news

News January 29, 2026

லெஸ்பியன் டயலாக் சொல்ல தயங்கினேன்.. நடிகை பிரிகிடா

image

‘Hotspot 2’ திரைப்படத்தில் லெஸ்பியன் டயலாக் பேசியதற்காக பெருமைப்படுவதாக நடிகை பிரிகிடா சாகா கூறியுள்ளார். படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய அவர், ‘நான் லெஸ்பியன்’ என டயலாக் சொல்லும்போது முதலில் சற்று தயங்கியதாகவும், பின்னர், அந்த உணர்வின் குரலாக இருந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

News January 29, 2026

அதிமுகவில் 2000 பேர் இணைந்தனர்

image

சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் EPS முன்னிலையில் 2000 பேர் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பேசிய EPS, கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க ₹25,000 மானியம் வழங்கப்படும் என்றும் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் எனவும் தெரிவித்தார்.

News January 29, 2026

SI தேர்வு முடிகள் நிறுத்தி வைப்பு

image

நேற்று முன்தினம் (ஜன., 27) வெளியான SI தேர்வு முடிவுகளில் பிழை இருப்பதால், அதை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாப்ட்வேர் பிழையால் ஏற்பட்ட தவறு காரணமாக திரும்ப பெறப்படும் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வகுப்பு பிரிவு ரீதியாக எதுவும் இல்லாமல் முடிவுகள் வெளியானதால், தேர்வர்கள் குழப்பத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

News January 29, 2026

நடிகை ஊர்வசியின் மகள் PHOTO

image

80’s காலக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகமான ஊர்வசி தற்போதும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது மகள் தேஜலட்சுமியும் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாளத்தில் ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’, தாய் ஊர்வசி நடித்து வரும் ‘பாப்லோ பார்ட்டி’ ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். ஊர்வசிக்கு இவ்வளவு பெரிய மகளா என தேஜலட்சுமியின் போட்டோவை SM-ல் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

News January 29, 2026

கரூர் துயருக்கு விஜய் தான் காரணம்: EPS

image

கரூர் துயரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்காத விஜய் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். சரியாக திட்டமிடாமல் விஜய் சென்றதாலேயே கரூரில் 41 பேர் இறந்ததாக குற்றஞ்சாட்டிய EPS, அவருக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை என்றார். மேலும், விஜய் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் சிறந்த அரசியல் கட்சி என்றால் அது அதிமுக தான் என்றும் கூறியுள்ளார்.

News January 29, 2026

தமிழக அரசில் 999 காலியிடங்கள்.. ₹58,100 சம்பளம்!

image

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் 999 Nursing Assistant Grade II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு & Nursing Assistant பயிற்சி *18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் *சம்பளம்: ₹15,700- ₹58,100 *தேர்ச்சி முறை: மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு *பிப்.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். SHARE IT.

News January 29, 2026

‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ்.. மகிழ்ச்சி செய்தி வெளியானது

image

‘ஜன நாயகன்’ படம் எப்போது வெளியாகும் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. சென்சார் போர்டுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. இந்நிலையில், மறுஆய்வுக் குழுவுக்கு விண்ணப்பித்து 20 நாள்களில் சென்சார் சான்றிதழ் பெற ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதனால், பிப்., இறுதியில் ஜன நாயகன் ரிலீசாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News January 29, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10 நாள்கள் அவகாசம்

image

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் <<18976316>>SIR<<>> பணிகளின்போது 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு நாளையுடன் (ஜன.30) முடிவடைய உள்ளது. இந்நிலையில், SIR-க்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில், வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க, மேலும் 10 நாள்கள் கால அவகாசம் வழங்க EC-க்கு SC உத்தரவிட்டுள்ளது.

News January 29, 2026

தவெகவில் சீட்டுக்கு ₹2 கோடி வசூல்?

image

2026 தேர்தலுக்காக தவெகவில் வேட்பாளர் தேர்வு முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில், சீட் பெற விரும்புவோரிடம் பணம் வசூலிக்கப்படுவதாக ஊடகங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. கட்சிப் பெயருக்கு ₹2 கோடி டிடி எடுத்துக் கொடுங்கள்; அப்போதுதான் தேர்தலை எதிர்கொள்ளும் தெம்பு உங்களுக்கு உள்ளதா இல்லையா என்பது தெரியும் என கண்டிஷன் போடுகிறார்களாம். இது விஜய்க்கு தெரியாமல் திரைமறைவில் நடப்பதாக கூறப்படுகிறது.

News January 29, 2026

அஜித் பெயரில் போலி அறிக்கை

image

தனது படங்களை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டாம் என அஜித் அறிவித்ததாக SM-ல் தகவல்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. மங்காத்தா ரீ-ரிலிஸ் கொண்டாட்டம் வருத்தம் அளிப்பதால் இவ்வாறு செய்ய வேண்டாம் என அஜித் அறிக்கை வெளியிட்டதாக வதந்தி கிளம்பியது. இந்நிலையில், இந்த அறிக்கை முற்றிலும் போலியானது எனவும், இதுபோன்ற புரளிகளை நம்பவும், பரப்பவும் வேண்டாம் எனவும் அஜித் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!