news

News December 25, 2025

ஹெர்பல் டீ குடிப்போருக்கு.. FSSAI விடுத்த வார்னிங்!

image

மூலிகை (அ) பிற தாவரங்கள் மூலம் உருவாக்கப்படும் பானங்களுக்கு ‘Herbal Tea’, ‘Flower Tea’ போன்றவற்றில் Tea வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என FSSAI அறிவித்துள்ளது. தேயிலையில் இருந்து தயாரிக்கப்படாத எந்த பானத்திற்கும் Tea எனப் பெயர் வைக்கக்கூடாது எனவும் வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. காலை, மாலையில் டயட் என்ற பெயரில் ‘Herbal Tea’ குடிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 25, 2025

இந்தியாவின் முதல் அரசி: விஜய்

image

வேலுநாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி தனது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். தனது X பதிவில் விஜய், வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடி வெற்றி கண்டவர் வேலுநாச்சியார் என்றும், அவர் இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணியவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

News December 25, 2025

முக்கிய மாவோயிஸ்ட் தளபதி என்கவுண்டர்

image

தலைக்கு ₹1.1 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட மாவோயிஸ்ட் முக்கிய தளபதி கணேஷ் உய்க்கை (69) பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்தனர். ஒடிசாவில் உள்ள ரம்பா வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 2 பெண்கள் உள்பட மொத்தம் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். CRPF, BSF என மொத்தம் 23 குழுக்கள் இந்த வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், கொல்லப்பட்டவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

News December 25, 2025

அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை ராதிகா

image

அரசியலில் கலக்கி வரும் நடிகை ராதிகா, மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர முடிவு செய்துவிட்டாரோ..! என பலர் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில், முற்றிலும் அடையாளம் தெரியாத அளவில் ‘கிழவி’ கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். இப்படம் வரும் பிப்.20-ல் வெளியாகவுள்ளது.

News December 25, 2025

தமிழகத்திற்கு மீண்டும் மழை அலர்ட்

image

TN-ல் அடுத்த 7 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இன்று வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தென் கடலோர TN மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் குடை, ரெயின் கோட் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் மக்களே!

News December 25, 2025

Thanks Vs Thank You.. வித்தியாசம் தெரியுமா?

image

நாம் பயன்படுத்தும் Thanks, Thank You, நன்றி என்ற ஒரே அர்த்தத்தை கொடுத்தாலும், அதில் சிறிய வித்தியாசம் உண்டு. ‘Thanks’ நண்பர்கள், குடும்பத்தினர், நெருக்கமானவர்களிடம் இயல்பாக பேசும்போது சொல்லலாம். ஆனால், மேலதிகாரிகள், ஆசிரியர்கள், முன்பின் தெரியாதவர்களிடம் பேசும்போது ‘Thank You’ என்று சொல்வதுதான் முறை. அது மரியாதையையும், பண்பையும் வெளிப்படுத்தும். இந்த சின்ன மாற்றம் உங்கள் பேச்சை சிறப்பாக மாற்றும்!

News December 25, 2025

அதிமுக + டிடிவி + ஓபிஎஸ்.. உறுதியாக தெரிவித்தார்

image

NDA கூட்டணியில் தற்போது TTV தினகரன், OPS ஆகியோர் இல்லை என நயினார் நாகேந்திரன் உறுதிபட கூறியுள்ளார். NDA கூட்டணியில் AMMK-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக வெளியான தகவலுக்கு TTV தினகரன் மறுப்பு தெரிவித்திருந்தார். கூட்டணி விவகாரத்தில் அடுத்தடுத்து மாறுபட்ட தகவல்கள் வெளியான நிலையில், நயினார் முதல் முறையாக TTV தினகரன், OPS இருவரும் தங்கள் கூட்டணியில் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

News December 25, 2025

கோவை மாணவியுடன் கலந்துரையாடிய PM

image

‘சன்சாத் கேல் மஹோத்சவ்’ போட்டிகளின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக பங்கேற்ற PM மோடி, இளம் வீரர்களுடன் கலந்துரையாடினார். குறிப்பாக, கோவை மாணவி நேசிகாவிடம் அவர் விளையாடும் கபடி, சைக்கிள் போட்டிகளில் அதிகம் பிடித்தது எது என்று கேட்க, மாணவி துடிப்புடன் ‘கபடி’ என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய PM, வீரர்களின் உற்சாகம், தன்னம்பிக்கை இந்தியாவின் வலிமையை பறைசாற்றுவதாக குறிப்பிட்டார்.

News December 25, 2025

பயிர் இழப்பீடு வழங்குவதில் துரோகம்: அன்புமணி

image

கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து தற்போது தான் இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். போன ஆண்டுக்கே இழப்பீடு வழங்கப்படாத நிலையில், இந்தாண்டுக்கான பயிர் இழப்பீடு எப்போது வழங்கப்படும் என்பது தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் திமுக அரசின் அலட்சியமும், துரோகமும் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 25, 2025

மகாராஷ்டிரா EX அமைச்சர் காலமானார்

image

EX அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுருப்சிங் நாயக்(88) உடல்நலக்குறைவால் காலமானார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் 1978 முதல் தொடர்ச்சியாக 8 முறை நவாப்பூர் தொகுதியின் MLA-வாக இருந்துள்ளார். ‘பழங்குடியினரின் சேவகன்’ என சுருப்சிங்கிற்கு Ex PM இந்திரா காந்தி புகழாரம் சூட்டியிருக்கிறார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், மகாராஷ்டிரா DCM அஜித் பவார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIP

error: Content is protected !!