news

News August 14, 2025

கழிப்பறையிலும் திமுக ஊழல்: இபிஎஸ்

image

ஒரு நாளைக்கு ஒரு கழிப்பறையை தூய்மை செய்ய ₹800 என ₹1,000 கோடிக்கு சென்னையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கழிப்பறையிலும் திமுக ஊழல் செய்திருப்பதாகவும் விமர்சித்தார். ஸ்டாலின் எதிர்க்கட்சியில் இருந்தபோது தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு சென்று, அவர்களுடன் தேநீர் சாப்பிட்டு ஆதரவாக பேசினார். ஆனால் தற்போது அவர்கள் போராட்டத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை என்றும் கூறினார்.

News August 14, 2025

ஈசனை கட்டியணைத்தபடி காட்சி தரும் அம்பிகை!

image

தஞ்சாவூர், திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயிலில் அம்பிகை ஈசனை கட்டியணைத்தபடி காட்சி தருகிறார். தன்னை நினைத்து தவம் இருந்த அம்பிகையை சோதிக்க நினைத்த ஈசன், ஜோதி ரூபமாக காட்சி தந்தார். ஒற்றை காலை கீழும், மற்றொரு காலை ஜோதி ரூபத்தில் இருந்த ஈசன் மீதும் வைத்து, அம்பிகை ஈசனைத் தழுவினார். இக்கோயில் வழிபட்டால், மனக்கசப்பால் பிரிந்து போன தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என நம்பப்படுகிறது.

News August 14, 2025

அமைச்சரா? உதயநிதி ரசிகர் மன்ற தலைவரா? இபிஎஸ்

image

தமிழகத்தில் 207 அரசுப்பள்ளிகளை மூடுவது திமுகவினரின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள், தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்கான நடவடிக்கை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். இப்பள்ளிகளை மூடுவதன் மூலம் அது இயங்கிய இடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என கல்வியாளர்கள் குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் போல் செயல்படுவது வெட்கக்கேடானது என்றார்.

News August 14, 2025

சபாநாயகர் அப்பாவு காரை சுற்றிவளைத்த பெண்கள்

image

நெல்லை மாவட்டம் திசையின்விளை அருகே முருகேசபுரத்தில் ₹423 கோடி மதிப்பில் குடிநீர் இணைப்பு திட்டத்தை துவக்கி வைக்க சபாநாயகர் அப்பாவு சென்றுள்ளார். அப்போது அவரது காரை சுற்றிவளைத்த பெண்கள் 40% கூட முடிவடையாத இத்திட்டத்துக்கு விளம்பர தேடி வந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் திசையின்விளை பகுதியை அப்பாவு பாரப்பட்சமாக புறக்கணிப்பதாகவும், போதிய குடிநீர் வசதி இல்லை எனவும் கூறி கோஷங்கள் எழுப்பினர்.

News August 14, 2025

வைரமுத்து மீது நடவடிக்கை தேவை: அர்ஜுன் சம்பத்

image

சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் ராமனை பைத்தியக்காரன் என வைரமுத்து இழிவுப்படுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை கோரி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். ஆளுநரிடமிருந்து பட்டம் பெறுவதை தவிர்த்த மாணவி கிறிஸ்துவர் என்றும், ஆளுநரை உள்நோக்கத்துடன் அவர் அவமதித்துள்ளதால் அவரது பட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

News August 14, 2025

ஆகஸ்ட் 14: வரலாற்றில் இன்று

image

1947 – பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் விடுதலை பெற்ற நாள்.
1911 – பிரபல ஆன்மிக தலைவர் வேதாத்திரி மகரிஷியின் பிறந்த தினம்.
2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் நடந்த 4 தொடர் குண்டுவெடிப்புகளில் 334 பேர் கொல்லப்பட்டனர்.
2016 – பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைந்த தினம்.
2018 – இத்தாலியில் உள்ள ஜெனோவா நகரில் பாலம் இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழப்பு.

News August 14, 2025

அரசியல் எதிரிகள் பார்த்த வேலை: தங்கமணி வேதனை

image

முன்னாள் அமைச்சர் தங்கமணி திமுகவில் இணையப்போவதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை இருந்த போதும், திருச்சியில் இபிஎஸ் சுற்றுபயணத்துக்காக தான் கட்சிப்பணி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். தன்னை குறித்து வந்த இச்செய்தியை எண்ணி மனவேதனைப்படுவதாகவும், அரசியல் எதிரிகளின் தவறான தகவல் செய்தியாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

News August 14, 2025

அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

image

*சிறிய விஷயங்களில் உண்மையாக இருங்கள், அதில் தான் உங்களது வலிமை உள்ளது.
*நீங்கள் மக்களை மதிப்பீடு செய்துகொண்டிருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரம் இருக்காது.
*மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல.
*உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள்.

News August 14, 2025

ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு வழங்க கோரிக்கை

image

2023-ம் ஆண்டு லண்டனில் சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதனை எதிர்த்து சாவர்க்கரின் பேரன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். புனே நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், ராகுல் வழக்கறிஞர் தரப்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் சாவர்க்கர், கோட்சே ஆதரவாளர்களால் ராகுல் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

கூலி ரஜினி கிரீடத்தின் வைரம்: SK

image

திரைத்துறையில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்த ரஜினிக்கு SK வாழ்த்து தெரிவித்து இணையத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தங்களைப் பார்த்து, தங்களைப் போல மிமிக்ரி செய்து, தற்போது தங்களது துறையிலேயே தானும் இருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என குறிப்பிட்டுள்ளார். திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள் என்றும், தங்களது கிரீடத்தில் மற்றுமோர் வைரமாக கூலி ஜொலிக்கும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!