India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில் தாமதமானால் முன்பதிவு டிக்கெட் கட்டணம் திருப்பி தரப்படுமா, தரப்படாதா என பயணிகளுக்கு சந்தேகம் இருக்கும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம். ரயில் 3 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகி, அதில் பயணி பயணிக்காது போனாலோ, அவர் செலுத்திய முழுக் கட்டணமும் திருப்பித் தரப்படும். ஆன்லைன் டிக்கெட் எனில், ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். கவுன்ட்டர் டிக்கெட் எனில் நேரில் சென்று விண்ணப்பித்து கட்டணம் பெறலாம்.
பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி தாஹிரா காஷ்யப்புக்கு மீண்டும் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தாஹிராவே பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தனக்கு இது 2வது பாதிப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாஹிரா முன்னர், 2018 ஆம் ஆண்டிலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கேஸ் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசை CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் கேஸ் விலை உயர்வு அமைந்திருக்கிறது எனவும், ஒன்றிய பாஜக அரசே, தேர்தல் வரும் வரை காத்திராமல், விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
RCBக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், MI அணி தனது முழு பலத்துடன் களம் இறங்கியுள்ளது. காயம் காரணமாக, முதல் போட்டியில் இருந்து பவுலர் பும்ரா விளையாடவில்லை. மேலும், முன்னாள் கேப்டன் ரோகித் ஷர்மா காயம் காரணமாக கடந்த போட்டியில் ஓய்வில் இருந்தார். தற்போது, நலம் பெற்றிருக்கும் இருவரும் இன்றைய போட்டியில் களம் இறங்கியுள்ளனர். வெற்றி பெறுமா MI?
டிரம்ப்பின் அதிக வரி விதிப்பால் உலக பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் இன்று பல லட்சம் கோடிகளை இழந்துள்ளனர். இதேபோன்றதொரு நிகழ்வு, 1987 அக். 19ஆம் தேதி திங்கள்கிழமை நிகழ்ந்தது. அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் சந்தை 22.6%, S&P 500 சந்தை 30% வீழ்ச்சியை சந்தித்தன. உலகம் முழுவதும் ஒரே நாளில் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதை நிபுணர்கள் Black Monday என அழைத்தனர்.
பிரபல ஆப்ரிக்க இசைக்கலைஞர் அமடோ பகாயோகோ (70) காலமானார். ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில், மனைவி மரியமுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தி, உலகம் முழுவதும் பிரபலமானவர் பகாயோகா. மாலி நாட்டை சேர்ந்த இவர், ஆப்ரிக்க இசையை மேற்கத்திய இசையுடன் இணைத்து சர்வதேச இசையாக பிரபலப்படுத்தியவர். பார்வைத்திறன் மாற்றுத்திறனாளியான இவர், சிறந்த கிடார் இசைக் கலைஞர் மற்றும் பாடகராவார். RIP
தேர்தலில் மின்னணு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளுடன் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ண EC-க்கு உத்தரவிடக்காேரி தொடரப்பட்ட மனுவை SC தள்ளுபடி செய்தது. இதுதாெடர்பாக டெல்லி HC-யின் தீர்ப்பை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை SC விசாரித்தது. அப்போது, ஏற்கெனவே தேர்தல் விவகாரத்தில் பலமுறை தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்டதாகவும், மீண்டும் அதே விவகாரத்தை விசாரிக்க விரும்பவில்லை என தெரிவித்தது.
மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படம் வசூலில் சக்கைப்போடு போடும் நிலையில், அவரது ‘துடரும்’ பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப். 25-ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தில், 20 ஆண்டுகளுக்கு பிறகு மோகன்லாலுக்கு ஜோடியாக ஷோபனா நடித்துள்ளார். கார் ஓட்டுநராக இருக்கும் கதாநாயகன் எதிர்கொள்ளும் பிரச்னையே படத்தின் மையக்கரு என சொல்லப்படுகிறது. லாலேட்டன் ஃபேன்ஸ்க்கு இந்த மாதம் டபுள் ட்ரீட்தான்!
முக்கியமான ஐபிஎல் போட்டியான இன்று, RCB அணியும் MI அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற MI அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளார். உலகளவில் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட இரண்டு அணிகள் மோதுவதால், இன்றைய போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வாட்ஸ் அப் தனது பயனர்களுக்காக தொடர் அப்பேட்டுகளை அளித்து வருகிறது. அதன்படி, அழைப்பு மேற்கொள்கையில் ம்யூட் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ கால் வருகையில், அழைப்பை ஏற்கும் முன்பு கேமராவை அணைக்கும் வசதியையும் அறிமுகப்படுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. வீடியோ காலின்போது எமோஜி அனுப்பும் வசதியை பரிசோதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.