news

News April 6, 2025

மீண்டும் தலைவர் ஆகும் அண்ணாமலை?

image

அண்ணாமலையே மீண்டும் மாநிலத் தலைவர் ஆவார் என பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேசியுள்ளார். பாஜகவின் புதிய தலைவரை மேலிடம் தேடி வரும் நிலையில், EPS-ம் அவரை மாற்ற அழுத்தம் கொடுப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், மீண்டும் அண்ணாமலைதான் தலைவர் ஆவார் என்று வி.பி.துரைசாமி பேசியிருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

News April 6, 2025

விடிய விடிய மழை கொட்டும்

image

இன்றிரவு நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை & பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET கணித்துள்ளது. மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2025

தகாத உறவு சந்தேகம்… மனைவி கொடூரக் கொலை!

image

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம், கணவனை கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளி இருக்கிறது. உ.பி. நொய்டாவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியரான அஸ்மா கான் (42) வேறு ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக எண்ணி அவரது கணவன் நுருல்லா ஹைதர் சண்டையிட்டுள்ளார். அப்போது, சுத்தியலால் அஸ்மாவின் தலையில் அடித்து கொடூரமாக அவர் கொலை செய்துள்ளார். மகன் அளித்த தகவலின்பேரில் அவரை போலீஸ் கைது செய்துள்ளது.

News April 6, 2025

நாடு முழுவதும் 8.8 லட்சம் வக்ஃபு வாரிய சொத்துகள்.. புது தகவல்

image

வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் 8.8 லட்சம் சொத்துக்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக உ.பி.யில் 2.4 லட்சம் சொத்துக்கள் இருப்பதாகவும் அவை கூறுகின்றன. தமிழகத்தில் 66,092 வக்ஃபு வாரிய சொத்துக்கள் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 73,000 சொத்துக்கள் பிரச்னையில் இருப்பதாகவும், புதிய சட்டத்தால் அதற்கு சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

News April 6, 2025

CSK – KKR டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா?

image

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி சென்னையில் விளையாடவிருக்கும் அடுத்த போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போட்டியில் CSK அணி, நடப்பு சாம்பியன்களான KKRஐ எதிர்கொள்ளவுள்ளது. இதற்கான டிக்கெட் புக்கிங், நாளை (07.04.2025) காலை 9.30 மணிக்கு ஆன்லைன் மூலம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் புக் செய்து, விசில் போடத் தயாரா ரசிகர்களே?

News April 6, 2025

EX எம்.பி. மறைவு: இபிஎஸ் இரங்கல்

image

அதிமுக EX எம்.பி. பெருமாள் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக மீதும், அதிமுக தலைமை மீதும் விசுவாசம் கொண்டவர் பெருமாள் என்றும், மக்கள் பணிகளை திறம்பட ஆற்றியவர் என்றும் இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். சகோதரர் பெருமாளை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்பதாகவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

News April 6, 2025

உறுதியாகிறது அட்லி – அல்லு அர்ஜுன் காம்போ

image

தமிழ், இந்தி மொழிகளில் தடம்பதித்த இயக்குநர் அட்லி விரைவில் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தை அட்லி இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை வேடத்தில் ஹீரோ, வில்லனாக அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அப்டேட்டை சன் பிக்சர்ஸ் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 6, 2025

அதிமுக EX எம்.பி. பெருமாள் காலமானார்

image

அதிமுக EX எம்.பி. பெருமாள் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதித்திருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். பெருமாள், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொருளாளர், முன்னாள் வாரிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு வகித்ததால், அவரை மாநிலங்களவை எம்.பி.யாக்கினார் ஜெயலலிதா. RIP.

News April 6, 2025

குஜராத் அணிக்கு 153 ரன்கள் இலக்கு

image

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் பேட்ஸ்மேன் நிதிஷ்குமார் ரெட்டி அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். பவுலர்கள் சிராஜ் நான்கு விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

News April 6, 2025

பெண் சீடர் ரேப்… சாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை!

image

குஜராத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு 19 வயது பெண்ணை ரேப் செய்ததாக திகம்பர சமண முனிவர் சாந்தி சாகருக்கு(56) 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சாந்தி சாகரை குருவாக எண்ணிய பெண்ணிடம், மதச் சடங்குகள் நடத்துவதாகக் கூறி அவர் அத்துமீறியது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2017-ல் கைது செய்யப்பட்ட சாந்தி சாகர் தற்போதுவரை சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!