news

News April 8, 2025

PM மோடி, அமித்ஷாவை அவமதிக்கக் கூடாது: திருமா

image

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களை விமர்சனம் என்ற பெயரால், அவமதிக்கும் வகையில் பேசிவிடக் கூடாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனிநபராக முரண்பாடு இருந்தாலும், அவர்களின் பதவி பொதுவானது என அவர் குறிப்பிட்டுள்ளார். வக்ஃப் வாரிய சட்ட மசோதாவிற்கு எதிராக பாஜகவை கண்டித்து இன்று விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

News April 8, 2025

திமுக அரசு இதை செய்தால் ₹468.50க்கு சிலிண்டர்

image

சிலிண்டர் விலை உயர்வை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்தும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இப்போதே திமுக அரசு ₹100 மானியம் கொடுத்தால், உஜ்வாலா பயனளிகளுக்கு ₹300 மானியம் உட்பட ஏழைகளுக்கு ₹468.50க்கு சிலிண்டர் கிடைக்கும் என பாஜகவினர் பதிலடி கொடுக்கின்றனர்.

News April 8, 2025

இன்ஸ்டாவில் கலக்கும் ரகுல் பிரீத் சிங்

image

உலக சுகாதார தினத்தையொட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிரித்துக்கொண்டே இருங்கள்; மகிழ்ச்சியே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த மருந்து என்றும் ரகுல் பிரீத் சிங் பதிவிட்டுள்ளார். தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். மேலே இருக்கும் புகைப்படங்களை பாத்தாச்சா?

News April 8, 2025

பாஜகவிற்கான நன்கொடை 200% மேல் அதிகரிப்பு

image

கடந்த நிதியாண்டில் தேசிய கட்சிகளில் அதிகபட்சமாக பாஜகவுக்கு ₹2,243 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. 2022-23 நிதியாண்டில் ₹719 கோடியாக இருந்த பாஜகவின் நன்கொடை தற்போது 200% மேல் அதிகரித்துள்ளது. பாஜகவிற்கு அதிகபடியாக அக்மி சோலார் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து ₹51 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. எ.டி.ஆர். அறிக்கையின்படி காங்கிரஸுக்கு ₹281 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது.

News April 8, 2025

சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வந்தது

image

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ₹818.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ₹50 உயர்ந்து ₹868.50-க்கு விற்கப்படுகிறது. கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை உயர்வு அமலாகியுள்ளது. உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ₹300 மானியத்தோடு, சிலிண்டர் விலை ₹568.50 ஆகவும் விற்பனையாகிறது.

News April 8, 2025

வெற்றியின் பக்கம் CSKவின் பார்வை திரும்புமா?

image

முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய CSK அடுத்த 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இன்று சண்டிகரில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை CSK எதிர்கொள்ள உள்ளது. இன்றைய போட்டியிலாவது CSK முழு திறனையும் காட்டுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கொல்கத்தாவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் KKR – LSG அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் விளையாடிய 4 போட்டிகளிலும் தலா 2ல் வெற்றி பெற்றுள்ளன.

News April 8, 2025

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.8) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கோபால் சுன்காரா உத்தரவிட்டுள்ளார். இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..

News April 8, 2025

வருண் குமார் வழக்கு… சீமானுக்கு பிடிவாரண்ட்?

image

டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கு நேற்று திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் சம்மன் கொடுக்கப்பட்ட சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதியளிக்க அவரது வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்ற நீதிபதி, சீமான் இன்று காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

News April 8, 2025

ISL இறுதி போட்டியில் மோகன் பகான்

image

11வது ISL இறுதி போட்டிக்கு மோகன் பகான் அணி முன்னேறியது. 2-வது அரையிறுதியின் 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் மோகன் பகான் – ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. இதில் மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை தோற்கடித்தது. முதலாவது சுற்றில் ஜாம்ஷெட்பூர் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. இரு ஆட்டங்களின் கோல்களின்(3-2) அடிப்படையில் மோகன் பகான் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

News April 8, 2025

மிரட்டல் கடிதம்.. அவசரமாக தரையிறங்கிய விமானம்..

image

255 பயணிகளுடன் ஜெய்பூரில் இருந்து மும்பை சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து வெடி குண்டு மிரட்டல் கடிதம் கிடைத்துள்ளது. பயணிகள் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!