news

News April 7, 2025

இதெல்லாம் சாதாரணங்க: அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

image

பெங்களூருவில் இளம் பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், அவருக்கு தக்க தண்டனை தர வேண்டும் எனப் பலரும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், கர்நாடக அமைச்சரான பரமேஷ்வரா, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இப்படியான சம்பவங்கள் நடப்பது சகஜம் தான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசி ஷாக் கொடுத்திருக்கிறார்.

News April 7, 2025

இங்கிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

image

ஜாஸ் பட்லருக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. சாம்பியன் டிராபி தொடரில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, கேப்டன் பதவியை அவர் துறந்தார். இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ODI, T20 போட்டிகளுக்கு கேப்டனான ஹாரி ப்ரூக் நியமிக்கப்பட்டுள்ளார். 26 வயதான ஹாரி ப்ரூக், 26 ODI, 44 T20I போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

News April 7, 2025

போதையில் விபத்து… சிக்கிய சினிமா இயக்குநர்!

image

கொல்கத்தாவில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சினிமா இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார். தாகூர்புகூர் சந்தைப் பகுதிக்குள், இயக்குநர் சித்தந்த தாஸின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியதில், ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர். விபத்தின்போது அவரும், காரில் இருந்த TV பெண் நிர்வாகியும் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இருவரையும் பொதுமக்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

News April 7, 2025

அதிமுகவில் அண்ணன், தம்பி போல் இருக்கிறோம்

image

அதிமுகவில் எந்த விரிசலும் இல்லை; அண்ணன், தம்பி போல உள்ளோம் என்றும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததால், செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்தார் எனவும் EX மினிஸ்டர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நிர்மலா உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, நான் கூடத்தான் நட்டாவை சந்தித்தேன்; தொகுதி பிரச்னை தொடர்பாக மத்திய அமைச்சர்களை MLAக்கள் சந்திப்பது ஒன்றும் புதிதல்ல என்றும் நாசூக்காக பதிலளித்தார்.

News April 7, 2025

ஒரே நாளில் ₹85,854 கோடியை இழந்த பணக்காரர்கள்

image

இன்று உலகளவில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்ததால், இந்தியாவின் 4 பெரும் பணக்காரர்கள் ₹85,854 கோடியை இழந்துள்ளனர். அதிகபட்சமாக அம்பானி ₹30,906 கோடியை இழந்துள்ளார். இந்த பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ள அதானி ₹25,757 கோடியை இழந்துள்ளார். OP Jindal குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் ₹18,888 கோடியையும், HCL Technologies நிறுவனர் ஷிவ் நாடார், ₹12,878 கோடியையும் இழந்துள்ளனர்.

News April 7, 2025

23 பேரால் கேங்க் ரேப்… ஒரு வாரமாக சிறுமிக்கு கொடுமை!

image

உ.பி.யில் 23 மனித மிருகங்களால் ஒரு சிறுமி வேட்டையாடப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 12-ம் வகுப்பு பயிலும் மாணவி, தனது நண்பருடன் பாருக்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்கள் குளிர்பானத்தில் போதை மருந்து கொடுத்து, சிறுமியை ஒரு வாரமாக ரேப் செய்துள்ளனர். 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

News April 7, 2025

₹50 கோடி: ‘பராசக்தி’ ஒரே டீல்

image

‘பராசக்தி’ படத்தின் OTT உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்க படக்குழு முயற்சி செய்து வருகிறதாம். உரிமத்தை ₹50 கோடிக்கு விற்க படக்குழு பேரம் பேசியதாகவும், ஆனால், ₹45 கோடிக்கு வாங்க நெட்ஃபிளிக்ஸ் முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், சொன்ன ரேட்டில் இருந்து படக்குழு பின்வாங்காத நிலையில், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறதாம். 2026 பொங்கலுக்கு படம் ரிலீசாக உள்ளது.

News April 7, 2025

மத நம்பிக்கையால் வீட்டிலேயே பிரசவம்?… பெண் பரிதாப பலி

image

கேரளாவில் வீட்டிலேயே பிரசவித்த பெண், சற்றுநேரத்தில் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதம் சார்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் சிராஜுதின், தனது கர்ப்பிணி மனைவி அஸ்மாவை ஹாஸ்பிடலில் சேர்க்காமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தையை பெற்றெடுத்த அவர், சிறிதுநேரத்தில் உயிரிழந்தார். மகளின் இறப்புக்கு சிராஜுதினே காரணம் என அவரது பெற்றோர் புகாரளித்துள்ளனர். போலீஸ் விசாரித்து வருகிறது.

News April 7, 2025

பங்குச்சந்தைகளில் கடும் சரிவு.. சென்செக்ஸ் 2,227 வீழ்ச்சி

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் கடும் சரிவுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2,227 புள்ளிகள் சரிந்து 73,137ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 742.85 புள்ளிகள் (3.24%) வீழ்ச்சியடைந்து 22,161.60ஆக வர்த்தகமானது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் தவிர்த்த அனைத்து நிறுவன பங்குகளும் வீழ்ச்சி கண்டன. டாடா ஸ்டீல் பங்குகள் 7.33%, L&T பங்குகள் 5.78% சரிந்தன.

News April 7, 2025

ஒரே ஆண்டில் ₹2,243 கோடி.. பாஜகவுக்கு குவிந்த நன்கொடை

image

2023-24 நிதியாண்டில் பாஜக ₹2,243 கோடி நன்கொடை பெற்றிருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது. தேசிய கட்சிகளில் பாஜகவே அதிக நன்கொடை பெற்றிருப்பதாகவும், காங்கிரஸ் ₹281.48 கோடி பெற்றுள்ளதாகவும் ADR கூறியுள்ளது. 2022-23 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பாஜகவுக்கு 211.72%, காங்கிரஸுக்கு 252.18% அதிக நன்கொடை கிடைத்து உள்ளதாகவும் ADR குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!