India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்முடிக்கு, ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவி பறிபோனது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட மறுப்பதாக வெளியான தகவலை இயக்குநர் தங்கர் பச்சான் மறுத்துள்ளார். மேலும், இவ்வாறு பொய் செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, பாமக கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக இன்று காலை அவர் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் ஜூலை 26 – ஆக. 11 வரை 33ஆவது ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது.
இதன் தொடக்க விழாவில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்லும் கௌரவம், ஆண் வீரர்கள் சார்பில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் அஜந்தா சரத் கமலுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்த வீராங்கனை இந்தியக் கொடியை ஏந்துவார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய வீரர்கள் குழுவின் தலைவராக மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு மார்ச் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி முருகனுக்கு தேரோட்டம் நடைபெற உள்ளதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அஞ்செட்டி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகாக்களிலும் மார்ச் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணில் செலுத்தக்கூடிய ராக்கெட்டை பூமியில் தரையிறக்கி, மீண்டும் பயன்படுத்தும் மறுபயன்பாட்டு ராக்கெட் (RLV-LEX02) தொழில்நுட்ப சோதனையில் இஸ்ரோ புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. சித்ரதுர்கா சோதனை தளத்தில், புஷ்பக் RLV-TD-ஐ கொண்டு இன்று 2ஆம் கட்ட சோதனை நடந்தது. சினூக் ஹெலிகாப்டர் மூலம் 4.5 கி.மீ. உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட புஷ்பக் வெற்றிகரமாக தானியங்கி முறையில் தரையிறங்கியிருக்கிறது.

விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக வி.எஸ்.நந்தினி அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததோடு, பதவியையும் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அங்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அத்தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தேதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். 1. மத்திய சென்னை – பார்த்தசாரதி 2. விருதுநகர் – விஜய பிரபாகரன் 3. திருவள்ளூர் (தனி) – நல்லதம்பி 4. தஞ்சை – சிவநேசன் 5. கடலூர் – சிவக்கொழுந்து ஆகியோர் தேமுதிக சார்பில் முரசு சின்னத்தில்
நேரடியாக போட்டியிட உள்ளனர்.

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலை, 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இதில், வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கெஜ்ரிவால் தரப்பில் வாதாடி வருகிறார்.

தான் நடிக்கும் புதிய பட போஸ்டரை பிரபு தேவா வெளியிட்டிருக்கிறார். ஜென்டில்மேன் படத்தின் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயில் பாடல் மூலம் திரையில் முதலில் பிரபுதேவா தோன்றினார். இதையடுத்து காதலன் படத்தில் நாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். பின்னர் இயக்குநராகவும் அவதாரமெடுத்தார். இந்நிலையில் புதிய பட போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார். அந்த படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றத்தில் இருந்து கெஜ்ரிவால் வாபஸ் பெற்றுள்ளார். இம்மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் அமர்வை தலைமை நீதிபதி அமைத்திருந்தார். ஆனால், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் கைது தொடர்பாக உள்ள மனு மீதான விசாரணையை கருத்தில் கொண்டு, திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டதாக கெஜ்ரிவால் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.