India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் ஜூன் 5ஆம் தேதி TNPL 9ஆவது சீசன் தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் நத்தம் ஆகிய 4 இடங்களில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. கோவையில் தொடங்கும் முதல் போட்டியில் திண்டுக்கல் vs கோவை அணிகள் எதிர்கொள்கின்றன. இறுதி போட்டி ஜூலை 6ஆம் தேதி திண்டுக்கல்லில் நடக்கிறது.
ஐபிஎல்லில் சென்னை அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். இதுவரை 236 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 4,699 ரன்களை எடுத்து, சுரேஷ் ரெய்னாவின் (176 போட்டிகளில் 4687 ரன்கள்) சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த பட்டியலில், 2,721 ரன்களுடன் டூப்ளஸிஸ் 3ஆம் இடத்திலும், 2,433 ரன்களுடன் ருதுராஜ் 4ஆம் இடத்திலும், 1,932 ரன்களுடன் அம்பத்தி ராயுடு 5ஆம் இடத்திலும் உள்ளனர்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியது தென் மாநிலங்களுக்கு ஒரு பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். எனவே நாம் மக்கள் தொகை மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும் எனவும், அப்படி இல்லையென்றால் வட இந்தியர்கள் இங்கு அதிகளவு வர நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் 1.4%, ஆந்திராவின் பிறப்பு விகிதம் 1.5% என்றவாறு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கைவினைஞர்கள் தயாரிக்கும் பொருட்களை மின் வணிகம் மூலம் உலகச் சந்தைக்கு எடுத்து செல்ல,
₹2 கோடி மதிப்பில் ‘கைவினைப் பொருட்கள் சந்தை இயக்கம்’ செயல்படுத்தப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்த, இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் ₹1.30 கோடி மதிப்பில், 10 விற்பனை கண்காட்சிகள் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலினையே 27% மக்கள் விரும்புவது CVoter நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக விஜய்க்கு 18% மக்கள் முதலமைச்சராக ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10% பேரும், அண்ணாமலைக்கு 9% பேரும் ஆதரவாக உள்ளனர். இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காத விஜய் 2ஆம் இடம் பிடித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ₹22,000 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரவும், பகலும் விமர்சிக்கப்படும் ED-யால் இப்பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும், அப்பணத்தை திருடப்பட்டவர்களிடமே திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பொதுமக்களிடம் கொள்ளை அடித்தவர்கள், அதை மக்களிடமே திருப்பி கொடுக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
தர்பூசணியில் கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) அதிகமாக இருந்தாலும், 120 கிராம் என்ற அளவில், அதாவது 1 கப் சாப்பிடலாம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். மீடியம் சைஸ் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, முக்கால் கப் முலாம்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தயக்கமின்றி தாராளமாக சாப்பிடக்கூடியதாக, ஆன்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்த நாவல்பழம் உள்ளது. மாம்பழங்களை அளவுடன் சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.
‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்திற்காக தான் பெற்ற தேசிய விருதை யாரும் பெரிதாக கொண்டாடவில்லை என மாதவன் தெரிவித்துள்ளார். தமிழ், ஹிந்தி என இருமொழிகளிலும் படம் இருந்ததால், அதை யாரும் உரிமை கொண்டாடவில்லை எனவும், இது முதலில் தனக்கு வருத்தம் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், தன்னிடம் ஒரு கதை இருக்கிறது, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தனது நோக்கம் என உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
போலீசுக்கு எதிராக அதிமுகவின் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 2022-ல் திமுக தொண்டரை தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்டார். அப்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவர் அளித்த புகாரை, மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது. இதனை எதிர்த்து அவர் ஐகோர்ட்டை நாடினார். ஜெயக்குமாரின் புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் ‘ப்ரச்சந்த்’ எனும் அதிநவீன போர் ஹெலிகாப்டர்கள், விரைவில் இந்திய ராணுவத்தில் சேரவுள்ளன. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்று வழங்கியது. ரூ.62,700 கோடி செலவில் மொத்தம் 156 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கவுள்ளது. 5.8 டன் எடையும், 16,400 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை அருகே நிலைநிறுத்தப்படவுள்ளன.
Sorry, no posts matched your criteria.