news

News March 30, 2024

மன்சூர் அலிகானுக்கு பாலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு

image

மன்சூர் அலிகானுக்கு பாலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக சுயேச்சையாக போட்டியிடும் அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனக்கு விருப்ப சின்னமாக பலாப்பழம், மீன், விமானம் உள்ளிட்டவற்றை அவர் கேட்டிருந்த நிலையில், அவருக்கு பலாப்பழம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பலாப்பழத்தோடு பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.

News March 30, 2024

தினகரன் வீட்டு காவல் நாய்களாக இருந்தோம்

image

டிடிவி.தினகரன் வீட்டு காவல் நாய்களாக இருந்தது உண்மை தான் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக வேட்பாளர் நாராயண சாமியை ஆதரித்து பேசிய அவர், “என்னை தினகரன் காமெடியன் என்கிறார், நான் காமெடியனாக இருந்தாலும், ஹீரோ கூடவே இருப்பேன். வில்லனான தினகரன் விரைவில் ஃபெரா வழக்கில் சிறைக்கு போகப் போகிறார். தேர்தல் முடிவு தினகரனுக்கு நல்ல பாடமாக இருக்கும்” என்றார்.

News March 30, 2024

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி அதிகரிக்கலாம்

image

ஜம்மு காஷ்மீரில் பனி உருகுவது அதிகரித்துள்ளதோடு, மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், எல்லை கட்டுப்பாட்டுக் கோடு ஒட்டிய பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பி.எஸ்.எஃப் அதிகாரி அசோக் யாதவ் தெரிவித்துள்ளார். இருப்பினும், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் பாதுகாப்பு படையினர் விழிப்புடன் செயல்பட்டு, ஊடுருவல் முயற்சியை முறியடிப்பரெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

News March 30, 2024

பாஜகவை வீழ்த்த அரிய வாய்ப்பு

image

பாஜகவை தேர்தலில் வீழ்த்த வரலாறு ஒரு அரிய வாய்ப்பு தந்திருப்பதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், அநீதி இழைத்தவர்களுக்கு பாடம் புகட்ட ஒரு வரலாறு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், வாக்குக்கு பணம் கொடுக்கும் நிலை இன்றும் தொடர்வதாக வேதனை தெரிவித்த அவர், தாங்கள் மாற்று அரசியலை முன்வைத்து செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.

News March 30, 2024

தமிழ்நாட்டில் 1,090 மனுக்கள் ஏற்பு

image

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் தாக்கலான 1,749 மனுக்களில் 1,090 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக கரூரில் 56 மனுக்களும், குறைந்தபட்சமாக தஞ்சை, காஞ்சிபுரத்தில் தலா 13 மனுக்களும் ஏற்கப்பட்டிருக்கின்றன.

News March 30, 2024

ஆண்ட்ரியா படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்

image

ஆண்ட்ரியா நடித்துள்ள ‘கா: தி பாரஸ்ட்” படம் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தை தடை செய்ய வேண்டும் என சசி பிசினஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இப்படத்திற்காக தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

News March 30, 2024

விசிகவுக்கு பானைச் சின்னம் ஒதுக்கீடு

image

மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானைச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்த நிலையில், சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கும், விழுப்புரம் தொகுதியில் ரவிகுமாருக்கும் பானைச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

News March 30, 2024

ரூ.50 ஆயிரம் ரொக்க பண வரம்பில் மாற்றம்?

image

ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் எடுத்து செல்வது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “50 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுத்துச் செல்வதில் பல்வேறு பிரச்னைகள் நிலவுகிறது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. மத்திய தேர்தல் ஆணையத்திடம் இந்த விவகாரத்தை தெரிவித்துள்ளோம். அவர்கள் இதுதொடர்பாக முடிவெடுப்பார்கள்” என்றார்.

News March 30, 2024

மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம்

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பம்பரம் சின்னம் கேட்ட மதிமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தீப்பெட்டி சின்னம் கேட்ட நிலையில், அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

News March 30, 2024

ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

image

ஏப்ரல் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை வருகிறது. ஏப்.1 இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு சேவை கிடையாது. ஏப்.9 தெலுங்கு புத்தாண்டு, ஏப்.10 (அ) ஏப்.11 ரம்ஜான், ஏப்.19 தமிழகத்தில் தேர்தல். இத்துடன் (ஏப்.7, 14, 21, 28) ஞாயிற்றுக்கிழமைகள், 2வது (ஏப்.13), 4வது (ஏப்.27) சனிக்கிழமைகளில் விடுமுறையாகும். இதற்கேற்ப உங்கள் நிதி தேவையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

error: Content is protected !!