news

News March 28, 2025

பிரதமர் மோடியை விளாசிய விஜய்

image

தமிழ்நாடு என்றால் பிரதமர் மோடிக்கு அலர்ஜி என விஜய் கடுமையாக சாடியுள்ளார். பாஜகவை வெளிப்படையாக விமர்சிக்க தவெகவுக்கு பயம் என சிலர் கூறி வருவதாக பேசிய அவர், “யாரை பார்த்தும் எங்களுக்குப் பயமில்லை, மத்தியில் ஆளும் BJP, தமிழ்நாட்டில் ஆளும் DMK இரண்டும் மக்களுக்கு விரோதமான அரசு” என அழுத்தமாக கூறினார். பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்தும் திமுகவுக்கு வரும் தேர்தலில் அவர்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

News March 28, 2025

‘மன்னராட்சி முதல்வரே’ வார்னிங் கொடுத்த விஜய்

image

அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம், ஆனால் காற்றைத் தடுக்க முடியாது என விஜய் ஆவேசமாகக் கூறியுள்ளார். பொதுக்குழுவில் பேசிய அவர், யாருக்கும் இல்லாத தடையை தவெகவுக்கு ஆளுங்கட்சி கொடுப்பது ஏன் என வினவினார். ‘மன்னராட்சி முதல்வரே’ தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இரட்டை யானை தவெக கொடி நிச்சயம் பறக்கும் அதனை யாராலும் தடுக்க முடியாது என சூளுரைத்தார்.

News March 28, 2025

17ஆண்டு தொடர் தோல்வி.. வரலாற்றை மாற்றுமா RCB?

image

CSKவின் கோட்டையான சேப்பாக்கத்தில் இன்று RCB களம் காண்கிறது. சேப்பாக்கத்தில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள RCB ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு RCB தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. 17 ஆண்டுகளாக தொடரும் சோகத்துக்கு இன்றைய போட்டியில் விடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு RCB ரசிகர்களிடையே உள்ளது. நீங்க என்ன சொல்றீங்க?

News March 28, 2025

நடுவானில் பறந்த விமானத்தில் ஆபாசம்: இளைஞர் கைது

image

விமானம் நடுவானில் பறந்தபோது இரு பெண்கள் முன்பு பேண்ட்டுக்குள் கையை விட்டு ஆபாச செயலில் ஈடுபட்ட 33 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்திலிருந்து டிரெஸ்டனுக்கு சென்ற விமானத்தில் இரு பெண் பயணிகளுக்கு அருகே அமர்ந்திருந்த அந்த நபரின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், விமான ஊழியர்களிடம் கூறியதால், நடுவானில் களேபரம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்நபர் டிரெஸ்டன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

News March 28, 2025

வென்றானா வீர தீர சூரன் -2? Review & Rating

image

2 பவர்ஃபுல் கேரக்டர்களுக்கு மத்தியில் சிக்கும் காளி (விக்ரம்) என்ன ஆகிறார் என்பதே கதைக்களம். பிளஸ்: ஆக்சன் காட்சிகளும், அதற்கான Build-up காட்சிகள் அசத்தல். ‘கமர்சியல்’ விக்ரமை மீண்டும் கொண்டு வந்து இயக்குநர் வென்றுவிட்டார். குறிப்பாக கிளைமாக்ஸ் ஆக்சனின் உச்சம். மியூசிக், ஒளிப்பதிவு சிறப்பு. இன்டர்வெல் சூப்பர் சர்ப்ரைஸ். மைன்ஸ்: Flashback காட்சிகள் மட்டும் கொஞ்சம் மெதுவாக போகிறது. Rating: 3/5.

News March 28, 2025

மகளிர் உரிமைத்தொகை விரைவில் விரிவாக்கம்: Dy CM

image

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் Dy CM உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.15 கோடி குடும்பத்தினர் மாதந்தோறும் ₹1,000 பெற்று வருவதாகக் கூறிய அவர், விடுபட்ட தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளை சேர்க்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார். உங்கள் குடும்பத்திற்கு ₹1,000 வருகிறதா?

News March 28, 2025

மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்த கணவர்!

image

பெங்களூருவில் மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு கணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ராகேஷை, அவரது மனைவி கௌரி அனில் சம்பேகர் சண்டை ஏற்படும் போதெல்லாம் அடித்துக் கொடுமைப்படுத்தியதால் ஆத்திரத்தில் இப்படி செய்ததாகக் கூறியுள்ளார். காரில் மயக்க நிலையில் கிடந்த ராகேஷை கைது செய்த போலீசார், சிகிச்சைக்குப் பிறகு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 28, 2025

ஓயாத குண்டு மழை.. 24 மணி நேரத்தில் 50 பேர் பலி

image

போர் தொடங்கியதில் இருந்து தினந்தோறும் பாலஸ்தீனர்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். இஸ்ரேல் fighter jets குடியிருப்பு பகுதிகளில் அதிகாலை வீசிய குண்டில் குழந்தைகள், பெண்கள் என 6 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இஸ்ரேல் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

News March 28, 2025

உலகத்தரத்தில் மாற உள்ள சென்னை!! முதல்வரின் திட்டம்

image

சென்னையில் சிஐஐ தென் இந்திய மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல; அனைவரையும் உள்ளடங்கிய வளர்ச்சி எனவும் கூறினார். அதோடு சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக உருவாக்க, திட்டத்தை தயாரித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 28, 2025

100 நாள் வேலைத் திட்ட ஊதியம் உயர்வு

image

100 நாள் வேலைத் திட்ட தினசரி ஊதியத்தை ₹17 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் நாளொன்றுக்கு ₹319 வழங்கப்பட்டு வந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் ₹336ஆக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் தமிழகத்திற்கான MGNREGA திட்ட நிதி ₹4,034 கோடி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!