India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழநி மலை முருகன் கோயிலில் 3 நாள்களுக்கு கட்டண தரிசனம் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவடி சுமந்து பழநிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க வரும் 11 ஆம் தேதி முதல் 13 வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.
கவர்னர் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து SC உத்தரவிட்டுள்ளது. ஒப்புதல் தராமல் நிறுத்தி வைக்கப்படும் மசோதாவை 3 மாதங்களில் கவர்னர் திருப்பி அனுப்ப வேண்டும். திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஒரு மாதத்தில் ஒப்புதல் தர வேண்டும். மசோதாக்களை பொறுத்து, குறைந்தபட்சம் 1 முதல் அதிகபட்சம் 3 மாதத்தில் கட்டாயம் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும்போது விலையை குறைப்பதும், தேர்தலுக்குப் பின் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ள மத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என விமர்சித்துள்ளார். சிலிண்டர் விலையை அரசு அதிரடியாக உயர்த்தியது ஏற்கத்தக்கது அல்ல எனவும், விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவுக்கு கூடுதலாக 50% இறக்குமதி வரியை விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டி வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது வர்த்தக பார்வையை இந்தியா பக்கம் திருப்பியிருக்கிறது. ஐபோன் உதிரி பாகங்கள் உற்பத்தியை சீனாவுக்கு பதிலாக இந்தியாவில் அதிகரிக்கலாமா என யோசித்து வருகிறது. வரிப்போர் தொடங்குவதற்கு முன்பாகவே 2 நாடுகளிடம் இருந்தும் உதரி பாகங்களை வாங்கி ஆப்பிள் ஸ்டாக் வைத்துவிட்டதாம்!
தமிழ்நாடு கவர்னர் R.N.ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டது உள்பட பல விவகாரங்களில் திமுக அரசுக்கு R.N.ரவி பெரும் தலைவலியாக இருந்தார். ஆனால், அரசு தொடர்ந்த வழக்கில், கவர்னருக்கு எதிராக தீர்ப்பளித்து சுப்ரீம் கோர்ட் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்நிலையில், அவர் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் பேரவையில் 2வது நாளாக அமளி ஏற்பட்டது. வக்ஃப் சட்டம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதனால் பிடிபி MLA வஹீத் பாரா அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார். இதையடுத்து அவை காவலர்கள் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். காஷ்மீரில் வக்ஃப் சட்டம் குறித்து விவாதிக்க முடியாதது துரதிருஷ்டவசமானது என கருத்து தெரிவித்தார்.
கவர்னருக்கு எதிரான வழக்கில், பேரறிவாளன் மற்றும் சூப்ரா வழக்குகளை மேற்கோள் காட்டி SC தீர்ப்பளித்துள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சட்டப்பிரிவு 200ன்படி, மாநில அரசின் அறிவுரைப்படி மட்டும்தான் கவர்னர் செயல்பட முடியுமா அல்லது சுயேச்சையாக முடிவு செய்ய அதிகாரம் உள்ளதா என்பதை ஆராய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய சினிமாவில் எந்த நடிகையும் செய்யாத சாதனையை செய்திருப்பவர் திவ்ய பாரதி. பாலிவுட் உலகில் கொடிகட்டி பறந்த அவரது நடிப்பில் 1992-ல் மட்டும் 12 படங்கள் ரிலீசாகியுள்ளன. தமிழில் ‘நிலா பெண்ணே’ படத்திலும் நடித்துள்ளார். தனது 19-வது வயதில், 1993-ல் இதே மாதத்தில்தான் அவர் உயிரிழந்தார். வீட்டு பால்கனியில் இருந்து அவர் தவறி விழுந்து இறந்ததாக சொல்லப்படுகிறது. இவரை நினைவிருக்கிறதா?
மும்பையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ₹15,000 கோடி மதிப்புள்ள ‘ஆன்டிலியா’ பங்களாவிற்கு சிக்கல் எழுந்துள்ளது. வக்ஃப் வாரிய நிலத்தை வாங்கிய அவர், அதில் பங்களா கட்டி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது வக்ஃப் மசோதா சட்டமாகியுள்ளதால், அதன்படி வக்ஃப் நிலத்தை தனியாருக்கு விற்க முடியாது. வழக்கு அம்பானிக்கு எதிராக திரும்பினால், அவர் வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை வரும்.
அர்ஜென்டினாவில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க் ஷ் பாட்டீல் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் போட்டியிட்ட ருத்ராங்க், ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டார். இறுதியில் 252.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
Sorry, no posts matched your criteria.