news

News April 8, 2025

‘பிளாக்மெயில்’ செய்வதை ஏற்க முடியாது: சீனா அதிரடி!

image

வரிக்கு மேல் வரி விதித்து ‘பிளாக்மெயில்’ செய்வதை ஏற்க முடியாது என அமெரிக்காவுக்கு, சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க பொருட்கள் மீதான பரஸ்பர வரியை வாபஸ் பெறாவிட்டால் கூடுதலாக 50% வரியை சீனப் பொருட்களுக்கு விதிப்போம் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இதனால், எரிச்சலடைந்த சீனா, ‘பிளாக்மெயில்’ செய்வதற்கு பதிலாக, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

News April 8, 2025

பீன்ஸ் விலை திடீர் சரிவு!

image

சென்னை கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் விலை சரிவைக் கண்டுள்ளது. நேற்று ஒரு கிலோ ₹100-க்கு விற்பனையான நிலையில், இன்று ₹60க்கு விற்பனையாகிறது. அதேவேளையில் மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழை காரணமாகத் தக்காளி விலை சற்று உயர்ந்து 1 கிலோ தக்காளி ₹40க்கு விற்பனையாகிறது. மேலும், 1 கிலோ கேரட் – ₹50, உருளைக்கிழங்கு – ₹20, சின்ன வெங்காயம் – ₹70, பெரிய வெங்காயம் – ₹25க்கு விற்பனையாகிறது.

News April 8, 2025

மாநிலங்களவையில் அன்புமணி ‘அதிக நாள் ஆப்சென்ட்’

image

நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், ( ஜன.31 to ஏப்.4) தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை MPக்களின் வருகைப்பதிவு விவரம் வெளியாகியுள்ளது. மொத்தம் 26 நாட்கள் அவை நடந்துள்ள நிலையில், அதிகபட்சமாக திமுக MPக்கள் திருச்சி சிவா, கிரிராஜன், அதிமுக MP தம்பிதுரை ஆகியோர் அனைத்து நாட்களும் வருகை தந்துள்ளனர். ஆனால், மிக குறைந்தபட்சமாக, அன்புமணி வெறும் 6 நாள் மட்டுமே அவைக்கு சென்றுள்ளார்.

News April 8, 2025

பயங்கர நிலநடுக்கம்

image

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு டக்கு சுமத்ரா தீவில் நள்ளிரவு 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து, அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மக்கள், சாலையில் தஞ்சமடைந்தனர். இதன் பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

News April 8, 2025

இளசுகளை சுண்டி இழுக்கும் கயாதுவின் க்ளிக்ஸ்…!

image

டிராகன் படம் மூலம் இளைஞர்களை கிறங்க வைத்தவர் நடிகை கயாது லோஹர். சோஷியல் மீடியாவில் எப்பவும் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். புன்னகை பூக்கும் முகத்துடன் இருக்கும் அவரை கண்டு ரசிகர்கள் கமெண்ட்டில் ஹார்ட்டின் விட்டு வருகின்றனர். அவர் தற்போது இதயம் முரளி, சிம்புவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். நடிகை கயாதுவை உங்களுக்கு பிடிக்குமா?

News April 8, 2025

ரேஷன் கடை ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்!

image

PDS-க்கு தனித் துறை, ஊதிய உயர்வு உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளனர். பல துறைகளின் கட்டுப்பாட்டில் ரேஷன் கடைகள் இயங்குவதால் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், இதனைக் களைய வேண்டும் என அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கருப்புச் சட்டை அணிந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால், ரேஷன் கடைகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News April 8, 2025

கண் பார்வைையை பாதிக்கும் ரீல்ஸ்: டாக்டர்கள் ‘அலர்ட்’

image

ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். ரீல்ஸ் சிறியதாக இருந்தாலும், கண் ஆரோக்கியத்தில் வாழ்நாள் முழுக்க பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அலர்ட் செய்கின்றனர். எனவே, குழந்தைகளை அதிக நேரம் மொபைலில் மூழ்கவிடாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். பெரியவர்களும் மொபைல் பயன்பாட்டை குறைப்பது நல்லது என அட்வைஸ் செய்கின்றனர்.

News April 8, 2025

குறிவைக்கப்படுகிறாரா வேல்முருகன்?

image

சபாநாயகர் தன்னை மட்டும் குறிவைத்து பேசவிடாமல் தடுக்கிறார் என தவாக தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் சபாநாயகர் முன்பாக கை நீட்டி பேசியதால் அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்வதாக வேல்முருகனை CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். அப்போது முதலே உரசல் ஆரம்பித்திருந்தது. இந்தச் சூழலில், அவையில் தான் பேச எழுந்தாலே சபாநாயகர் எரிச்சலடைகிறார் என விமர்சித்துள்ளார்.

News April 8, 2025

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

image

தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து, தென்மேற்கு வங்கக்கடல் வழியாகத் தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் கூடிய பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2025

பிளஸ் 2 ரிசல்ட் தேதியில் மாற்றம்?

image

பிளஸ் 2 ரிசல்ட் முன்கூட்டியே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் மே 5-ல் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கேற்றார் போல் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 83 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, மே 9-ம் தேதி ரிசல்ட் வெளியாகும் எனக் கூறப்பட்டது.

error: Content is protected !!