India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 427 ▶குறள்: அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். ▶ பொருள்: ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள் தான் சிந்திப்பார்கள். அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் திமுக அரசை எதிர்க்க வேண்டுமென்ற நிலைக்கு வந்துவிட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் திட்டம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது வரை இல்லை என்றார். இடஒதுக்கீடு வழங்கும்படி CM ஸ்டாலினை சந்தித்து தான் முறையிட்டதாகவும், ஆனால் அதனை தர அவருக்கு மனமில்லை என்றார்.
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவிகாயின் பேத்தியான சானியா சந்தோக் என்பவரை அவர் திருமணம் செய்யவுள்ளார். இருகுடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே நிச்சயதார்த்தில் பங்கேற்றுள்ளனர். மும்பையில் செல்லப் பிராணிகளுக்கான ‘மிஸ்டர் பாவ்ஸ்’ என்ற சலூனை சானியா நடத்தி வருகிறார்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை சந்திக்க கிளம்பிய போது அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த நயினார், உரிமைகளை கேட்டு போராடுபவர்களையும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் கைது செய்து, ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் திமுக அரசுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.
▶ஆகஸ்ட் 14 – ஆடி 29 ▶ கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: சஷ்டி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை.
இன்று (ஆகஸ்ட் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
இன்று (ஆகஸ்ட் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அமெரிக்க தயாரிப்பான F16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியானது. அண்மையில் NDTV இதுபற்றி கேள்வியெழுப்ப, பாகிஸ்தானிடம் கேட்டு சொல்வதாக அமெரிக்க தரப்பு பதிலளித்துள்ளது. பாக்.கின் F16 விமானங்களை பராமரிப்பதே அமெரிக்கா தான். அதன் அனுமதியில்லாமல் அவற்றை பயன்படுத்தவும் முடியாது. அப்படியிருக்க, கேட்டு சொல்கிறோம் என்றால் என்ன அர்த்தம்?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் (UG) முதல்கட்ட கவுன்சலிங் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சிபெற்ற மாணவர்கள், அந்தந்த கல்லூரிகளை வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் அணுக மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) அறிவுறுத்தியுள்ளது. ஒதுக்கீடு கடிதங்களை MCC இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். சீட் ஒதுக்கீடு பட்டியலை காண <
பிஹார் சிறப்பு வாக்காளர் திருத்தம், அரசியல் ரீதியாக நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது? அதன் அதிகாரிகளாக யார் இருப்பர்? அவர்களின் பொறுப்புகள் என்னென்ன? வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்பவர்கள் யார் என்பது குறித்து மேலே உள்ள படங்களை Swipe செய்து அறிந்துகொள்ளுங்கள். Share செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.