India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெகவின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. அதில், பொதுச்செயலாளர் ஆனந்த்தை வருங்கால CM என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த போஸ்டருக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தவெகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், நேரடியாக அரசியல் செய்யுமாறும், முதுகில் குத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தையும், சிபிஎம் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான இரா.சுப்புராம் (79) காலமானார். உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. மதுரை ஹார்விபட்டியில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சுப்புராம் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் போதைப்பொருள் பயன்படுத்தும் 10 பேருக்கு AIDS தொற்று கண்டறியப்பட்டுள்ளது. HIV தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள பாலியல் தொழிலாளிகள், போதைப்பொருள் பயன்படுத்துவோரிடம் மலப்புரம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் நடத்திய வழக்கமான பரிசோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தும் குழுவைச் சேர்ந்தவர்கள் ஒரே ஊசியைப் பயன்படுத்தியதே தொற்று பரவக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. போதை வேண்டாமே..!
பெரும் பிரச்னையைத் தொடர்ந்து விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படம் நேற்று மாலை முதல் திரையிடப்பட்டது. தில், தூள், சாமி போன்ற ஆக்ஷன் ரோலில் சியான் மாஸ் காட்டியதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். தாமதமாக வெளியாகினாலும், முதல் நாளில் ₹3.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தொடர் விடுமுறை வருவதால், படத்தின் வசூல் அதிகரிக்கும் என்கிறார்கள். நீங்க படம் பாத்துட்டீங்களா.. எப்படி இருக்கு?
புதிய கல்விக் கொள்கையின்படி, CBSE பள்ளிகளில் இந்தாண்டு 4 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான NCERT பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பால் வாடிகா(Bal vatika), 1, 2, 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் மாற்றப்பட்டன. இந்தாண்டு 4, 5, 7 மற்றும் 7ம் வகுப்புகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
‘சிறகடிக்க ஆசை’ நடிகையின் பிரைவேட் வீடியோ என ஒன்று வெளியானது. இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அந்த நடிகை, மற்றவர்களுக்கு இது ஜோக் என்றாலும், தனக்கு மிகவும் சோதனையாக கட்டம் என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இதனை ஒரு AI deepfake வீடியோ எனக் குறிப்பிட்டு, ‘நானும் ஒரு பெண் தானே’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார். தயவு செய்து இது போன்ற வீடியோக்களை ஷேர் செய்யாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், அதில் சில தவறுகள் செய்தால் அது இதயத்தைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். அதன்படி, *மிக வேகமாக நடப்பது *வார்ம் – அப் செய்யாமல் நடப்பது *குனிந்து நடப்பது *நடைபயிற்சிக்கு முன்/பின் தண்ணீர் அருந்தாமல் இருப்பது *அதிகமாக சாப்பிடுவது *மாசுபட்ட பகுதிகளில் நடப்பது ஆகிய தவறுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மற்ற வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் தற்போது ₹17 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை, ₹19ஆக உயர்த்த RBI அனுமதி அளித்துள்ளது. பேலன்ஸ் செக் செய்வதற்கான கட்டணம் ₹6இல் இருந்து ₹7ஆக உயர்த்தப்படவுள்ளது. இதனால், ATM சேவையை குறைவாக கொண்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பாதிக்கப்படுவர். இந்தக் கட்டண உயர்வு மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
TVK முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் சூழலில், விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. திமுக, பாஜகவை விமர்சித்து வரும் விஜய், இன்றும் அதனை தொடருவார் என்கின்றனர். அதே நேரத்தில், அதிமுக, பாஜக கூட்டணியை நோக்கி நகர்வதாக கூறப்படும் சூழலில், இனி அதிமுகவையும் அட்டாக் செய்வார் எனக் கூறப்படுகிறது. பொருத்திருந்து பார்ப்போம்!. விஜய் என்ன பேசுவார் என நினைக்குறீங்க?
IPL ஜுரம் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டு விட்டது. டெய்லி மேட்ச் பார்ப்பதை வழக்கமாக கொள்ளும் பலர், ஒரு மேட்சின் முடிவை, ரொம்ப சீரியஸாகவும் எடுத்துக் கொள்கின்றனர். அது மூளையில் மகிழ்ச்சி, மன அழுத்த ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தங்களின் டீம் தோற்றுவிட்டால், பலரும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். இந்த வெற்றி தோல்விகள் தற்காலிகமானது தான் என்பதை உணருங்கள்.
Sorry, no posts matched your criteria.