news

News March 21, 2024

பிரைமில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள்

image

இந்தாண்டு அமேசான் பிரைமில் வெளியாகும் தமிழ் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ▶சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’, ▶நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம், ▶அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘கேங்ஸ் – குருதிபுனல்’ வெப் தொடர், ▶புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் நடிக்கும் ‘சூழல் 2’ வெப் தொடர்.

News March 21, 2024

ஓபிஎஸ் கூட்டத்தை புறக்கணித்த ஆதரவாளர்கள்

image

ஓபிஎஸ்-க்கு ஒரு தொகுதி மட்டுமே வழங்க முடியும் என்று பாஜக கறார் காட்டுவதால் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அவரச ஆலோசனை மேற்கொண்டார். ஒரு தொகுதியை பெற எதிர்ப்பு தெரிவித்து புகழேந்தி, கு.ப.கிருஷ்ணன், மருது அழகுராஜ், சுப்புரத்தினம் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும், கூட்டத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், ஓபிஎஸ் முடிவெடுக்க முடியாமல் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

News March 21, 2024

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம் குறித்து சீராய்வு

image

தேர்தல் ஆணையர்கள் சட்டத்தை சீராய்வு செய்யப் போவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தேர்தல் ஆணையர்கள் நியமனங்கள் சட்டத்தில், தேர்வுக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர் இடம் பெறும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனங்களுக்கு தடைகோரும் மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இச்சட்டத்தை சீராய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

News March 21, 2024

சச்சினால் தான் அன்று அது சாத்தியமானது

image

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “WI அணிக்கு எதிரான எனது முதல் டெஸ்ட் போட்டியின்போது, பயத்தில் இருந்தேன். அப்போது என் அருகில் வந்த சச்சின், உலகக் கோப்பைக்காக 21 வருடங்கள் காத்திருந்ததை நினைவுபடுத்தி ஊக்கப்படுத்தினார். அதன் பிறகு தான் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.

News March 21, 2024

தொகுதி பொறுப்பாளர்களுக்கு பிரேமலதா கொடுத்த ஆஃபர்

image

அதிக வாக்குகளை பெற்றுத் தரும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், “அதிமுக – தேமுதிக கூட்டணி இயற்கையாக அமைந்த ராசியான கூட்டணி. மக்கள் நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக உடன் கூட்டணி தொடரும்” எனத் தெரிவித்தார்.

News March 21, 2024

மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை

image

மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக பொய் செய்திகளை கண்டறிந்து நீக்குவதற்கு உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அரசியல் சாசனம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பான வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வரும் வரை உச்ச நீதிமன்றம் இக்குழுவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

News March 21, 2024

வங்கிக் கணக்கு முடக்கம் கிரிமினல் குற்றம்

image

காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது கிரிமினல் குற்றம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜக பல ஆயிரம் கோடி ரூபாய்களை குவித்துள்ளது. ஆனால், அடுத்தவர்களை ஊழல்வாதிகளாக காட்டுவதற்கு பாஜக அனைத்து வேலைகளிலும் ஈடுபடும். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் நாளேடுகள், தொலைக்காட்சியில் விளம்பரங்கள் செய்ய முடியவில்லை” என்றார்.

News March 21, 2024

பாஜக அபாயகரமான விளையாட்டை ஆடுகிறது

image

காங்கிரசின் வங்கிக் கணக்கை முடக்கி பாஜக அபாயகரமான விளையாட்டை விளையாடுவதாக அக்கட்சியின் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் 55% நிதி பெற்றுள்ளது. ஆனால், காங்கிரஸ் 11% நிதி மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், காங்கிரசின் வங்கிக் கணக்கை தேவையின்றி முடக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் காங்கிரஸ் வெற்றியை தடுத்து விடலாம்
என பாஜக நினைக்கிறது” என்றார்.

News March 21, 2024

பாஜக கூட்டணியில் தொடரும் இழுபறி

image

பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஓபிஎஸ் தரப்புக்கு தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை ஒதுக்க பாஜக யோசித்து வருகிறது. அதே போல சிதம்பரம், மயிலாடுதுறை தொகுதிகளை வழங்க மறுப்பதால் பாமக அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை தொகுதியை ஜி.கே.வாசனும் கேட்பதால் இந்த சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

News March 21, 2024

மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

image

வாட்ஸ் அப்பில் மக்களுக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தும்படி, மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்கள் குறித்து
கருத்துகள் கேட்டு விக்சித் பாரத் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜில் மோடியின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மெசேஜ் அனுப்புவதை நிறுத்த மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!