India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (மார்ச்.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஐபிஎல் தொடரில் எப்பவுமே ஆச்சரியமான விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கும். மெகா ஏலத்தில் விலை போகாத வீரர்தான், இன்று பர்பிள் கேப்-க்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார். லக்னோ வீரர் மோசின் கான் காயமடைந்ததால், அவருக்கு மாற்றாக ஷர்துல் தாகூர் அணியில் இணைந்தார். 2 போட்டிகளில் விளையாடிய அவர், 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியும் அவர் சாதனை படைத்துள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோஜின் ஆத்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் இளையராஜா மோட்ச தீபம் ஏற்றியுள்ளார். இறந்தவர்கள் நம்முடைய மனதில் எப்போதும் நீங்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணி ஏற்றப்படுவதுதான் மோட்ச தீபம் ஆகும்.
மிட்டாய் வாங்க கடைக்குச் சென்றபோது தொலைந்த மகன், 17 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பி இருப்பது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நியூ டெல்லியைச் சேர்ந்த ஆரிஃப் என்ற 6 வயது சிறுவன், 2008-ம் ஆண்டு காணாமல் போனதாக தெரிகிறது. தற்போது 23 வயதான அவர், பஞ்ச்குலா போலீஸ் உதவியுடன் மீண்டும் பெற்றோருடன் சேர்ந்துள்ளார். மகனை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர்விட்ட பெற்றோர், சந்தோஷத்தில் திளைத்துள்ளனர்.
➤மேஷம் – உயர்வு ➤ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – சுகம் ➤கடகம் – செலவு ➤சிம்மம் – பிரீதி ➤கன்னி – போட்டி ➤துலாம் – நிறைவு ➤விருச்சிகம் – ஆதரவு ➤தனுசு – கோபம் ➤மகரம் – பாராட்டு ➤கும்பம் – அமைதி ➤மீனம் – சுகம்.
ஜீவா, அர்ஜுன் நடித்துள்ள அட்வென்சர் படமான ‘அகத்தியா’ மற்றும் ஆதி, சிம்ரன் நடித்துள்ள த்ரில்லர் படமான ‘சப்தம்’ நாளை அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. பாலாஜி முருகதாஸ், ரச்சிதா நடித்துள்ள ‘ஃபயர்’ நாளை டெண்ட்கொட்டா, ஜீ5 தளத்தில் ரிலீசாகிறது. அதேபோல் சிங்கம்புலி நடித்துள்ள ‘செருப்புகள் ஜாக்கிரதை’ நாளை ZEE5 தளத்தில் வெளியாகிறது. விமல் நடித்துள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ நாளை ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீசாகிறது.
CBI நடைமுறையில் மாற்றம் கொண்டு வர நாடாளுமன்ற நிலைக்குழு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களின் ஒப்புதலை பெறாமலேயே, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒரு சட்டத்தை முன்மொழிந்துள்ளது. அதேபோல், UPSC, SSC போன்று CBIக்கும் தனியாக ஒரு தேர்வு, ஆட்சேர்ப்பு முறையை உருவாக்கவும், சைபர் க்ரைம், ஃபாரன்ஸிக்ஸ் துறையில் லேட்டரல் எண்ட்ரி மூலம் நிபுணர்களை நியமிக்கவும் பரிந்துரைத்துள்ளது.
வாழ்நாளில் சராசரியாக அதிக துணைவர்கள் (பாலியல் உறவில்) கொண்டுள்ளதில், தமிழகத்தில் ஆண்களை(1.8 பேர்) விட பெண்கள்(2.4 பேர்) முன்னிலையில் உள்ளதாக மத்திய அரசின் NFHS ஆய்வு (2019-21) கூறுகிறது. இந்திய அளவில் ஆண்கள் சராசரியாக -1.5, பெண்கள் -1.8 பாலியல் துணைவர்களை கொண்டுள்ளனர். மேலும், நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் தான், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வது அதிகமாக உள்ளதாம். உங்கள் கருத்து?
காங். பலவீனமாக இருந்தால் கூட்டணி கட்சிகள் எப்படி மதிக்கும் என நிர்வாகிகளிடம் பேசிய ராகுல் காந்தி ஆதங்கப்பட்டுள்ளார். பீகார் மாநில காங். நிர்வாகிகளுடன் பேசிய அவர், ஒற்றுமையுடன் செயல்பட்டு, கடினமாக உழைத்து வரும் தேர்தலில் அதிக இடங்களில் வெல்ல வேண்டும் எனவும், அப்படி செய்தால்தான் மரியாதை கிடைக்கும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், பலவீனமானவர்களை யாரும் மதிக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
SRH அணிக்கு எதிரான போட்டியில் சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்ட LSG வீரர் பூரன், 18 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இதன்மூலம், இந்த சீசனில் அதிவேக அரைசதமடித்தவர் என்ன சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். 26 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்த அவர், கம்மின்ஸ் ஓவரில் அவுட் ஆனார். வெல்லப் போவது யார்? உங்கள் கணிப்பு என்ன?
Sorry, no posts matched your criteria.