India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புஸ்ஸி ஆனந்தின் சவகாசம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு நல்லதல்ல என எஸ்.ஏ.சந்திரசேகர் எச்சரித்துள்ளார். புஸ்ஸி ஆனந்தின் நாடகத்தை அறியாத விஜய், அவருக்கு பக்கபலமாக செயல்படுவதாக குறிப்பிட்ட SAC, இப்படிப்பட்டவருடன் விஜய் இருந்தால் நாளை அவரது எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் ஒரு தந்தையாக தனக்கு இருக்கிறது என வேதனை தெரிவித்தார். SAC-யின் இந்தக் கருத்து தவெக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமலாக்கத்துறை காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரிய கெஜ்ரிவாலின் மனுவை டெல்லி ஐகோர்ட் நிராகரித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ED காவலில் உள்ளார். இந்த நிலையில், அமலாக்கத்துறை காவலில் இருந்து விலக்கு கோரிய அவரது மனுவை நிராகரித்த நீதிமன்றம், இது குறித்து ED பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்.3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஜெயலலிதா மகள் எனக் கூறிக்கொள்ளும் ஜெயலட்சுமி, மக்களவைத் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக்கொண்டு வலம் வரும் ஜெயலட்சுமி, தேனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், இரட்டை இலையுடன் கூடிய ரோஜா சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் பத்திர விவகாரம் உலகளவிலான மிகப்பெரிய ஊழல் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் பாஜக அரசுக்கு இது மிகப்பெரிய தண்டனையாக அமையும் எனக் கருதுவதாக கூறியுள்ளார். மேலும், இந்த பிரச்னை மத்திய அரசைக் கடந்து மக்களிடம் அதிவேகமாக சென்றடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டிவி சின்னத்தில் போட்டியிட விரும்பிய நிலையில், அந்த சின்னம் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்ட நிலையில், தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னத்தை ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதிமுகவின் ஆஸ்தான சின்னமான பம்பரத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து மதிமுக நீதிமன்றத்தை நாடிய நிலையில் அதுவும் பலனளிக்கவில்லை. ஆகையால், இந்த இரண்டு சின்னங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.

மும்பை – ஐதராபாத் இடையேயான 8ஆவது ஐபிஎல் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் ஐதராபாத் அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளுமே ஒரு வெற்றிகூட பெறவில்லை. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

நெல்லை தொகுதியில் போட்டியிட முன்னாள் MP ராமசுப்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ள சம்பவம் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 2009-14 வரை நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்.பி-யாக இருந்தவர் ராமசுப்பு. இந்தத் தேர்தலில் போட்டியிட சீட் தராததால் அதிருப்தியில் இருந்த அவர், சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான்தான் காங்கிரஸ்காரன் எனக் கூறினார்.

டீசல் விலை அதிகரித்ததே விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அத்தியாவசியப் பொருட்கள் 40% அளவுக்கு விலையேற்றம் கண்டதாக குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்ததாகக் கூறினார். மேலும், வீட்டு வரி, தண்ணீர் வரி, குப்பை வரி என திமுக அரசு அனைத்திற்கும் வரி விதிப்பதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போவதாக தகவல் கசிந்துள்ளது. இந்தி திணிப்பை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், படத்தை தொடங்குவது சரியாக இருக்காது என படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.