news

News March 28, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது ▶எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள் ▶ஒன்றே குலம், ஒருவனே தேவன் ▶ விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிக கேடு ▶உலகின் பிளவு குடும்பத்தில் ஆரம்பிக்கிறது.

News March 28, 2025

காம சிந்தனைகளால் ஏற்படும் வஞ்சித தோஷம் நீங்க…

image

ஜாதகத்தில் சந்திரன் நிலை கெட்டிருந்தாலும், காம சிந்தனைகளால் மதி திசைமாறி நடப்பதாலும் வஞ்சித தோஷம் ஏற்படுகிறது. அதை போக்க வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, சிவப்பு நிற வஸ்திரம் அனைத்து 48 தீபங்களை ஏற்றி அம்மனை வழிபட்டு 11 ஏழைப் பெண்களுக்கு உணவிட்டு, சேலை தானம் அளித்தால் வஞ்சித தோஷம் விலகும் என ஐதீகம்.

News March 28, 2025

மியாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் டிமித்ரோவ்

image

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில், அவர் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார். இதில், டிமித்ரோவ் 6-7 (6-8), 6-4, 7-6 (7-3) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

News March 28, 2025

மார்ச் 28: வரலாற்றில் இன்று

image

193 – உரோமப் பேரரசர் பெர்ட்டினாக்ஸ் பிரடோரியன் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
1970 – துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,086 பேர் உயிரிழந்தனர்.
1910 – கடல் விமானத்தில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி பெற்றார்.
2005 – இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

News March 28, 2025

வீக் எண்ட் மது குடிப்பவரா நீங்கள்?

image

வார இறுதியில் மது குடிப்பது என்பது இன்று பலரது பொழுதுபோக்காக மாறிவிட்டது. இப்படி, வார இறுதியில் குடிக்கும் பழக்கமும் பல தீமைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது வார நாட்களில் குடிக்கும் பழக்கம் இல்லாததால், வார இறுதியில் குடிப்பது சராசரியானது என்ற நினைப்பில் அதிகளவு மதுவை நுகர்கிறார்களாம். இதனால், மன உளைச்சல், அலுவலக பொறுப்பை நிர்வகிப்பதில் சிரமம் என பல பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.

News March 28, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 219
▶குறள்:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
▶பொருள்: ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

News March 28, 2025

இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுறீங்களா?

image

◾நீங்கள் தூங்க சென்ற பிறகு போன், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். ◾படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறிது உடற்பயிற்சி செய்வது நல்லது. ◾தூங்கும் முன் பல் துலக்குவது மற்றும் ஃபேஷியல் செய்வது உங்களுக்கு ஃப்ரெஷான தூக்கத்தை தரும். ◾நீங்கள் தூங்கும் இடத்தில் எந்தவித இரைச்சலும், தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும். ◾சிந்தனை சிதறாமல் இருக்க மெலடி பாடல்களை கேட்கலாம்.

News March 28, 2025

இன்றைய (மார்ச்.28) நல்ல நேரம்

image

▶மார்ச் – 28 ▶பங்குனி – 14 ▶கிழமை: வெள்ளி
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM
▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM
▶குளிகை: 07:30 AM – 09:00 AM
▶திதி: சதுர்த்தசி ▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: ஆயில்யம்
▶நட்சத்திரம் : பூரட்டாதி இ 9.44

News March 28, 2025

ரம்ஜான் பண்டிகை: ஹரியானா அரசு அதிரடி உத்தரவு

image

ஹரியானா அரசின் விடுமுறைப் பட்டியலில் இருந்து ரம்ஜான் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் அம்மாநிலத்தில், நடப்பு ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார். இதற்கு அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. பாஜக ஆளும் மற்ற மாநிலங்களிலும் இந்த நடைமுறை அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 28, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச்.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!