news

News August 15, 2025

சுதந்திர தின உரையில் RSS-ஐ புகழ்வதா? ஓவைசி காட்டம்

image

சுதந்திர தின உரையில் RSS-ஐ புகழ்ந்ததன் மூலம், PM மோடி விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக ஐதராபாத் MP ஓவைசி விமர்சித்துள்ளார். விடுதலை போராட்டத்தில் RSS எந்த பங்களிப்பையும் செய்யவில்லை எனவும், ஆங்கிலேயர்களுக்கு RSS சேவகம் செய்ததாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், சீனாவை விட சங் பரிவாரங்களின் வெறுப்பும், பிரித்தாளும் கொள்கையும் தான் நமது மிகப்பெரிய எதிரிகள் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 15, 2025

ஆரவாரத்துடன் வெளியான வார் 2வுக்கு பெரும் அடி

image

ரஜினியின் கூலியுடன் களமிறங்கிய ‘வார் – 2’ படம் முதல் நாளில் ₹52.5 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘வார் 2’ அதன் முதல் பாக வசூலைக்(₹53 கோடி) கூட தொடவில்லை. படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் குறையும் என கூறப்படுகிறது. அதேவேளையில், ரஜினியின் <<17409522>>‘கூலி’, ₹140 கோடி<<>> வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 15, 2025

நான் ஒரு சுவர் போல நேராக நிற்பேன்: PM உறுதி

image

விவசாயிகள், மீனவர்கள் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என அமெரிக்க வரிவிதிப்பை PM மோடி எதிர்த்துள்ளார். நான் சுவர் போல் நேராக நிற்பேன், வளைந்து கொடுக்க மாட்டேன் என டிரம்ப்பை அவர் மறைமுகமாக சாடியுள்ளார். மேலும், நமது தேவைகளுக்காக பிற நாடுகளை சார்ந்திருப்பது என்பது அழிவுக்கான சான்று எனவும், தற்சார்பே நமது தேச நலனை காக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 15, 2025

மானியத்துடன் கடன் வேண்டுமா?.. இதை பண்ணுங்க

image

புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் மையம் (District Industries Centre – DIC) உருவாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேனேஜரை அணுகி தொழில் தொடங்க வங்கிகள் மூலம் மானியத்துடன் கடன் பெறலாம். நாம் தொடங்கும் தொழிலை பொறுத்து ₹10 லட்சம் முதல் அதிகபட்சமாக ₹5 கோடி வரை கடன் பெறலாம். உதாரணமாக, ₹10 லட்சம் கடன் பெற்றால் அதில் மானியமாக ₹3.5 லட்சத்தை அரசே செலுத்தும். SHARE IT

News August 15, 2025

பள்ளியில் ஆபாசப் படம்… மாணவர்கள் அதிர்ச்சி

image

ம.பி.,யில் பள்ளி ஒன்றில் ஆபாசப் படம் காட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையின் LED திரையில் திடீரென ஆபாசப்படம் ஒளிபரப்பாகியுள்ளது. அப்போது 13 மாணவர்கள் இருந்துள்ளனர். ஒருவர் அதை போனில் ரெக்கார்ட் செய்ய, அது சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது. இது 6 மாதங்களுக்கு முன் நடந்ததாகவும், விஷமி ஒருவர் இதை பரப்பியதாகவும் பள்ளி தரப்பில் கூறினாலும், நடந்தது சாதாரண தவறில்லையே?

News August 15, 2025

சாதனை தாய் மறைந்தார்

image

அமேசான் நிறுவனரும் உலகின் பெரும் கோடீஸ்வரருமான ஜெப் பெசோஸின் தாய் ஜாக்கி பெசோஸ்(78) காலமானார். முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, கடைசியாக தான் ஆரம்பித்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தையும் ஜெப் மூட முடிவெடுத்தபோது, இதோ நாங்கள் இருக்கிறோம் என்று கூறி, தங்கள் வாழ்நாள் சேமிப்பு மொத்தத்தையும் மகனுக்கு கொடுத்தனர் ஜாக்கி தம்பதி. இன்று உலகை ஆளும் நிறுவனமாக அமேசான் வளர்ந்து நிற்க அதுவே மூலதனமானது.

News August 15, 2025

இசை புயலின் 33 ஆண்டுகாலப் பயணம்

image

சினிமாவில் 33 ஆண்டுகால பயணத்தை ஏ.ஆர்.ரஹ்மான் நிறைவு செய்துள்ளார். 1992 ஆக., 15-ம் தேதி ‘ரோஜா’ படம் மூலம் சினிமாவில் அவர் அறிமுகமானார். இளையராஜா எனும் ஜாம்பவான் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில், தனது தனித்துவமான இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். ஆஸ்கர் விருதில் தொடங்கி விருதுகள் வரை வென்றவர். பல மொழிகளில் இசையமைத்தாலும் தன்னை தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்பவர். பயணம் தொடரட்டும் இசை நாயகனே.

News August 15, 2025

இந்தியாவை வாழ்த்திய அமெரிக்கா, ரஷ்யா

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிவியல், பொருளாதாரம் என பல துறைகளில் சாதித்து உலகளவில் மதிப்புமிக்க நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும், இந்தியா – ரஷ்யா இடையேயான உறவு மேலும் மேம்பட விரும்புவதாகவும் அவர் வாழ்த்தியுள்ளார். அதேபோல், உலகின் மிகப்பெரிய பெரிய ஜனநாயக நாட்டுடனான தங்களது உறவு மதிப்புமிக்கது என அமெரிக்காவும் வாழ்த்து தெரிவித்துள்ளது.

News August 15, 2025

தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளா இவை?

image

Pan India, கேமியோ, ₹1,000 கோடி வசூல் எதிர்பார்ப்பு ஆகியவையே தற்போதைய தமிழ் சினிமாவின் சாபக்கேடு என திரை விமர்சகர்கள் கூறுகின்றனர். முன்பு அனைத்து முன்னணி ஹீரோக்களும் ஆக்‌ஷன் படங்கள் நடித்தாலும், அதில் உள்ள திரைக்கதை மக்களால் ரசிக்கப்பட்டது. இன்றோ, ஆக்‌ஷன் மட்டுமே உண்டு, கதை இல்லை என ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர். இருப்பினும், திரை ரசனை ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறும் என்கின்றனர். உங்கள் கருத்து என்ன?

News August 15, 2025

புதிய காற்றழுத்தம்.. ஆகஸ்ட் 21 வரை மழை நீடிக்கும்..!

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார், ஊத்துக்கோட்டையில் அதிகபட்சமாக தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையிலும் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்புள்ளதாம். வெளியே செல்லும்போது கவனம் தேவை நண்பர்களே!

error: Content is protected !!