India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘மனிதரிடம் நீங்கள் காணும் வியப்பான விஷயம் எது?’ என தலாய்லாமாவிடம் கேட்க,“பணத்தை சம்பாதிக்க ஆரோக்கியத்தை மறுத்து உடல்நலத்தை கெடுத்து கொள்கிறார்கள். சம்பாதித்தபின் உடல்நலனுக்கு செலவிடுகின்றனர். அதேபோல எதிர்காலம் பற்றிய பதற்றத்தில் நிகழ்காலத்தை அனுபவிக்க தவறுகிறார்கள்… இவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை, எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. எப்போதும் வாழாதவர்களாகவே இருந்து இறந்து போகிறார்கள்” என்றார்.
CSK வீரர் Devald Brevis-க்கு கடந்த IPL சீசனில் ஜாக்பாட் அடித்ததாக, அந்த அணியின் ஸ்டார் பவுலர் அஸ்வின் தெரிவித்துள்ளார். அவரை வாங்குவதில் கடும் போட்டி நிலவியதால், அதிக விலை கொடுத்து எடுத்ததாக கூறியுள்ளார். அவரது அடிப்படை விலை ₹75 லட்சமாக இருந்த நிலையில், ₹2.2 கோடி கொடுத்து CSK வாங்கியதாக தெரிவித்துள்ளார். குர்ஜப்னீத் சிங்கிற்கு காயம் ஏற்பட்டதால் மாற்று வீரராக Brevis வந்தார்.
➤ மேஷம் – பக்தி ➤ ரிஷபம் – பாசம் ➤ மிதுனம் – பயம் ➤ கடகம் – பகை ➤ சிம்மம் – விவேகம் ➤ கன்னி – பாராட்டு ➤ துலாம் – பிரீதி ➤ விருச்சிகம் – உயர்வு ➤ தனுசு – வரவு ➤ மகரம் – தடங்கல் ➤ கும்பம் – வெற்றி ➤ மீனம் – இன்சொல்.
இந்திய ஜனநாயகம் பல சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அவர், இந்திய அரசியலமைப்பு உலகத்திற்கு தேவையான மாடல் என கூறியுள்ளார். மேலும், இந்திய ராணுவம் எந்த சூழலையும் சமாளிக்கும் என்பது ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிரூபித்துள்ளதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமாக அது வரலாற்றில் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சீனா உடனான எல்லை வழி வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா முடிவு செய்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் எல்லை வழியாக வர்த்தகத்தை தொடங்க சீன தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 கல்வான் மோதலுக்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை வழி வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸின் தந்தை வெஸ் பயஸ் (80) காலமானார். இவர், 1972 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றவர் ஆவார். உடல்நலக் குறைவு & வயது மூப்பு காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் வீரேன் ரஷ்குயின்ஹா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஓய்வு நேரம் குறைந்தால், அதிக அளவு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் ஓஹியோ பல்கலை., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைவாக ஓய்வு கொண்டவர்கள் குறைந்த அளவிலேயே மகிழ்ச்சியை அனுபவித்து வருகின்றனர் என கூறும் அந்த ஆய்வு, அளவுக்கு அதிகமாக ஓய்வு எடுப்பது உடல்/மன நலனை பாதிக்கும் என்கிறது. மிக அதிக ஓய்வு பிபி, மன அழுத்தம், துக்கமின்மை, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துமாம்.
வட இந்தியாவில் இந்துக்கள் சிவனுக்காக அசைவம் சாப்பிடாமல் 1 மாதம் சவான் விரதம் இருப்பர். ஆக., 9-ல் விரதம் முடிந்த கையோடு, கறி கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்துள்ளது. விளைவாக, ஒரே நாளில் ₹130 கோடிக்கு ஆடு, கோழி இறைச்சிகள் பீகாரில் விற்பனையாகியுள்ளது. விரதம் இருந்த காலக்கட்டத்தில் உ.பி.யில் அசைவ உணவகங்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு ரிலீஸில் ‘கூலி’ படம் ஆல்-டைம் ரெக்கார்ட் செய்துள்ளது. இப்படம், வட அமெரிக்காவில் பிரீமியர் ஷோவில் அதிக வசூல் செய்த ($3,042,756= ₹24.26Cr) தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதை விநியோக நிறுவனமான பிரத்யங்கிரா சினிமாஸ் தன் X பக்கத்தில் அறிவித்துள்ளது. ரஜினி – லோகேஷ் காம்போவில் உருவாகியுள்ள இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. நீங்கள் பார்த்துவிட்டீர்களா? படம் எப்படி?
சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படம் குறித்த தகவலை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். இதுவரை SK நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்திற்கான திரைக்கதை பணிகள் முடிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வித்தியாசமான கதையம்சத்தில் இப்படம் இருக்கும் எனவும், அதே சமயம் அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.