India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திர தினத்தையொட்டி நாளை மாலை ராஜ்பவனில் நடக்கவுள்ள தேநீர் விருந்தை CM ஸ்டாலின் புறக்கணித்துள்ளார். ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று மரபாக நடக்கும் இவ்விழாவை ஏற்கெனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தின் நலனுக்கு எதிராக கவர்னர் ரவி செயல்படுவதால் அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக CM ஸ்டாலின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம், பட்டானூரில் ஆக. 17-ம் தேதி நடக்கும் PMK சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என ராமதாஸ் கூறியுள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சோஷியல் மீடியாவில் தன்னையும், GK மணி குறித்தும் ஒரு கும்பல் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறது என்றார். மேலும், கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்விக்கு அங்கே வாருங்கள் முடிவு கிடைக்கும் என சூசகமாக கூறியுள்ளார்.
டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், இந்திய பொருள்களுக்கு மேலும் வரியை அதிகரிப்போம் என அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெசண்ட் எச்சரித்துள்ளார். உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக டிரம்ப் – புடின் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முன்னதாக, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி, போரில் ரஷ்யாவிற்கு உதவுவதாக கூறி இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரிவிதித்தது.
தூய்மை பணியாளர்கள் கைது விவகாரத்தில் அரசுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், X தளத்தில் #பாசிசக்கோமாளி_ஸ்டாலின் டிரெண்டாகி வருகிறது. அதில், திமுக அரசு மற்றும் CM ஸ்டாலினுக்கு எதிராக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 16,000 பேருக்கு மேல் கருத்து பதிவிட்டு இந்திய டிரெண்டிங்கில் இடம் பிடித்த நிலையில், தற்போது திமுக ஐடி விங் தரப்பினர், அரசுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
ரஜினி நடிப்பில் இன்று வெளியாகி தியேட்டர்களை திருவிழாக் கோலமாக மாற்றியுள்ள கூலி திரைப்படம், சில மணிநேரங்களிலேயே ஆன்லைனில் கசிந்துள்ளது. படத்தின் HD PRINT தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட டோரண்ட் இணையதளங்களில் இலவசமாக டவுன்லோடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை ஆன்லைனில் வெளியிட 36 இணையதளங்களுக்கு ஐகோர்ட் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, தி.மலை, புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க!
*தூய்மை பணியாளர்களுக்கு நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தனித் திட்டம். *பணியின் போது இறக்க நேரிட்டால், குடும்பத்தினருக்கு ₹10 லட்சம். *சுய தொழில் தொடங்குவோருக்கு ₹3.50 லட்சம் மானியம். கடனை தவறாமல் செலுத்தினால் 6% வட்டி மானியம். *குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும், அனைத்து கட்டணங்களும் வழங்கும் வகையில் ‘புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம்’. *வசிப்பிடத்திலேயே சொந்த வீடு. *இலவச காலை உணவு.
திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் OTP பெற இடைக்காலத் தடை தொடரும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், DMK தரப்பில் OTP பெறவில்லை என கூறிய நிலையில், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், OTP எண் பெறுவது சட்டவிரோதம் எனக் கூறிய கோர்ட் மத்திய, மாநில அரசுகள், DMK பொதுச்செயலாளர் பதில் அளிக்கவும் ஆணையிட்டுள்ளது.
இந்தியாவில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து WHO ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.
▶இந்தியாவில் ஆண்டுக்கு 18000-20000 பேர் ரேபிஸ் நோயால் இறக்கின்றனர். ▶இந்தியாவில் 1 நாளைக்கு 10,000-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு ஆளாகின்றனர். ▶ 2024-ல் நாடு முழுவதும் 37.2 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு. ▶2022-2024-ல் அதிக நாய் கடி சம்பவங்கள் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது(13.5 லட்சம்)
ரசிகரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அவர்கள் உள்பட 17 பேர் கைதாகி இருந்தனர். தர்ஷன், பவித்ரா உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் ஜாமின் வழங்கியதால் அவர்கள் விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், ஜாமினை ரத்து செய்து SC உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.