India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், தமமுக தலைவர் ஜான்பாண்டியனும் முதல்முறையாக நேருக்கு நேர் மோதுகின்றனர். பாஜக ஆதரவாளரான கிருஷ்ணசாமி இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும், ஜான்பாண்டியன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து களம் காண்கின்றனர். ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2 தலைவர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் தென்காசி தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நைஜீரியாவில் கடத்தி சென்ற 300 பள்ளி குழந்தைகளையும் தீவிரவாதிகள் விடுவித்தனர். கதுனா மாகாணத்தில் உள்ள பள்ளிக்குள் கடந்த 7ஆம் தேதி புகுந்த தீவிரவாதிகள், 300 குழந்தைகளை கடத்திச் சென்றனர். இதையடுத்து அவர்களுடன் நைஜீரிய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவில், 300 பேரும் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர். 300 பேரை விடுவிக்க பணம் கொடுக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் மார்ச் 29ம் தேதி முதல் பரப்புரையை தொடங்குகிறார். அதன்படி, மார்ச் 29- ஈரோடு, மார்ச் 30- சேலம், ஏப்.2- திருச்சி, ஏப்.6- ஸ்ரீபெரும்புதூர், சென்னை, ஏப்.7- சென்னை, ஏப்.10 – மதுரை, ஏப்.11- தூத்துக்குடி, ஏப்.14- திருப்பூர், ஏப்.15- கோவை, ஏப்.16- பொள்ளாச்சி என மொத்தம் 11 நாட்களாக திமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

மோடி 10 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை; அவர் மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். விளம்பரத்தில் வேண்டுமானால் சாதனை செய்ததாக கூறலாம். ஆனால் நாட்டின் பொருளாதார அமைப்பு மிக மோசமான சூழ்நிலையில் உள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெறும். அதுவும் நெல்லையில் நயினார் நாகேந்திரன் மட்டும் வெற்றி பெறுவார் எனத் தெரிவித்தார்.

நீலகிரி தொகுதியில் மோடி ஜீயா, 2ஜியா? என போட்டி நிலவுவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தனித் தொகுதியான நீலகிரியில் திமுக எம்.பி ஆ.ராசாவை எதிர்த்து பாஜக சார்பில் எல்.முருகன் களம் காண்கிறார். அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகரான தனபாலின் மகன் யோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். முக்கிய நபர்கள் போட்டியிடுவதால் இத்தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.

5ஜி சேவை கட்டணத்தை உயர்த்த ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. 5ஜி மற்றும் 4ஜி சேவைகளுக்கு தற்போது ஒரே மாதிரியான கட்டணத்தை 2 நிறுவனங்களும் வசூலித்து வருகின்றன. இந்நிலையில் 5ஜி சேவைக்கு 5% முதல் 10% கட்டணம் உயர்த்தவும், 30% கூடுதல் டேட்டா அளிக்கவும் 2 நிறுவனங்களும் பரிசீலித்து வருகின்றன. இந்தத் தகவலால், 5ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘The GOAT’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் விஜய் உடன் பிரசாந்த், பிரபுதேவா என முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் இரட்டை வேடங்களில் விஜய் இருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின், மேக்கிங் புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு என்ன ஆனாது என்பது குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை. மருத்துவ அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது .

ஓபிஎஸ்சும், அவரின் மகனும் கேட்டுக் கொண்டதாலேயே தேனி தொகுதியில் தாம் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “மக்கள் செல்வன் என எனக்கு தேனி மக்கள்தான் பெயர் வைத்தனர். கடந்த மாதம் நான் தேனி சென்றபோது, அங்கு போட்டியிடும்படி ஓபிஎஸ்சும் அவரின் மகனும் கேட்டனர். அத்தொகுதி மக்களும் கேட்டனர். இதனால் தேனி தொகுதியில் போட்டியிட முடிவு செய்தேன்” என்றார்.

மக்களவைத் தேர்தலில் தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விசிக போட்டியிடுகிறது. இந்நிலையில், இன்று இந்த 4 மாநிலங்களுக்கான வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார். தொடர்ந்து, 4 மாநிலங்களில் 17 தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறிய அவர் தெலங்கானாவில் மட்டும் 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவித்தார். தமிழகத்தில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் விசிக போட்டியிடுகிறது.
Sorry, no posts matched your criteria.