India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரலாற்றில் முதல்முறையாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க TN கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து அளித்த தீர்ப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
பிரபல நடனக் கலைஞர் ராம் சஹாய் பாண்டே(92) உடல் நலக்குறைவால் காலமானார். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த இவர் 18 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற நடன நிகழ்ச்சிகளை நடத்தி இந்தியாவின் பெருமையை உலகறிய செய்தவர். இவரது கலைச் சேவையைப் பாராட்டிக் கடந்த 2022-ல் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. ராம் சஹாய் மறைவுக்கு மத்தியப் பிரதேச CM உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிமெண்ட் விலை இம்மாதம் உயர வாய்ப்புள்ளதாக நுவாமா வெல்த் (Nuvama Wealth) நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு தொடக்கத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிமெண்ட் விலை சற்று உயர்ந்த நிலையில், கிழக்கு மாநிலங்களில் கடந்த மாதம் மூட்டைக்கு ₹5 – ₹7 வரை குறைந்தது. இந்நிலையில், செலவின அதிகரிப்பு காரணமாக மீண்டும் இம்மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ₹20 வரை உயர வாய்ப்புள்ளதாக நுவாமா கணித்துள்ளது.
மோடிக்காகத்தான் அரசியலுக்கு வந்தேன்; அவர் கிணற்றில் குதி என்று சொன்னால், கண்ணை மூடிக்கொண்டு குதிப்பேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். பதவிகள் வரும், போகும். அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை; மாநிலத் தலைவர் பதவி இருக்காது என்பதால், தொண்டனோடு தொண்டனாக இருந்து போராட்டத்தை நடத்துவேன் என்றும் திமுகவின் ஊழலை தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
TN பல்கலைக்கழக வேந்தர் பொறுப்புகளில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி விடுவிக்கப்பட்டுள்ளதாக திமுக MP வில்சன் தெரிவித்துள்ளார். கவர்னருக்கு பதில் பல்கலை.களுக்கு TN CM–ஐ வேந்தராக்கும் மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை குறிப்பிட்டு பேசிய அவர், இனி கவர்னர் வேந்தர் இல்லை என கூறியுள்ளார். TN பல்கலை.களுக்கு இனி அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் எனவும் தெரிவித்தார்.
நெல்லை டவுன் பகுதியில் நள்ளிரவில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இளைஞர் ஆறுமுகம் என்பவரை வெட்டிக் கொன்று, உடலை புதைத்துவிட்டு தப்பியோடிய சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது தங்கையை காதலித்ததால், ஒரு வருடம் பிளான் செய்து ஆறுமுகத்தை கொலை செய்ததாக கைதானவர்களில் ஒருவரான விஷால் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு ஃபேன்சி நம்பர் வாங்க பலர் ஆர்வம் காட்டுவார்கள். சில ஆயிரம் வரை கூட அதற்காக செலவு செய்ய தயாராக இருப்பார்கள். ஆனால், கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த ஐடி ஊழியர் ₹45.99 லட்சம் செலவு செய்திருக்கிறார். KL 07 DG 0007 என்ற நம்பர் பிளேட் RTOவில் ஏலம் விடப்பட்டபோது, 5 போட்டியாளர்களை தோற்கடிக்க, இவ்வளவு தொகை கொடுத்திருக்கிறார். இந்தியாவிலேயே இது தான் அதிக விலைக்கு போன நம்பர் பிளேட்டாம்!
உலகப் புகழ் பெற்ற டிரம்ஸ் இசைக் கலைஞர் கிளெம் பர்க்(70) புற்றுநோயால் காலமானார். டெபி ஹாரி, கிறிஸ் ஸ்டீன் உள்ளிட்ட ஏராளமான இசைக் குழுவுடன் இணைந்து உலக அளவில் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தனது அசாத்திய திறமைகளால் ரசிகர்களைப் பெற்ற கிளெம் பர்க், தி அடல்ட் நெட், இக்கி பாப், ராக்&ரோல் உள்ளிட்ட பாடல்கள் மூலம் என்றென்றும் உயிர் வாழ்வார் எனப் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
அமலாக்கத்துறைக்கு எதிரான டாஸ்மாக் வழக்கில் ஐகோர்ட்டை தமிழ்நாடு அரசு இழிவுபடுத்திவிட்டதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மனு பொது நலத்துக்காகத் தாக்கல் செய்யப்பட்டதா (அ) சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக தாக்கல் செய்யப்பட்டதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறைந்தபட்சம் கோர்ட்டிலாவது அரசு நேர்மையாக இருக்க வேண்டும் எனக் காட்டமாக கூறியுள்ளனர்.
காமக் கொடூரர்களின் கைகளில் சிக்கி பிஞ்சுகள் மாண்டுபோவது இன்றளவும் தொடர்கதையாகவே உள்ளது. சத்தீஸ்கரில் 6 வயது சிறுமியை அவரது உறவினரே ரேப் செய்து கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. நவராத்திரி விழாவிற்காக பாட்டி வீட்டிற்குச் சென்ற அந்த சிறுமியிடம் அத்துமீறிய சோமேஷ், அவளை கொலை செய்துவிட்டு பக்கத்து வீட்டுக்காரரின் காரில் உடலை மறைத்துள்ளான். போலீஸ் விசாரணையில் சிக்கியதால், சோமேஷ் கைது செய்யப்பட்டுள்ளான்.
Sorry, no posts matched your criteria.