news

News August 15, 2025

விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு: CM

image

விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை ₹22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் 2-ம் உலகப்போரில் பங்கேற்றவர்களுக்கான ஓய்வூதியம் ₹15,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் கூறியுள்ளார். தியாகிகள், போராளிகளுக்கு மணிமண்டபம், சிலைகள் பெரும்பாலும் திமுக ஆட்சியிலேயே அமைக்கப்பட்டதாகவும் சுதந்திர தின உரையில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News August 15, 2025

11 நிமிடத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை.. செயலியால் அசத்தல்

image

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள, பிரத்யேக செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் 11 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அவசரம் 108 செயலியில் உங்களின் இருப்பிடத்தை உறுதிபடுத்தி தகவல் கொடுத்தால், விரைவாக சேவை கிடைக்குமாம். அவசர தேவைக்கு பயன்படுத்திகோங்க..

News August 15, 2025

எரிபொருள் தற்சார்பு: டிரம்புக்கு மோடி மறைமுக பதிலடி

image

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பெறுவதைச் சுட்டிக்காட்டி இந்தியாவுக்கு 50% வரிவிதித்துள்ளது USA. இந்நிலையில், சுதந்திர தின விழாவில் பேசிய PM மோடி, பெட்ரோல், டீசல், கேஸ் போன்றவற்றை இறக்குமதி செய்வதை குறைக்க வேண்டும் என்றார். எரிபொருள் பயன்பாட்டில் இந்தியா தற்சார்பு அடைய வேண்டும் என்றும் சூளுரைத்தார். டாலர்கள், பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு அல்ல என்று USA-க்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.

News August 15, 2025

தீபாவளி பரிசாக GSTயில் சீர்திருத்தம்: PM மோடி

image

GST சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டதாக PM மோடி தெரிவித்துள்ளார். 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட GST வரியால் இன்றளவும் பல வர்த்தக சிரமங்கள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சுதந்திர தின விழாவில் பேசிய மோடி, GST சீர்திருத்தத்தால் இந்தாண்டு தீபாவளிக்கு நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது என்றார். இதன் மூலம் பொருள்களின் விலை குறையும் என்றும் உறுதியளித்துள்ளார்.

News August 15, 2025

டிகிரி போதும்.. 400 பணியிடங்கள்

image

பரோடா வங்கியில் (BOB) காலியாக உள்ள 417 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேனேஜர், ஆபிசர் அக்ரிகல்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 24 – 36. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம் & நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.26. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும்.

News August 15, 2025

இந்தியாவுக்குச் சொந்தமாக விண்வெளி நிலையம்: மோடி

image

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளதாக PM மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தனது சுதந்திர தின உரையில் பேசிய அவர், விரைவில் இந்தியாவுக்குச் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார். தற்போது விண்வெளி சார்ந்த 300 ஸ்டார்ட்-அப்கள் நாட்டில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News August 15, 2025

RSS பின்புலம் கொண்டவரை திமுகவில் சேர்த்தது ஏன்?

image

அதிமுக Ex MP மைத்ரேயன் திமுகவில் இணைந்தது அக்கட்சிக்கு பலமாக பார்க்கப்படும் அதேவேளையில் விமர்சனத்திற்கும் ஆளாக்கப்பட்டுள்ளது. 1991-ல் RSS-ல் இணைந்த மைத்ரேயன் அங்கிருந்து BJP, பின்னர் அதிமுக, பின்னர் மீண்டும் BJP, மீண்டும் அதிமுக அங்கிருந்து தற்போது திமுக என பல கட்சிகளில் பயணப்பட்டுள்ளார். திராவிட கொள்கையுடைய திமுகவில் ஒரு RSS காரர் எப்படி என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். உங்கள் கருத்து?

News August 15, 2025

EPSஐ விமர்சிக்கும் தகுதி OPSக்கு இல்லை: ஆர்.பி.உதயகுமார்

image

தலைமை பண்பு இல்லாதவர் EPS என OPS குற்றம்சாட்டிய நிலையில் அதற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். இரட்டை இலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த OPS, EPS-ஐ விமர்சிக்க தகுதியற்றவர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், EPS ஆளுமை பண்போடு செயல்படுவதாக பாராட்டிய அவர், தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திமுக அடக்குமுறையை கையாண்டுள்ளதாகவும் பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளார்.

News August 15, 2025

அணுஆயுத போர் என்னால் தடுக்கப்பட்டது: டிரம்ப்

image

கடந்த 6 மாதங்களில் 6 போர்களை, தான் நிறுத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது 6 -7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தான் தலையிடவில்லை என்றால் அது அணுஆயுத போராக வெடித்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா காரணம் அல்ல என இந்தியா மறுத்தாலும், பேசும் இடங்களிலெல்லாம் தானே போரை நிறுத்தியதாக டிரம்ப் தம்பட்டம் அடித்து வருகிறார்.

News August 15, 2025

GALLERY: PM மோடியும்.. சுதந்திர தின தலைப்பாகையும்!

image

ஒவ்வொரு ஆண்டும் PM மோடி, சுதந்திர தினத்தில் கொடியேற்றும் போது, அவரின் தலைப்பாகை தனி கவனம் பெறுகிறது. ராஜஸ்தானி தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள அவர், அதன் நிறத்தை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் மாற்றுகிறார். 5 மீட்டர் துணியில் தயாரிக்கப்படும் இந்த தலைப்பாகை சுயமரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது. 2014- 2025 வரை PM மோடி அணிந்த தலைப்பாகைகளை மேலே அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம்.

error: Content is protected !!