India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற KKR அணி புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி ஆடிய 3 போட்டியில் 1 வெற்றியுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

ராஜ்யசபா எம்.பி.யாக 33 ஆண்டுகள் பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு பெற்றார். 1991 – 96ஆம் ஆண்டு வரை மத்திய நிதியமைச்சராக இருந்த இவர், தாராள மயமாக்கல் கொள்கையை அறிமுகம் செய்தார். 2004 – 2014ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் 2 முறை பிரதமராக இருந்த இவர், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், குழந்தை கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களை கொண்டு வந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் வெயிலில் மயங்கி விழுந்து ஜோஸ்பின் மேரி (40) என்ற பெண் உயிரிழந்துள்ளார். இந்த ஆண்டுக்கான கோடை காலம் அதிக வெப்பத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல்லில் இன்று வெயில் 39 டிகிரிக்கு மேல் சுட்டெரித்தது. இந்த வெயிலில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்லவும்.

டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட பிரபுதேவா இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய்யின் “The GOAT” படக்குழுவினர் பிரபுதேவாவிற்கு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்படத்தில் பிரபுதேவாவும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

நாமக்கல்லில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ₹15 கோடி கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சந்திரசேகர் என்பவர் வீட்டில், பணப்பட்டுவாடா செய்வதாக வந்த தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் – டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கிரெடிட் கார்டு பயன்பாடு 11% அதிகரித்து ரூ.9.30 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. மொத்த பரிவர்த்தனைகள் 21% அதிகரித்து 178 கோடியாக இருந்தது. அதே நேரம் ஏடிஎம் கார்டு பயன்பாடு 34% சரிந்து 115 கோடியாக இருந்துள்ளது. கடந்த டிசம்பரில் மட்டும் 9.79 கோடி புதிய கிரெடிட் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 71% தனியார் வங்கி கார்டுகள் ஆகும்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவிற்கு கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை இபிஎஸ் நியமித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதிக்கு மலேசியா எஸ்.பாண்டியன், நிறைகுளத்தான், சாமிநாதன், சிதம்பரம் தொகுதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், ராஜமாணிக்கம், வடசென்னை தொகுதிக்கு எம்எல்ஏ சீனிவாசன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

காயம் காரணமாக லக்னோ அணி வீரர் ஷிவம் மாவி, எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நீங்கள் காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவீர்கள் என LSG அணி அவருக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும் இவருக்கு மாற்று வீரரை LSG இதுவரை அறிவிக்கவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் LSG அணி ஷிவம் மாவியை ரூ.6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விறுவிறுப்பாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஜல்பைகுரியில் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அங்குள்ள டீ கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் உப்பின் பங்கு அதிகம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கியமாக உள்ள இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 2 கிராமுக்கும் குறைவாகவே உப்பு தேவைப்படுகிறது. ஒவ்வொரு கிராம் அதிகப்படியான உப்பும் உடல் பருமன் ஏற்படும் அபாயத்தை 15% அதிகரிக்கிறது.
Sorry, no posts matched your criteria.