India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 219
▶குறள்:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
▶பொருள்: ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
◾நீங்கள் தூங்க சென்ற பிறகு போன், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். ◾படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறிது உடற்பயிற்சி செய்வது நல்லது. ◾தூங்கும் முன் பல் துலக்குவது மற்றும் ஃபேஷியல் செய்வது உங்களுக்கு ஃப்ரெஷான தூக்கத்தை தரும். ◾நீங்கள் தூங்கும் இடத்தில் எந்தவித இரைச்சலும், தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும். ◾சிந்தனை சிதறாமல் இருக்க மெலடி பாடல்களை கேட்கலாம்.
▶மார்ச் – 28 ▶பங்குனி – 14 ▶கிழமை: வெள்ளி
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM
▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM
▶குளிகை: 07:30 AM – 09:00 AM
▶திதி: சதுர்த்தசி ▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: ஆயில்யம்
▶நட்சத்திரம் : பூரட்டாதி இ 9.44
ஹரியானா அரசின் விடுமுறைப் பட்டியலில் இருந்து ரம்ஜான் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் அம்மாநிலத்தில், நடப்பு ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார். இதற்கு அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. பாஜக ஆளும் மற்ற மாநிலங்களிலும் இந்த நடைமுறை அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இன்று (மார்ச்.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (மார்ச்.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஐபிஎல் தொடரில் எப்பவுமே ஆச்சரியமான விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கும். மெகா ஏலத்தில் விலை போகாத வீரர்தான், இன்று பர்பிள் கேப்-க்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார். லக்னோ வீரர் மோசின் கான் காயமடைந்ததால், அவருக்கு மாற்றாக ஷர்துல் தாகூர் அணியில் இணைந்தார். 2 போட்டிகளில் விளையாடிய அவர், 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியும் அவர் சாதனை படைத்துள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோஜின் ஆத்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் இளையராஜா மோட்ச தீபம் ஏற்றியுள்ளார். இறந்தவர்கள் நம்முடைய மனதில் எப்போதும் நீங்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணி ஏற்றப்படுவதுதான் மோட்ச தீபம் ஆகும்.
மிட்டாய் வாங்க கடைக்குச் சென்றபோது தொலைந்த மகன், 17 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பி இருப்பது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நியூ டெல்லியைச் சேர்ந்த ஆரிஃப் என்ற 6 வயது சிறுவன், 2008-ம் ஆண்டு காணாமல் போனதாக தெரிகிறது. தற்போது 23 வயதான அவர், பஞ்ச்குலா போலீஸ் உதவியுடன் மீண்டும் பெற்றோருடன் சேர்ந்துள்ளார். மகனை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர்விட்ட பெற்றோர், சந்தோஷத்தில் திளைத்துள்ளனர்.
➤மேஷம் – உயர்வு ➤ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – சுகம் ➤கடகம் – செலவு ➤சிம்மம் – பிரீதி ➤கன்னி – போட்டி ➤துலாம் – நிறைவு ➤விருச்சிகம் – ஆதரவு ➤தனுசு – கோபம் ➤மகரம் – பாராட்டு ➤கும்பம் – அமைதி ➤மீனம் – சுகம்.
Sorry, no posts matched your criteria.