news

News April 7, 2025

அன்றே கணித்த மார்க்கெட் வித்தகர்

image

உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளதால், பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் முதல் கடைக்கோடி முதலீட்டாளர் வரை முதலீட்டை இழந்துள்ளனர். ஆனால், அமெரிக்காவின் பங்குச்சந்தை புலி, வாரன் பஃபெட் மட்டும் லாபம் ஈட்டியிருக்கிறார். எப்போதும், சந்தை வீழ்ச்சியடையப் போவதை முன்கூட்டியே கண்டறிந்து, முதலீடுகளை பணமாக மாற்றி வைக்கும் அவர், இந்த முறையும் அதேபோல செய்து தப்பித்திருக்கிறார்.

News April 7, 2025

அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கு: நீதிபதி திடீர் விலகல்

image

மூத்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திடீரென விலகியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில், இந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை எம்.எம்.சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தல் அமர்வில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தான் இடம்பெறாத வேறு அமர்வு முன் பட்டியலிட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

News April 7, 2025

மாநிலங்களவை எம்.பி.யாகும் அண்ணாமலை?

image

தமிழக பாஜக புதியத் தலைவர் யார் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. புதிய தலைவர் பதவிக்கு எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில் தற்போதைய தலைவர் அண்ணாமலையின் முக்கியத்துவம் குறையக் கூடாது என கருதும் பாஜக மேலிடம், அவரை மாநிலங்களவை எம்.பி., ஆக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

News April 7, 2025

வரலாற்றில் மோசமான நாள் இன்று

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று வரலாற்றில் மிக மோசமான சரிவை கண்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, நிஃப்டி 886 புள்ளிகளை (3.87%) இழந்துள்ளது. இதற்கு முன், 2020 மார்ச் மாதம் கோவிட் அச்சத்தால் நிஃப்டி ஒரே நாளில் 1,135 (12.98%) புள்ளிகளை இழந்தது. 2008ஆம் ஆண்டு 8.7%, 2015ஆம் ஆண்டு 5.92%, 2022ஆம் ஆண்டு 4.75% என நிஃப்டி அதீத இழப்புகளை சந்தித்திருக்கிறது. உங்களது போர்ட்ஃபோலியோ எப்படி இருக்கிறது?

News April 7, 2025

துபாயில் மே 4ஆம் தேதி பிரமாண்ட திருக்குறள் விழா

image

துபாயில் வரும் மே மாதம் 4ஆம் தேதி பிரமாண்ட திருக்குறள் விழா நடைபெறவுள்ளது. விழாவுக்கு புதுச்சேரி CM ரெங்கசாமி தலைமை வகிக்க, மலேசிய எம்பி டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன், நடிகர் விவேக் ஓபராய், பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், ஞான சம்பந்தன், சுமதி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதில் பங்கேற்க முன்பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

News April 7, 2025

BIG BREAKING: பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு?

image

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ₹2 உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நுகர்வோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனாலும், பொதுமக்களுக்கு விலையை உயர்த்தக் கூடாது என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 7, 2025

இந்தியாவுக்கு விசா வழங்க சவுதி தடை: காரணம் என்ன?

image

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு உம்ரா மற்றும் பிசினஸ் விசாக்கள் வழங்குவதை சவுதி தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. இந்த விசாவில் வருபவர்கள் அப்படியே சட்டவிரோதமாக தங்கிவிட்டு ஹஜ் யாத்திரையையும் முடித்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படுவதாக சவுதி அரசு கருதுகிறது. இதை தவிர்க்கவே ஜூன் மாதம் வரை விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.

News April 7, 2025

வங்கியில் மாதம் ₹1,20,940 வரை சம்பளம்!

image

*IDBI வங்கியில் உள்ள 119 ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
*அனுபவம் வாய்ந்த இளங்கலை, முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
*மாத சம்பளமாக பதவிக்கேற்ப ₹64,820 – ₹1,20,940 வரை வழங்கப்படும். *குரூப் டிஸ்கஷன், நேர்முகத்தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும். *வரும் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். *முழுத் தகவலுக்கு <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

News April 7, 2025

அதிமுக முன்னாள் MLA காலமானார்

image

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தொகுதி அதிமுக முன்னாள் MLA வி.அரங்கராஜ் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அரங்கராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

News April 7, 2025

உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது: மம்தா!

image

மே.வங்கத்தில் ஆசிரியர் நியமனத் தேர்வில் முறைகேடு செய்தவர்களுக்கு பணி நியமனம் வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் யாரும் வேலையிழக்க மாட்டார்கள் என மாநில CM மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். தான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

error: Content is protected !!