news

News April 8, 2025

6 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹12,000 குறைவு

image

வெள்ளி விலை கடந்த 6 நாள்களில் கிராமுக்கு 12 ரூபாயும், கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாயும் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று (ஏப்.8) காலை நேர வர்த்தகப்படி கிராமுக்கு 1 குறைந்து 102க்கும், பார் வெள்ளி 1 கிலோ 1,02,000க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பங்குச்சந்தையில் நிலவும் மந்த நிலை, நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால் வரும் நாள்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

News April 8, 2025

தேர்தல் களத்தை இப்போதே சூடாக்கும் நாதக வேட்பாளர்கள்

image

2026 சட்டமன்றத் தேர்தலில், நாதக சார்பில் 25 தொகுதிகளில் போட்டியிட முதற்கட்ட வேட்பாளர்களை சீமான் தேர்வு செய்துள்ளார். ஆயிரம் விளக்கு- களஞ்சியம், வேதாரண்யம்- இடும்பாவனம் கார்த்திக், கீழ்வேலூர்- கார்த்திகா, ஒரத்தநாடு- திருமுருகன், ராமநாதபுரம்- அனீஸ் பாத்திமா, ஸ்ரீரங்கம் – ராஜேஷ், மடத்துக்குளம் – அபிநயா, திருவள்ளூர்- செந்தில்குமார் உள்ளிட்டோர் வேட்பாளராக தேர்வாகி, களத்தில் செயல்பட தொடங்கியுள்ளனர்.

News April 8, 2025

பிரம்ம குமாரி தாதி ரத்தன் மோகினி காலமானார்

image

பிரம்ம குமாரிகளின் தலைமை நிர்வாகி தாதி ரத்தன் மோகினி(100) அகமதாபாத்தில் காலமானார். கடந்த 2021 முதல் பிரம்ம குமாரிகளின் தலைமைப் பொறுப்பிலிருந்து வந்த இவர்தான், 1954இல் ஜப்பானில் நடந்த உலக அமைதி மாநாட்டில் பிரம்ம குமாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர். பின்னர், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஆன்மிக சேவை புரிந்தார். தாதி ரத்தன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News April 8, 2025

சற்றுநேரத்தில் ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு

image

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பளிக்கிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல், கிடப்பில் போட்டதாக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.

News April 8, 2025

தங்கம் விலை 5 நாள்களில் ₹2,680 குறைந்தது

image

கடந்த சில நாள்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ₹200, இன்று ₹480 என கடந்த 5 நாள்களில் மட்டும் ₹2,680 குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை 5 நாள்களில் கிராமுக்கு ₹10, கிலோவுக்கு ₹10,000 குறைந்துள்ளது. வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் குறையும் என்பதால், நகை பிரியர்கள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News April 8, 2025

சூரிய நமஸ்காரத்தில் சாதனை… பழங்குடி மாணவர்கள் அசத்தல்!

image

சூரிய நமஸ்காரத்தில் புதிய சாதனையை படைத்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. அல்லூரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில், ஒரே நேரத்தில் 21,850 பழங்குடியின மாணவர்கள் ஒன்றாகக் கூடியுள்ளனர். அவர்கள் 108 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து சாதனை படைத்துள்ளனர். சூரிய பகவானுக்கான முழக்கங்களால் மைதானமே அதிர்ந்தது. சாதனைக்கான சான்றிதழ் கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது.

News April 8, 2025

Share Market: விறுவிறு ஏற்றம்… முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்

image

நேற்று அதலபாதாளத்தில் இருந்த இந்திய பங்குச் சந்தை, இன்று உச்சத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க வரிவிதிப்பால், நேற்று ரூ.20 லட்சம் கோடி வரை பங்குச் சந்தை இழப்பை சந்தித்தது. இந்நிலையில், இன்று வர்த்தகம் தொடங்கியதுமே சென்செக்ஸ் 1,103 புள்ளிகள் அதிகரித்து 74,124 புள்ளிகளாக உள்ளது. அதேபோல், நிஃப்டி 306 புள்ளிகள் உயர்ந்து 22,488 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

News April 8, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.8) சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,225க்கும், சவரன் ₹65,800க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் மந்த நிலை காரணமாகத் தொடர்ந்து 5-வது நாளாக தங்கம் விலை சரிவைக் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

News April 8, 2025

நம்பர்-1 துரோகி இபிஎஸ் : ரகுபதி விமர்சனம்

image

தமிழ்நாட்டின் நம்பர்-1 துரோகி யார் எனக் கேட்டால் அரசியல் தெரியாத 6ஆம் வகுப்பு மாணவன் கூட இபிஎஸ்-ஐ கை காட்டுவான் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார், எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் சாட்சிதான் ஓபிஎஸ் என சாடிய அவர், இபிஎஸ் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள் தான் அந்த தியாகிகள் என்று பதிலடியும் கொடுத்துள்ளார்.

News April 8, 2025

வரி விதிப்பை நிறுத்தும் திட்டமில்லை: டிரம்ப்

image

உலக அளவில் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்துவார் என பேசப்பட்டது. ஆனால், அது வெறும் வதந்தி என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. அதே சமயம் பேச்சுவார்த்தைக்கு முன் வரும் நாடுகளுடன் பேசுவதற்கு தயாராகவே இருக்கிறோம். இஸ்ரேல் பிரதமர் ஏற்கெனவே இது பற்றி விவாதித்தார். இந்தியாவும் பேசி வருகிறது என்றார்.

error: Content is protected !!