news

News April 6, 2025

பாம்பன் பாலத்தின் HYPERLAPSE வீடியோ!!

image

புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் நண்பகல் 12 மணியளவில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இதனிடையே மண்டபம் ரயில் நிலையம் முதல் பாம்பன் ரயில் நிலையம் வரையிலான HYPERLAPSE வீடியோவை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

News April 6, 2025

பல்லு துலக்கலனா மாரடைப்பு வருமா? என்னய்யா சொல்றீங்க!

image

இரவு தூங்குவதற்கு முன் பற்களை துலக்காவிட்டால், மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம் என்று ஹார்வார்டில் பயிற்சி பெற்ற டாக்டர் சவுரவ் தெரிவித்துள்ளார். இரவு பல் துலக்காமல் தூங்கும்போது, வாயில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலப்பதாகவும், அது Inflammationஐ ஏற்படுத்தி இதய பாதிப்புகளை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது. கவனம் மக்களே…

News April 6, 2025

அப்துல் கலாமின் பொன்மொழிகள்

image

*ஒரு சிறந்த புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்குச் சமம், ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கு சமம். *சூரியனைப் போல நீங்கள் பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல எரியுங்கள். *ஒருவரைத் தோற்கடிப்பது மிகவும் எளிதானது, ஆனால் ஒருவரை வெல்வது மிகவும் கடினமானது. *என்னைப் பொறுத்தவரை, எதிர்மறையான அனுபவம் என்று எதுவும் இல்லை. *ஒரு மாணவரின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று கேள்வி கேட்பது.

News April 6, 2025

ரெட்ட தல… சாக்‌ஷி தோனியின் இன்ஸ்டா ஸ்டோரி

image

சினிமாவில் எப்படி நடிகர் அஜித்தை ‘தல’ என்று அன்பாக ரசிகர்களால் அழைக்கப்படுவாரோ, அதைப்போல கிரிக்கெட்டில் தோனியும் அழைப்பார்கள். இது அனைவரும் அறிந்ததே. இதனிடையே இப்போ தோனியின் மனைவி சாக்‌ஷியின் இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகி வருகிறது. ஆட்டோ ஒன்றில் அஜித் மற்றும் தோனியின் புகைப்படத்துடன் தல என குறிப்பிடப்பட்டிருப்பதை புகைப்படமாக எடுத்து சாக்‌ஷி பகிர்ந்துள்ளார்.

News April 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 228 ▶குறள்:
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
▶பொருள்: ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?.

News April 6, 2025

அமெரிக்க பொருள்கள் மீது IND ஏன் வரி விதிக்கவில்லை?

image

டிரம்பின் கூடுதல் வரி விதிப்பிற்கு பதிலடியாக கனடா, ஐரோப்பிய யூனியன், சீனா கூடுதல் வரி விதித்துள்ளன. ஆனால் இந்தியா அதுபோல் செய்யவில்லை. டிரம்ப் தற்போதுதான் அதிபராக பதவியேற்று உள்ளார். பாகிஸ்தான், சீனாவுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டவர் அவர். கூடுதல் வரியை இந்தியா விதிக்கும்பட்சத்தில், 2 நாடுகள் இடையே உறவு பாதிக்கப்படக்கூடும் என இந்தியா கருதுவதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

News April 6, 2025

CSKக்கு பெரும் பின்னடைவு

image

5 முறை சாம்பியனான CSK நடப்பு சீசனில் 3வது தோல்வியை நேற்று சந்தித்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்துக்கு CSK சென்றது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் சென்னை அணி எப்படி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வரப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனி, ஜடேஜா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்களின் செயல்பாடு மோசமாக உள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

News April 6, 2025

வக்ஃப் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

image

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

News April 6, 2025

அமேசான் வசமாகுமா டிக்-டாக்? தீவிர பேச்சுவார்த்தை

image

டிக்-டாக் செயலியின் USA செயல்பாட்டை தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என அதன் தாய் நிறுவனமான சீனாவின் பைட் டேன்ஸ்க்கு டிரம்ப் கெடு விதித்துள்ளார். இல்லையேல் டிக்-டாக்கிற்கு தடை விதிக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதையடுத்து, டிக்-டாக்கை வாங்குவது தொடர்பாக அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

News April 6, 2025

தூக்கம் குறைந்தால், திறமை குறையும்

image

குழந்தைகள் போதுமான அளவுக்கு தூங்கவில்லை எனில், அது அவர்களின் மூளைத் திறனையும் மனநலத்தையும் பாதிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆழ்ந்த தூக்கத்தின்போது தான் குழந்தைகளின் மூளையின் இணைப்புகள் சீரமைக்கப்படுகிறது. அவர்கள் சரியாக தூங்கவில்லை எனில் மனச்சோர்வு, பதற்றம், நடத்தைப் பிரச்சனை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

error: Content is protected !!