news

News April 8, 2025

விஜய்க்கு ஏமாற்ற தெரியும், அரசியல் தெரியாது: தமிழிசை

image

சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை விமர்சித்த விஜய்-க்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். ‘விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன?, பாமர மக்களுக்காக நடிக்கிறேன், குறைந்த விலையிலோ இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன்’ என இருக்க வேண்டியதுதானே, யார் தடுத்தார்கள் எனக் கூறிய அவர், விஜய்-க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ பொருளாதாரமோ தெரியாது என சாடினார்.

News April 8, 2025

கடன்களுக்கான வட்டியை குறைத்தது HDFC வங்கி

image

கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் வரை HDFC குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வருவதாக HDFC தெரிவித்துள்ளது. வட்டி குறைப்புக்கு பிறகு ஏற்கெனவே கடன் வாங்கியோருக்கான வட்டி விகிதம் 9.10% – 9.35% வரை இருக்கும் என்றும் HDFC குறிப்பிட்டுள்ளது. MCLR வட்டி விகிதம் என்பது முதலீட்டை அடிப்படையாக கொண்டு அளிக்கப்படும் கடன் மீது விதிக்கப்படும் வட்டியாகும்.

News April 8, 2025

அம்பேத்கரின் கூற்றை வாசித்து தீர்ப்பளித்த நீதிபதி

image

கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். TN அரசுக்கும், கவர்னருக்குமான இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பர்திவாலா, அண்ணல் அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டி தீர்ப்பை நிறைவு செய்துள்ளார். அந்த மேற்கோள் இதுதான், ‘‘அரசியலமைப்பு சிறப்பாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது மோசமானதாகவே இருக்கும்’’.

News April 8, 2025

27 வயதில் கிரிக்கெட் வீரர் ஓய்வு.. காரணம் இதுதான்!

image

ஆஸி. கிரிக்கெட் வீரர் வில் பியூகோவ்ஸ்கி(27) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவரது தலையில் பந்து பலமுறை தாக்கியுள்ளது. இதனால் இனி அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுதான் அவரது சோக முடிவுக்கு காரணம். சர்வதேச போட்டியில் அறிமுகமான முதல் டெஸ்ட்டில் அவர் அரைசதம் அடித்திருந்தார்.

News April 8, 2025

BREAKING: ஒரு குவிண்டால் நெல் ₹2,500: அமைச்சர் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ₹2500 வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், இந்த புதிய உத்தரவு வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் எனக் கூறினார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல், இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

News April 8, 2025

மக்களை ஏமாற்றுவதை திமுக எப்போது நிறுத்தும்?: விஜய்

image

சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்குவது எப்போது என<<16027705>> பாஜக<<>>வைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்யும் கேள்வி எழுப்பியுள்ளார். ₹100 மானியம் கொடுப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக, 4 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், தேர்தல் வெற்றிக்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு பின்னர் மக்களை ஏமாற்றுவதை திமுக அரசு எப்போது நிறுத்தும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 8, 2025

டிரம்ப், புதினோடு நெருக்கமாக இருக்கிறேன் .. சீமான்

image

எஸ்.ஆர்.எம். பல்கலை., நிகழ்ச்சியில் அண்ணாமலை – சீமான் ஒன்றாக கலந்துக் கொண்டது அரசியல் ரீதியாக பேசுபொருளானது. இந்நிலையில், அண்ணாமலை எனக்கு நல்ல நண்பர். நான் டிரம்ப், புதினோடு தான் நெருக்கமாக இருக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே பதிலடி கொடுத்தார். மேலும், அண்ணாமலை இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பார்க்கிறார். நான் தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவை பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

சரசரவென குறையும் தங்கம் விலை.. மேலும் குறையுமா?

image

<<16028754>>தங்கம் விலை<<>> சரிந்த போதிலும் விற்பனையும் அதிகரிக்கவில்லை என வியாபாரிகள் கூறியுள்ளனர். மேலும், விலை குறையும் என்ற எதிர்பார்ப்பே விற்பனை சரிவுக்கு காரணம் எனவும் விளக்கம் அளித்துள்ளனர். இதனிடையே, டிரம்பின் வரி விதிப்பினால், 2021-ல் இருந்த அதே விலையை தற்போது கச்சா எண்ணெய் தொட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 20% குறைவாகும். கச்சா எண்ணெய் விலை குறையும் போது தங்கம் விலை குறையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News April 8, 2025

3 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

image

அடுத்த 3 நாள்களுக்கு மாநிலம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. மேலும், தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்ததாகவும், இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் கணித்துள்ளது. அதேநேரம் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 8, 2025

உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த 10 மசோதாக்கள் என்ன?

image

கவர்னருக்கு பதில் முதல்வரை பல்கலை., வேந்தராக்குவதற்கான மசோதா, கால்நடை பல்கலை திருத்த மசோதா, மீன்வள பல்கலை திருத்த மசோதா, அம்பேத்கர் சட்டப் பல்கலை, TN MGR மருத்துவ பல்கலைக்கு முதல்வரை வேந்தராக்கும் மசோதா, வேளாண் பல்கலை, தமிழ் பல்கலை சட்டத் திருத்த மசோதா, TN பல்கலைகள் 2ம் திருத்த மசோதா, கால்நடை 2ம் திருத்த மசோதா, மீன்வள பல்கலை 2வது திருத்த மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

error: Content is protected !!