India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் பிலிம்ஸ் ராமநாதன் (72) உடல் நலக்குறைவால் காலமானார். நடிகர் சத்யராஜை வைத்து நடிகன், வள்ளல், பிரம்மா, வில்லாதி வில்லன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த இவர், அவரது மேலாளராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் உயிர் பிரிந்தது. #RIP
நடப்பு IPL சீசனில் இனி CSK விளையாடும் போட்டிகள் குறித்து வீடியோ வெளியிடப்போவதில்லை என அஸ்வின் யூடியூப் சேனல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வின், ஜடேஜா இருக்கும் போது, அணியில் இன்னொரு ஸ்பின் பவுலரான நூர் அகமது தேவையில்லை என ஒரு வீடியோவில் கிரிக்கெட் ஆய்வாளர் பிரசன்னா தெரிவித்தது சர்ச்சையானது. பர்பிள் தொப்பியை வைத்துள்ள நூர் அகமதை நீக்க சொல்வதா என ரசிகர்கள் வெகுண்டெழுந்தனர்.
ஊறவைத்த உலர் திராட்சையை காலையில் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செரிமான கோளாறுகள் நீங்கி மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக அமையும். இரும்புச் சத்து இருப்பதால் உடல் சோர்வை போக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுகிறது. எலும்பு வலிமைக்கு உதவும் போரான் என்ற கனிமம் இதில் உள்ளது. உலர் திராட்சை ஊறவைத்த நீரை பருகினால், உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேற்றப்படும்.
CSK அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட்டை தொலைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் விமர்சித்துள்ளார். டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் 26 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்த தோனி, தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இது குறித்து பேசிய ஹெய்டன், தோனி அவரது மோசமான ஆட்டத்தை ஒப்புக்கொண்டு எங்களது வர்ணனையாளர் குழுவுடன் வந்து இணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
பெட்ரோல் மீதான கலால் வரியை ₹11இல் இருந்து ₹13-ஆகவும், டீசல் மீதான கலால் வரியை ₹8இல் இருந்து ₹10-ஆகவும் மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனால், சில்லரை விலையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது, முன்பு கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோது குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் அளிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை இதன்மூலம் ஈடுகட்ட இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளதால், பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் முதல் கடைக்கோடி முதலீட்டாளர் வரை முதலீட்டை இழந்துள்ளனர். ஆனால், அமெரிக்காவின் பங்குச்சந்தை புலி, வாரன் பஃபெட் மட்டும் லாபம் ஈட்டியிருக்கிறார். எப்போதும், சந்தை வீழ்ச்சியடையப் போவதை முன்கூட்டியே கண்டறிந்து, முதலீடுகளை பணமாக மாற்றி வைக்கும் அவர், இந்த முறையும் அதேபோல செய்து தப்பித்திருக்கிறார்.
மூத்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திடீரென விலகியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில், இந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை எம்.எம்.சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தல் அமர்வில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தான் இடம்பெறாத வேறு அமர்வு முன் பட்டியலிட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பாஜக புதியத் தலைவர் யார் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. புதிய தலைவர் பதவிக்கு எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில் தற்போதைய தலைவர் அண்ணாமலையின் முக்கியத்துவம் குறையக் கூடாது என கருதும் பாஜக மேலிடம், அவரை மாநிலங்களவை எம்.பி., ஆக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று வரலாற்றில் மிக மோசமான சரிவை கண்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, நிஃப்டி 886 புள்ளிகளை (3.87%) இழந்துள்ளது. இதற்கு முன், 2020 மார்ச் மாதம் கோவிட் அச்சத்தால் நிஃப்டி ஒரே நாளில் 1,135 (12.98%) புள்ளிகளை இழந்தது. 2008ஆம் ஆண்டு 8.7%, 2015ஆம் ஆண்டு 5.92%, 2022ஆம் ஆண்டு 4.75% என நிஃப்டி அதீத இழப்புகளை சந்தித்திருக்கிறது. உங்களது போர்ட்ஃபோலியோ எப்படி இருக்கிறது?
துபாயில் வரும் மே மாதம் 4ஆம் தேதி பிரமாண்ட திருக்குறள் விழா நடைபெறவுள்ளது. விழாவுக்கு புதுச்சேரி CM ரெங்கசாமி தலைமை வகிக்க, மலேசிய எம்பி டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன், நடிகர் விவேக் ஓபராய், பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், ஞான சம்பந்தன், சுமதி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதில் பங்கேற்க முன்பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.