news

News April 8, 2025

தம்பியின் கண்முன்னே 10 வயது சிறுமி தற்கொலை!

image

தாய் திட்டியதற்காக 10 வயது சிறுமி, தம்பியின் கண்முன்னே தற்கொலை செய்து கொண்ட அவலம் அரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்த கெளசல்யா கூலி வேலைக்கு சென்ற நிலையில், தனது மகளிடம் வீட்டு வேலையை செய்யக் கூறியுள்ளார். ஆனால், அதனை செய்யாமல் சிறுமி, விளையாடிக் கொண்டிருந்ததை தாய் கண்டித்துள்ளார். இதனால், மன உளைச்சலிலிருந்த ரோஷினி (10) தனது 5 வயது தம்பியின் கண்முன்னே உயிரை மாய்த்துக்கொண்டார். பெரும் சோகம்..!

News April 8, 2025

IPL BREAKING: RCB அணி த்ரில் வெற்றி

image

மும்பை அணிக்கு எதிரான த்ரில்லான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருக்கிறது. இப்போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி மும்பை அணிக்கு 222 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதனை சேஸ் செய்து ஆடிய மும்பை அணி வீரர்கள் பாண்டியா & திலக் வர்மாவின் அதிரடியால் மும்பை வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால், இறுதியில் விக்கெட்டுகளை மளமளவென சரிந்ததால் இறுதி ஓவர் வரை போராடி மும்பை தோல்வியைத் தழுவியது.

News April 8, 2025

முதலீட்டாளர்களுக்கு சின்ன நம்பிக்கை

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று 3.8% சரிந்ததால், முதலீட்டாளர்கள் கடுமையான மன உளைச்சலில் உள்ளனர். நாளையும் இதே நிலை தொடர்ந்தால், என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், சந்தையின் போக்கை முன்கூட்டியே சுட்டிக் காட்டும் கிஃப்ட் நிஃப்டி, தற்போது 30 புள்ளிகள் உயர்ந்து காணப்படுகிறது. இது பெரிய நம்பிக்கையை அளிக்காவிட்டாலும், இறங்காமல் இருக்கிறதே என்று முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்

News April 8, 2025

PM இன்டர்ன்சிப்: யார்-யார் விண்ணப்பிக்கலாம்?

image

PM இன்டர்ன்சிப் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 மத்திய அரசு அளிக்கிறது. இத்திட்டத்திற்கு ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு யார்-யார் விண்ணப்பிக்கலாம் என பார்க்கலாம். இந்தத் திட்டத்திற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பாக 21- 24 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. IIT, IMM-ல் படித்தோர், CA, CMA படித்தோர் விண்ணப்பிக்க முடியாது.

News April 8, 2025

சீனாவுக்கு வரி மேல் வரி

image

மற்ற நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து வரும் வரியால் பெரும் வர்த்தகப் போரே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீனா மீது மேலும் 50% வரி விதித்து அதிர்ச்சியளித்திருக்கிறார் டிரம்ப். இதனால், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு 84% வரி செலுத்த வேண்டும். அமெரிக்காவுக்கு சீனா 34% வரி விதித்த அடுத்த நாளே தனது வரியை உயர்த்தியிருக்கிறார் டிரம்ப்.

News April 8, 2025

குறட்டைக்கு மருந்து கண்டுபிடிச்சிருக்கேன்: ஆர்.கே.

image

குறட்டைக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக நடிகர் ஆர்.கே. தெரிவித்துள்ளார். உலகத்திலேயே குறட்டைக்கு மருந்து கிடையாது என்றும், தாம்தான் அதை முதன்முதலில் கண்டுபிடித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த மருந்தை அனைவருக்கும் இலவசமாக தருவதாகவும் ஆர்.கே. குறிப்பிட்டுள்ளார். அந்த மருந்தை 7 நாட்கள் தாெடர்ந்து உச்சந்தலையில் தடவ வேண்டும், அப்படி தடவினால் குறட்டை வரவே வராது என்றும் அவர் கூறியுள்ளார்.

News April 8, 2025

ராசி பலன்கள் (08.04.2025)

image

➤மேஷம் – களிப்பு ➤ரிஷபம் – இன்சொல் ➤மிதுனம் – புகழ் ➤கடகம் – ஆதரவு ➤சிம்மம் – சலனம் ➤கன்னி – கவனம் ➤துலாம் – பக்தி ➤விருச்சிகம் – ஆர்வம் ➤தனுசு – களிப்பு ➤மகரம் – ஜெயம் ➤கும்பம் – உதவி ➤மீனம் – தாமதம்.

News April 8, 2025

நாேயில்லாமல் வாழனுமா? சந்திரபாபு நாயுடு அட்வைஸ்

image

நோயில்லாமல் வாழ உப்பு, எண்ணெய், சர்க்கரை பயன்பாட்டை குறைக்க ஆந்திர CM சந்திரபாபு நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார். தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி செய்ய வேண்டும், தினமும் அரை மணி நேரம் மெடிடேசன், பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 4 பேர் கொண்ட குடும்பம் மாதத்திற்கு 600 கிராம் உப்பு, 2 லிட்டர் சமையல் எண்ணெய், 3 கிலோ சர்க்கரை பயன்படுத்தினாலே போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News April 8, 2025

ஹீரோயினாகும் குஷ்பூ மகள்?

image

குஷ்பூவின் மூத்த மகள் அவந்திகா ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இவருடைய போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்தது. அப்போது முதலே சினிமாவில் நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஒருவேளை அவர் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தால், தனது அம்மாவை போல், முன்னணி நடிகையாக வலம்வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

News April 7, 2025

நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்

image

பாஜக மாநிலத் தலைவருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் நயினார் நாகேந்திரன் திடீரென டெல்லிக்கு பயணப்பட்டுள்ளார். நாளை காலை அவர் அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில், புதிய தலைவரை தேடும் பணியில் டெல்லி பாஜக தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!