India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்கா விதித்த 26% சதவீத இறக்குமதி வரியால், இந்தியாவின் GDP வளர்ச்சி சற்று மந்தமடையலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் RBI தனது ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% ஆக குறைக்க நேரிடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்புக்குப் பின் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.3% இருந்து 6.1% ஆக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு நடத்தி வரும் நிலையில், அவர் சட்டப்பேரவையில் பங்கேற்றுள்ளார். வீட்டில் ரெய்டு நடப்பதற்கான எந்த அறிகுறியும் அவரது முகத்தில் தெரியவில்லை. வானதி சீனிவாசன், பாமக MLA உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு விடை நேரத்தில் பதிலளித்து வருகிறார். இது ஒருபுறம் என்றால் அவரது இல்லத்தில் 100க்கும் மேற்பட்ட ஆதாரவாளர்கள் குவிந்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மலையாள இயக்குநர் டி.கே.வாசுதேவன் (89) காலமானார். நடிகர், கலை இயக்குநர், இயக்குநர் என 1960களில் மலையாள திரையுலகின் முக்கிய அங்கமாக வாசுதேவன் திகழ்ந்தார். மிகவும் பிரபலமான ஃபேமஸான ‘செம்மீன்’ படத்தில் இவர் அசோசியேட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். என்டே கிராமம், விஸ்வரூபம் போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார். வாசுதேவன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மீனவர்கள் நலனுக்காக ₹576 கோடியில் சிறப்பு திட்டங்களை CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தங்கச்சிமடத்தில் ₹150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும், 7,000 மீனவர்களுக்கு உபகரணங்களுடன் பயிற்சி வழங்க ₹52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், 14,700 பேருக்கு மீன்பிடி சாராத தொழில்களுக்கு பயிற்சி அளிக்க ₹53 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என CM உறுதியளித்தார்.
தகர்க்க முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி, மேலும் ஒரு சாதனைக்கு ரெடியாகியுள்ளார். டி20 போட்டிகளில் 13,000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க அவருக்கு 17 ரன்களே தேவை. ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் கெயில்(14,562), அலெக்ஸ் ஹேல்ஸ்(13,610), மாலிக்(13,557), பொல்லார்டுக்கு (13,537) அடுத்த இடத்தில் அவர் உள்ளார். கோலி இன்று சாதிப்பாரா?
டிரம்பின் புதிய வரி விதிப்பு எதிரொலியாக உலக அளவில் பங்குச்சந்தைகள் பெரும் ஆட்டம் கண்டுள்ளன. ஆசிய சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. சீனா – 5.5%, ஜப்பான்- 4.2%, சிங்கப்பூர்- 7%, ஹாங்காங்- 8.7%, மலேசியா- 4.4% பங்குச்சந்தைகள் சரிந்துள்ளன. அதேபோல் ஆஸ்திரேலியாவில் 4.1%, பிலிப்பைன்ஸில் 4%, நியூசிலாந்தில் 3.6% சரிந்துள்ளது. இந்தியாவில் வரலாறு காணாத வகையில் இன்று காலை நேர வர்த்தகப்படி <<16018543>>4%<<>> சரிந்துள்ளது.
PM மோடியின் இலங்கை பயணத்தில் தமிழக மீனவர்களுக்கு பயனில்லை என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். கச்சத்தீவு விவகாரம், இலங்கையில் சிறைகளில் உள்ள 97 மீனவர்கள், படகுகள் விடுவிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பெரிய முன்னெடுப்பு இல்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.
வடமாநிலங்களில் திருமணத்தில் மணமகனின் காலணியை மறைத்துவைத்து விட்டு, அதனை திருப்பிக் கொடுக்க மணமகள் வீட்டார் பணம் கேட்பது சடங்காக உள்ளது. உ.பி. பிஜ்னோரில் இந்த சடங்கின்போது, ₹50,000-க்கு பதிலாக மணமகன் ₹5,000 கொடுத்துள்ளார். இதனால், அவரை பிச்சைக்காரன் எனக் குறிப்பிட்டு மணமகள் குடும்பத்தினர் தாக்கியுள்ளனர். கல்யாண வீடு களேபரமான நிலையில், போலீசுக்கு சென்ற பின்பே பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
வரலாறு காணாத வகையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 2008க்கு பிறகு உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்து ஒரு பீப்பாய் 59 டாலருக்கு விற்பனையாகிறது. கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலை குறையும்போதும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாதவன், நயன்தாரா நடிப்பில் OTTயில் வெளியான ‘டெஸ்ட்’ கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தில், ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது குறித்து எஸ்.வி.சேகர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘என்னை புக் பண்ணிட்டு, படத்தில் இருந்து விலக்கினால், அப்படம் தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு.. தொடர்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார். பாவம் சாபம் நயனையும் விட்டு வைக்கவில்லை!
Sorry, no posts matched your criteria.