கு பிறகு தமிழகத்தில் படிப்படியாக மழை குறைந்தது. இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக் கடலில் இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. நவ.8 வரை தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும் நெல்லிக்காய், மலிவு விலையில் எளிதில் கிடைக்கும். இது தோல், முடி, கண் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு பெரும் பயனளிக்கிறது. தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. நெல்லிக்காய் உடலுக்கு என்னென்ன நன்மைகள் தருகிறது என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் வீரர்கள் வந்தார்கள் என்றும், பயந்தவர்கள் வரவில்லை என்றும் RS பாரதி விமர்சித்துள்ளார். கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் பங்கேற்காதவர்கள் குறித்த கேள்விக்கு, வராதவர்களை பற்றி கவலை இல்லை என்றும், அவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக பயந்து கொண்டு வரவில்லை எனவும் குறிப்பிட்டார். ஜனநாயக உணர்வோடு வந்தவர்களை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் உடல்களில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் உறுப்புகளை திருடிவிட்டதாக ஹமாஸ் மற்றும் காஸா சுகாதார அமைச்சக அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஹமாஸ் – இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் பலியான கைதிகளின் உடல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன. இஸ்ரேல் வழங்கிய உடல்களை பரிசோதித்த காசா அதிகாரிகள், சடலங்களின் உள்ளே பஞ்சு அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்ற டெக்கி கார்யோ(72) காலமானார். பேட் பாய்ஸ், நோஸ்ட்ராடாமஸ், த பேட்ரியாட் என பிரபலமான பல படங்களில் இவர் நடித்துள்ளார். பிரான்ஸில் பிறந்த கார்யோ, த மெசஞ்சர், கிஸ் ஆஃப் டிராகன் உள்ளிட்ட பிரெஞ்சு படங்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

நிதி மோசடியில் ஈடுபட்ட 42 பேர், கடந்த 2 ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தப்பியுள்ளவர்கள், அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பலர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.