news

News April 7, 2025

அதிமுக முன்னாள் MLA காலமானார்

image

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தொகுதி அதிமுக முன்னாள் MLA வி.அரங்கராஜ் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அரங்கராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

News April 7, 2025

உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது: மம்தா!

image

மே.வங்கத்தில் ஆசிரியர் நியமனத் தேர்வில் முறைகேடு செய்தவர்களுக்கு பணி நியமனம் வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் யாரும் வேலையிழக்க மாட்டார்கள் என மாநில CM மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். தான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

News April 7, 2025

இபிஎஸ் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லையா?

image

பாஜக உடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக பேசப்படுகிறது. இதுகுறித்து இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன், பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக பணிந்து செல்வதாக விமர்சித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என சாடிய அவர், ஏதோ காரணங்களால் பாஜக சொல்வதை எல்லாம் அதிமுக கேட்பதாக விமர்சித்தார்.

News April 7, 2025

அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ஆவணங்கள் சிக்கியதா?

image

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையில் சிக்கிய ஆவணங்களை எடுத்து செல்ல காரில் இருந்து அதிகாரிகள் சூட்கேஸ் எடுத்துச் சென்றுள்ளனர். இன்று காலை முதல் அமைச்சர் நேரு, அவரது மகன் மற்றும் சகோதரர் வீடுகளில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

News April 7, 2025

நொந்து போனது யார்? – CM ஸ்டாலினுக்கு EPS பதிலடி

image

ஸ்டாலின் அரசில்தான் மக்கள் நொந்து நூலாகியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். அடுத்தாண்டு தேர்தல் வருவதை கருத்தில் கொண்டுதான் சட்டப்பேரவையில் மீனவர்களுக்கான அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தது திமுக அரசுதான் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக தொண்டர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளதாக பேரவையில் CM ஸ்டாலின் பேசி இருந்தார்.

News April 7, 2025

அதிமுக Ex M.P. சி.பெருமாள் உடல் நல்லடக்கம்!

image

அதிமுக மூத்த தலைவரும், Ex எம்.பியுமான சி.பெருமாள் (68) உடல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஆம்பள்ளி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல் நலக்குறைவால் நேற்று மறைந்த அவரது உடலுக்கு அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் நேரில் அஞ்சல் செலுத்தினர்.

News April 7, 2025

முதல் இந்தியர்… மணல் ஓவியக் கலைஞருக்கு கௌரவம்!

image

முக்கிய தலைவர்களின் பிறந்தநாளிலோ, விழாக் காலங்களிலோ ஒடிசா கடற்கரையில் தனது மணல் சிற்பம் மூலம் கவனத்தை ஈர்ப்பவர் சுதர்சன் பட்நாயக். இங்கிலாந்தில் நடைபெற்ற மணல் கலை விழாவில் பங்கேற்ற அவர், பிரெட் டாரிங்டன் மணல் மாஸ்டர் விருதை வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் சுதர்சன் பட்நாயக்தான். ஒடிசாவைச் சேர்ந்த அவருக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

News April 7, 2025

பாஜகவின் கூட்டணி கட்சி ED : ரகுபதி விமர்சனம்

image

அமைச்சர் கே.என்.நேரு வீடு உள்ளிட்ட பல இடங்களில் காலையில் இருந்து ED சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை முத்திரை குத்தப்படாத அரசியல் கட்சி என்றும், அதை பாஜக கூட்டணி கட்சியாகவே பார்க்கிறோம் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். மேலும், இதுபோன்ற சோதனைகளுக்கு எல்லாம் திமுக அஞ்சாது; எல்லாத்தையும் பார்க்க தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.

News April 7, 2025

3 நாட்களில் PF பணத்தை எடுப்பது எப்படி?

image

இதற்கு PF கணக்குடன் பேங்க், ஆதார், PAN ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும் ✦EPFO போர்ட்டலில், லாக்-இன் செய்து, ‘Online Services’ல் ‘Claim’ஐ கிளிக் செய்யவும் ✦வங்கி அக்கவுண்டை ‘Verify’ செய்து, என்ன வகை Withdrawl செய்ய வேண்டுமோ, அதை தேர்வு செய்யுங்கள் (PF Advance, Final Settlement) ✦Withdrawl-க்கான ஃபார்மை நிரப்பிய பின், வங்கி எண் போன்ற தகவல்களை சரிபார்த்து கொடுத்தால் போதும். SHARE IT.

News April 7, 2025

வக்ஃப் சட்டத்தை அமல்படுத்தும் கேரளா!

image

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்யும்போது கேரளா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தற்போது மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, சட்டமாகியுள்ளது. இந்நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக அந்தச் சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியத்தை ஏற்படுத்த கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதலில் எழுந்த கடும் எதிர்ப்பு, இப்போது எப்படி காணாமல் போனது? கமெண்ட் செய்யுங்கள்!

error: Content is protected !!