India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 229 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. ▶பொருள்: சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.
‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜயை வைத்து ‘ரெட்ட தல’ படத்தை இயக்கியுள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இந்நிலையில் ரெட்ட தல திரைப்படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
RCB-க்கு எதிரான ஆட்டத்தில் 222 ரன்கள் இலக்கை நோக்கிய விளையாடிய MIக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பின்னர் திலக்குடன் இணைந்த ஹர்திக் வாணவேடிக்கை காட்டி அசத்தினார். 15 பந்துகளில் 42 ரன்களை அடித்து அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். ஆனால் இறுதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விழுந்ததால் MI தோல்வியை தழுவியது. போட்டி முடிந்த போது ஹர்த்திக் மிகவும் சோகமாக இருக்கும் காட்சிகளை காணமுடிந்தது.
போராட்டக்களத்தில் தலைவனை தேடுங்கள், பொழுதுபோக்கு தளத்தில் அல்ல என சீமான் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கு, கேளிக்கையில் நாட்டம் கொண்ட மக்களை புரட்சிக்கு தயார் செய்வது கடினம் எனவும், கேளிக்கை வேறு, போராட்டம், புரட்சி வேறு எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், உன் மொழி உணராதவன் உன் இறைவனாக இருக்க முடியாது, உன் வலி உணராதவன் உன் தலைவனாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
▶ஏப்ரல் – 08 ▶பங்குனி – 25 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 0:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: ஏகாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம் ▶நட்சத்திரம்: ஆயில்யம் 12.58
வீட்டில் வேலை செய்யும் பெண்ணை பிரஜ்வால் ரேவண்ணா MP, 3 ஆண்டுகளாக வீடியோவை காட்டி பிளாக்மெயில் செய்து வன்புணர்வு செய்தது தெரியவந்துள்ளது. பல பெண்களை வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரேவண்ணாவிற்கு எதிராக சிறப்பு புலனாய்வு போலிசார் பதிவு செய்த குற்றப்பத்திரிக்கை மூலம் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல பெண்களை சீரழித்ததும் தெரியவந்துள்ளது.
நடுவானில் விமானத்தில் பெண் பயணி திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் உ.பி.யை சேர்ந்த பெண் ஒருவர் பயணித்தார். நடுவானில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இன்று (ஏப்ரல் 07) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (ஏப்ரல் 08) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ‘சந்தோஷ்’ மற்றும் ‘நசீர்’ படங்களை பொதுவெளியில் திரையிட்டு சிறைக்கு செல்லவும் தயாராக இருப்பதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சாதி, மத பாகுபாட்டை உரக்க சொல்லும் இப்படங்களை திரையிடுவது பெரிய குற்றம் ஒன்றும் இல்லை எனவும், ஏற்கனவே திரையிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், லைசன்ஸை கேன்சல் செய்துவிடுவதாக பிரசாத் லேப் அச்சுறுத்தபட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.