news

News April 7, 2025

நடிகை ரன்யா ராவ் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

image

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவின் நீதிமன்றக் காவல் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து தங்கம் கடத்தியபோது ரன்யா ராவ் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதேபோல், தருண் ராஜூ, சாஹில் ஜெயின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 3 பேரின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் கோர்ட் மீண்டும் அதை நீட்டித்துள்ளது.

News April 7, 2025

ரேஷன் கடைகளுக்கு இந்த வாரம் 3 நாட்கள் விடுமுறை

image

வருகிற 10ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி ஆகும். அன்றைய நாள் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் வருகிற வெள்ளிக்கிழமை ( ஏப்.11), சனிக்கிழமை (ஏப்.12) ஆகிய 2 நாட்களும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ஆகும். அடுத்தடுத்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், அதற்கேற்ப ரேஷன் பொருட்களை வாங்க திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள்.

News April 7, 2025

25 பந்துகளில் அரைசதம்

image

MIக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் RCB கேப்டன் ரஜத் பட்டிதார் வெறும் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். மேலும் அவர், 32 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அணியை வலுவான இடத்திற்கு கொண்டு சேர்த்திருக்கிறார். தொடக்க வீரர் விராட் கோலி 42 ரன்களில் 67 ரன்கள் குவித்தார். படிக்கல் 37 ரன்களும் ஜித்தேஷ் ஷர்மா 40* ரன்களும் எடுத்து RCB அணியின் டோட்டலை 221 ரன்களாக உயர்த்தினர்.

News April 7, 2025

என்னப்பா RCB! இப்படி பண்ணிட்டீங்க?

image

MIக்கு எதிரான IPL போட்டியில், RCB அணி பந்தை நான்கு புறங்களிலும் சிதற விட்டனர். டாஸ் வென்ற MI கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். ஆகையால் பேட்டிங்கை தொடங்கிய RCB அணியின் தொடக்க வீரர் சால்ட் 4 ரன்களில் அவுட் ஆனாலும், கோலி, படிக்கல், பட்டிதார், ஜித்தேஷ் ஷர்மா என அனைவரும் அதிரடி ஆட்டம் ஆடினர். 20 ஓவர்கள் முடிவில் RCB 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்துள்ளது.

News April 7, 2025

GBU திரைப்படத்திற்கு U/A சான்று

image

அஜித்குமார், திரிஷா நடிப்பில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் ‘Good, Bad, Ugly’ படத்திற்கு U/A சான்று வழங்கியிருக்கிறது தணிக்கை வாரியம். மொத்தம் 140 நிமிடங்கள் 15 நொடிகள் கொண்ட இப்படத்தை 139 நிமிடங்கள் 52 நொடிகளாக குறைக்கச் சொல்லியும் வலியுறுத்தியுள்ளது. மேலும், 1 நிமிடம் 41 நொடிகளுக்கான காட்சியை மாற்றவும் தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. இறுதியில் U/A சான்றுடன் படம் வெளியாகவுள்ளது.

News April 7, 2025

தேச ஒற்றுமைக்கு குந்தகம்.. சட்டம் சொல்வதென்ன?

image

தேச ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பது சட்டப்படி கடுமையான குற்றமாகும். இந்த செயல்களில் ஈடுபடுவோருக்கு என்ன தண்டனை அளிக்கப்படும் என்பது குறித்து பிஎன்எஸ் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் 152ஆவது பிரிவில், தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்போருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்படும் அல்லது அபராதத்துடன் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

News April 7, 2025

பிரபல கால்பந்து வீரர் மரணம்

image

கொலம்பியாவின் கால்பந்து ஜாம்பவானும், பயிற்சியாளருமான ஜோர்கெ பொலானோ (47) காலமானார். நல்ல பிட்னெஸுடன் இருந்த அவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கொலம்பியா கால்பந்தை உலக தரத்துக்கு உயர்த்தியவர்களில் ஒருவரான இவர் 1998-ம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தார். கோபா இத்தாலியா கோப்பையையும் வென்றிருக்கிறார். இவரின் மறைவுக்கு கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 7, 2025

வாவ் மோடிஜி வாவ்.. கார்கே கிண்டல்

image

கச்சா எண்ணெய் விலை 41% குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு பதிலாக, 2% கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பதை ‘வாவ்’ என காங். தலைவர் கார்கே கிண்டல் அடித்துள்ளார். அரசாங்கம் கும்பகர்ண தூக்கத்தில் இருப்பதால், பங்குச்சந்தையில் ஒரே நாளில் ₹19 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிலிண்டர் விலையையும் ஏற்றி காயத்தில் உப்பைத் தேய்க்க அரசு வந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.

News April 7, 2025

தினம் ரூ.200 மட்டுமே… முடிவில் ரூ.28 லட்சம்

image

தினம் ₹200 என்ற அளவில், மாதம் ₹6000 முதலீடு செய்தால், ₹28 லட்சம் வரை பெறும் Jeevan Pragati திட்டத்தை LIC வழங்குகிறது. 12 – 45 வயதினர் இதில் இணையலாம். 12 முதல் 20 ஆண்டு பாலிசி காலம் கொண்ட இத்திட்டத்தில், 20 ஆண்டு முடிவில் ₹14,40,000 கிடைக்கும். இதனுடன் கூடுதல் பெனிபிட்களுடன் சேர்த்து அதிகபட்சமாக ரூ.28 லட்சம் வரை பெறலாம். சேமிப்புடன் லைப் இன்ஷூரன்ஸும் வேண்டுவோருக்கு இது சிறந்த திட்டமாகும்.

News April 7, 2025

இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

image

டாய்லெட் Flush-ல் 2 விதமான பட்டன்கள் கொடுக்கப்பட்டிருப்பது ஏன் என இதுவரை நீங்கள் யோசித்தது உண்டா? நீர் பயன்பாட்டை குறைக்கவே 2 பட்டன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. திரவக் கழிவுகளை அகற்ற, குறைவான நீரை வெளியேற்றும் சின்ன பட்டனும், திடக் கழிவுகளை அகற்ற அதிகளவு நீரை அனுமதிக்கும் பெரிய பட்டனும் பயன்படுத்தப்படுகின்றன. இதை நாம் சரியாக பயன்படுத்தினால், ஆண்டுக்கு 20,000 லிட்டர் நீரை சேமிக்க முடியும்.

error: Content is protected !!