India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

Ex இந்திய வீரர் ஜேக்கப் மார்டின் கார் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. வதோதராவில், மது அருந்திவிட்டு கார் ஓட்டிய அவர் சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த 3 வாகனங்கள் மீது மோதியுள்ளார். இதுபற்றி வாகன உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரேஷ் டிரைவிங், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சனாதான தர்மத்தை புறக்கணிக்கும் அரசு ஆட்சிக்கு வராது என்று நம்புவதாக அமித்ஷா பேசியுள்ளார். குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முத்தலாக் ஒழிப்பு போன்ற பாஜக அரசின் முக்கிய முடிவுகள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை பிரதிபலிக்கிறது. எனவே, சனாதன தர்மத்தின் மதிப்புகளை பாதுகாக்க வேண்டும். எனவே, இதனை புறக்கணிக்கும் அரசு மீண்டும் ஒருபோதும் ஆட்சிக்கு வராது என்று கூறியுள்ளார்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே FTA ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு, PM மோடி மற்றும் பியூஷ் கோயலுக்கு SP வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தமானது இந்தியத் தொழில்துறைக்கு வலுவூட்டும் என தனது X பதிவில் கூறியுள்ளார். இதனால், ‘தென்னகத்தின் மான்செஸ்டர்’ என்றழைக்கப்படும் கோவை மற்றும் திருப்பூர் உலகளாவிய வளர்ச்சிக்கும், தொழில் செய்வது எளிதாக்குவதற்கும் வழிவகுக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்ற AI போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண், சமந்தா, ஸ்ரீலீலா போன்ற நட்சத்திரங்கள் மணமக்களை வாழ்த்துவது போன்றும் சில போட்டோக்கள் வெளியாகியுள்ளன. இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் பரவி வரும் நேரத்தில், இந்த AI போட்டோக்களை பார்த்து அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியா – ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் மூலம், திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு 9% முதல் 12% வரை இருந்த இறக்குமதி வரிகள் நீக்கப்படும் என கூறப்படுகிறது. திருப்பூரின் MSME மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் அதிகரிக்கும். பெண் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பின்னலாடை தொழிலில் வேலைவாய்ப்பு விரிவடையும். கரூரில் தயாராகும் வீட்டு அலங்காரத் துணிகளுக்கு வரிகள் குறைக்கப்படும் என தெரிகிறது.

தான் தவெக கூட்டணிக்கு வர வேண்டுமென செங்கோட்டையன் விரும்பியதாக TTV தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், செங்கோட்டையன் சீனியர் என்பதால் அவரது கூட்டணி அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் தயங்கியதாகவும், அதனால் அவர் நம்பிக்கையுடன் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தலில் போட்டியிடவில்லை என்பது தனது சுய முடிவு என்றும், இதில் தனக்கு எந்த அழுத்தமும் யாரும் தரவில்லை என்றும் கூறினார்.

தொடர் விடுமுறைக்கு பின் இன்று மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர். இந்நிலையில், நாளை 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி திருவாரூரிலும், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் தமிழின் நிஜ வாழ்க்கை அனுபவத்தில் இருந்து உருவானதுதான் ‘சிறை’ திரைப்படம். படத்தில் இஸ்லாமியரான ஹீரோ பாத்திரம் நிஜத்தில் இந்து எனவும், படத்திற்காக இஸ்லாமியராக மாற்றியதாகவும் தமிழ் கூறியுள்ளார். 70 வருட சினிமாவில் இஸ்லாமியர்களை நிறைய குத்தி கிழித்திருக்கிறோம். அதையெல்லாம் சரிசெய்ய முடியாது. எனவே, இனி தவறாக சித்தரித்து படம் எடுக்காமல் இருப்பதே இன்றைய சூழலில் நல்லது என்று கூறியுள்ளார்.

திமுக-காங்., கூட்டணியில் புகைச்சல் நிலவி வரும் நிலையில், காங்., நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி மீண்டும் திமுகவை சீண்டியுள்ளார். RBI புள்ளிவிவரப்படி கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் 10 மடங்கு அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் தமிழக ஜிடிபி 4 மடங்கு மட்டுமே வளர்ந்துள்ளது. குறிப்பாக, தமிழக வருவாயில் 21% வட்டிக்கே செலவிடப்படுகிறது. இதை பேசினால் திமுகவினருக்கு பிரச்னையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

₹10, ₹20, ₹50 நோட்டுகளை வழங்கும் புதிய ATM-ஐ அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ₹500 மற்றும் ₹100 நோட்டுகளுடன் மற்ற ரூபாய் நோட்டுகளையும் வழங்கும் ATM-கள் மும்பையில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ATM-ல் சில்லறை வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதாவது ₹500 நோட்டை செலுத்தி ஐந்து ₹100 நோட்டுகளை பெறலாம்.
Sorry, no posts matched your criteria.