India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியா முழுவதும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “40 – 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால், ‘ஹீட் ஸ்ட்ரோக்’ அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, குழந்தைகள், முதியோரின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். பொது சுகாதார முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

PhonePay பயனர்கள் இனி, சிங்கப்பூரிலும் UPI மூலம் பணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டு சுற்றுலா வாரியத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, PhonePay பயனர்கள் தங்கள் இந்திய வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக இரு நாடுகளுக்கும் இடையே வெளிநாட்டு பரிவர்த்தனைகளை நொடியில் மேற்கொள்ள முடியும் எனத் தெரிகிறது.

அருண் விஜய் நடிக்கவுள்ள புதிய த்ரில்லர் படத்தில், அவருக்கு ஜோடியாக 2 பேர் நடிக்கவுள்ளனர். மான் கராத்தே, கெத்து ஆகிய படங்களை இயக்கிய கிருஷ் திருக்குமரன், புதிதாக இயக்கவுள்ள இப் படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி ஆகிய 2 பேர் நடிக்கவுள்ளனர். படத்துக்காக தனது உடல் எடையை அருண் விஜய் குறைத்து வருகிறார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலையொட்டி, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிக்கின்றனர் . ஏப்.6 வரை 3 நாட்களுக்கு காலை 7 – மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது. தபால் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்.8ஆம் தேதி மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 90% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பொய் பேசுகிறார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். சிலர் அதிமுகவை அழிக்க துடிக்கின்றனர். எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது எனக் கூறிய அவர், திமுக ஆட்சியில் அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடப்படுகிறது. நாங்கள்( அதிமுக) ஆட்சிக்கு வந்ததும் திமுக மீது வழக்குப் போடுவோம் என எச்சரித்தார்.

ஐபிஎல்லில் 100 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் அதிக முறை தோற்ற அணி என்ற மோசமான சாதனையை டெல்லி அணி படைத்துள்ளது. கொல்கத்தா அணியிடம் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி நேற்று தோற்றது. இதுபோல 100 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் அந்த அணி தோற்பது இது 3வது முறையாகும். இதன் மூலம் 100 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் அதிகமுறை தோற்ற அணி என்ற சாதனையை ஆர்சிபியுடன் பகிர்ந்தது.

இந்தியாவில் 2 – 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக உற்பத்தி ஆலையை அமைக்க உகந்த மாநிலத்தைத் தேர்வு செய்ய, இந்தியாவுக்கு தேர்வுக் குழுவை அனுப்புகிறது டெஸ்லா நிறுவனம். இம்மாத இறுதியில் அமெரிக்காவில் இருந்து வரும் இக்குழு, தமிழ்நாடு, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

நீரழிவு, உடல் பருமன் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் காலையில் மாவுச் சத்து நிறைந்த இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மாறாக பழைய சாதத்துடன் சிறிது தயிர் கலந்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. காலையில் அதிக அளவில் உணவு எடுத்துக் கொள்ள தேவையில்லை. அதேநேரம் காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது எனவும் அறிவுறுத்துகின்றனர்.

ஆரணியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பாஜகவுடன் கூட்டணி சேர மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், தேமுதிகவின் வங்கிக் கணக்குகளை முடக்கி அச்சுறுத்தியதாகவும் பிரேமலதா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். முன்னதாக பாஜக உடன் தேமுதிக கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.

கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து போன விவகாரம் என்று இலங்கை தெரிவித்துள்ளது. கச்சத்தீவு 1974ஆம் ஆண்டில் இலங்கைக்கு அளிக்கப்பட்டது குறித்து இந்தியாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதை திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்து போன விவகாரம், அதை மீண்டும் பேச வேண்டாம் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் சாப்ரி குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.