news

News April 8, 2025

அதிரடி காட்டிய LSG ஓப்பனர்ஸ்

image

கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதில், மார்க்ரம் 28 பந்துகளுக்கு 47 ரன்கள் எடுத்து, ஹர்ஷித் ராணா பந்தில் போல்ட் ஆனார். மற்றொரு வீரரான மார்ஷ், அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். இதுவரை, 11 ஓவர்கள் பேட்டிங் செய்திருக்கும் லக்னோ அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் குவித்துள்ளது.

News April 8, 2025

பாதாளத்துக்கு சென்று மீண்ட ஷேர் மார்கெட்

image

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று வரலாற்று சரிவை சந்தித்த நிலையில், இன்று சற்று மீட்சியடைந்திருக்கின்றன. டிரம்ப்பின் அதிரடி பொருளாதார அறிவிப்புகளால் நேற்று நிஃப்டி சுமார் 885 புள்ளிகள் சரிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர்களின் காயத்திற்கு மருந்து போடும் விதமாக, இன்று நிஃப்டி 381 புள்ளிகள் உயர்ந்து, 22,543 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது.

News April 8, 2025

பாஜகவில் இணைந்த முன்னாள் CSK வீரர்

image

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் மகாராஷ்டிரா அணிக்காகவும், IPL-ல் CSK உள்பட பல்வேறு அணிகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளார். இந்திய அணியில் 2014-ல் அறிமுகமானார். இந்திய அணிக்காக 73 ODI-களில் விளையாடி, 1,389 ரன்களை எடுத்துள்ளார்.

News April 8, 2025

மின்சாரம் தாக்கி 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

image

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் ஆண்டாபுரத்தில் மின்சாரம் தாக்கி பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மழை காரணமாக அறுந்து கிடந்த மின்சார கம்பியை தொட்டு இளஞ்சியம், அவரின் பேரன், பேத்தி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி, வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு CM பொது நிவாரண நிதியிலிருந்து தலா ₹2 லட்சம் வழங்க அவர் ஆணையிட்டுள்ளார்.

News April 8, 2025

தமிழகத்தில் போலி என்கவுண்ட்டர்: சீமான்

image

தமிழ்நாட்டில் நடப்பது அனைத்துமே போலி என்கவுண்ட்டர்கள்தான் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல் வழக்கை முடிப்பதிலேயே மும்முரம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். அவர்களது குற்றம் தெளிவுபடுத்தப்படவில்லை என்று சீமான் பேசியுள்ளார்.

News April 8, 2025

‘D 55’ பட கதையை சொன்ன ‘அமரன்’ இயக்குநர்

image

நமது அன்றாட வாழ்க்கைக்கு உள்ளேயே இருக்கக்கூடிய பலரை பற்றிய கதைதான் ‘தனுஷ் 55’ படத்தின் கதை என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். இப்படியெல்லாம் ஆட்கள் இருக்கிறார்களா என்று நாம் உணர்வதே இல்லை எனவும், நம் வாழ்க்கை இயல்பாக இயங்க முக்கிய காரணமே இவர்கள்தான் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இன்னும் 6 மாதங்களில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

LSG முதலில் பேட்டிங்

image

ஐபிஎல் தொடரில் இன்று மதியம் ஒன்று, மாலை ஒன்று என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. கொல்கத்தா – லக்னோ இடையே நடைபெறவிருக்கும் மதியப் போட்டியில் கொல்கத்தா கேப்டன் ரஹானே டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

News April 8, 2025

விஜய்க்கு ஏமாற்ற தெரியும், அரசியல் தெரியாது: தமிழிசை

image

சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை விமர்சித்த விஜய்-க்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். ‘விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன?, பாமர மக்களுக்காக நடிக்கிறேன், குறைந்த விலையிலோ இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன்’ என இருக்க வேண்டியதுதானே, யார் தடுத்தார்கள் எனக் கூறிய அவர், விஜய்-க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ பொருளாதாரமோ தெரியாது என சாடினார்.

News April 8, 2025

கடன்களுக்கான வட்டியை குறைத்தது HDFC வங்கி

image

கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் வரை HDFC குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வருவதாக HDFC தெரிவித்துள்ளது. வட்டி குறைப்புக்கு பிறகு ஏற்கெனவே கடன் வாங்கியோருக்கான வட்டி விகிதம் 9.10% – 9.35% வரை இருக்கும் என்றும் HDFC குறிப்பிட்டுள்ளது. MCLR வட்டி விகிதம் என்பது முதலீட்டை அடிப்படையாக கொண்டு அளிக்கப்படும் கடன் மீது விதிக்கப்படும் வட்டியாகும்.

News April 8, 2025

அம்பேத்கரின் கூற்றை வாசித்து தீர்ப்பளித்த நீதிபதி

image

கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். TN அரசுக்கும், கவர்னருக்குமான இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பர்திவாலா, அண்ணல் அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டி தீர்ப்பை நிறைவு செய்துள்ளார். அந்த மேற்கோள் இதுதான், ‘‘அரசியலமைப்பு சிறப்பாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது மோசமானதாகவே இருக்கும்’’.

error: Content is protected !!